Sunday, February 21, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1) அந்த டாக்டருக்கு வாஸ்து சாஸ்திரமும் தெரியும்னு எப்படி சொல்ற
நோயாளிக்கு ஆபரேஷன் செய்யறப்போ லிவர் இருக்கிற இடம் சரியில்லை அதை 'லங்க்ஸ்' கிட்ட மாத்திடணும்னு சொல்றாரே!!

2)நல்ல மழையில தலைவர் ஏன் பக்கத்தில இருக்கற பள்ளிக்கூடத்திற்குப் போகணும்னு சொல்றார்
யாரோ அவரை மழைக்குக் கூட பள்ளிக்கூட நிழல்ல ஒதுங்காதவர்னு சொல்லிட்டாங்களாம் அதனாலத்தான்

3)அந்த broadband நிறுவனம் முன்னால அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கார்
ஆயிரம் ரூபாய்க்கு பில் வந்திருக்காம்..
அது அதிகம்னு சொல்றாரா
இல்லை அவர் வீட்ல அந்தக் கம்பெனியோட broadband இணைப்பேக் கிடையாதாம்.

4)அங்கே நடந்த கொள்ளைக்கு மோப்ப நாய்க்கு பதிலா போலீஸ் ஏன் எறும்புப் படையைக் கூட்டிட்டு வந்திருக்காங்க
கொள்ளைப் போனது பத்து மூட்டை சர்க்கரை..அதனால்தான்

5)அந்தக் கல்யாணம் ரயில்வே போர்ட்டர் வீட்டுக் கல்யாணம்னு எப்படி சொல்ற
முதல் பந்தியில சாப்பிட டவலைப் போட்டு இடம் பிடிச்சு அந்த இடத்தை அஞ்சு ரூபாய்க்கு விற்கிறாரே

6)டாக்டர் ஒரு மாசமா தூக்கமே இல்லை
இவ்வளவு நாள் என்ன செஞ்சீங்க...முதல்லயே வரதுக்கு என்ன
நீங்க பர்மனென்டா தூங்க வைச்சுட்டா என்ன பண்றதுன்னு தான் வரலே

13 comments:

பிரபாகர் said...

டாக்டர், எறும்புப்படை, மறுபடியும் டாக்டர் ஜோக்ஸ் அருமை அய்யா!

பிரபாகர்.

DREAMER said...

3, 5, 6 மூன்றும் கலக்கல்

-
ட்ரீமர்

vasu balaji said...

சான்ஸே இல்லை:)) அசத்தல் சார்

Anonymous said...

டாக்டர் ஜோக்ஸ் ரெண்டும் அருமை

மங்குனி அமைச்சர் said...

சார் 1 & 3 சூப்பர் மதத்த கொஞ்சம் மாதி யோசிங்க

goma said...

லக லக லக

மாதேவி said...

:)))

கண்ணகி said...

சிரிச்சுட்டோம்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பிரபாகர்
DREAMER
வானம்பாடிகள்
சின்ன அம்மிணி
மங்குனி அமைச்சர்
goma
மாதேவி
வித்யா
கண்ணகி

Chitra said...

4)அங்கே நடந்த கொள்ளைக்கு மோப்ப நாய்க்கு பதிலா போலீஸ் ஏன் எறும்புப் படையைக் கூட்டிட்டு வந்திருக்காங்க
கொள்ளைப் போனது பத்து மூட்டை சர்க்கரை..அதனால்தான்


.........ha,ha,ha,ha..... good ones!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Chitra

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அந்த broadband நிறுவனம் முன்னால அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கார்
ஆயிரம் ரூபாய்க்கு பில் வந்திருக்காம்..
அது அதிகம்னு சொல்றாரா
இல்லை அவர் வீட்ல அந்தக் கம்பெனியோட broadband இணைப்பேக் கிடையாதாம்.//


ஏதாவது எஸ், எம், எஸ் ஓப்பன் செய்ததலி தானே ஆக்டிவேட் இருக்க வாய்ப்பு இருக்கிறது..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து