Wednesday, February 24, 2010

கிரிக்கெட் தொடர் பதிவு...

நர்சிம் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.அவருக்கு என் நன்றி..

பதிவை ஆரம்பிக்கும் முன் உங்களுக்கு ஒரு சிறு புதிர்..


இந்த கிரிக்கெட் வீரர் நாற்பத்திரெண்டு ஓட்டங்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன்..நாற்பத்தேழு ஓட்டங்கள் எடுத்து தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார்.அந்த மைதானத்தில் இதுவரை இவர் சாதனை முறிக்கப்படவில்லை..இனியும் முறிக்கப்படாது..அந்த வீரர் யார்? அந்த மைதானம் எது? இதற்கான விடை உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கிரிக்கெட் புலி என ஒப்புக் கொள்கிறேன்..விடை தெரியாதவர்களுக்கு பதிவின் முடிவில் விடை.

இனி தொடர் பதிவு..

1)பிடித்த கிரிக்கெட் வீரர்கள்- (சந்தேகமில்லாமல்) சச்சின் தான்,அடுத்து சந்தர்பால் சொல்லலாம்

2)பிடிக்காத கிரிக்கெட் வீரர் - மனோஜ் பிரபாகர், மியான்தாத்,ஹர்பஜன்

3)பிடித்த வேகப் பந்து வீச்சாளர்- கர்ட்னி வால்ஷ்

4)பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்- யாருமில்லை

5)பிடித்த சுழல் பந்து வீச்சாளர்-அப்துல் காதர் ,ஷேன் வார்ன், முரளிதரன்

6)பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்- மணிந்தர் சிங்

7)பிடித்த வலது கை துடுப்பாட்ட வீரர்- சச்சின்,ரிக்கி பாண்டிங், வெங்சர்கார்

8)பிடிக்காத வலது கை துடுப்பாட்ட வீரர்- மியான்தாத்

9)பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்- ஆலன் பார்டெர், வடேகர்

10)பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்-வினோத் காம்ப்ளி (திறமை இருந்தும்..நம்பிக்கையின்றி,முயற்சி யின்றி அழிந்தவர்)

11)பிடித்த களத்தடுப்பாளர்-ஒரே சமயம் அணியில் இருந்த அபீத் அலி, சோல்கார், வெங்கட் மற்றும் வடேகர்

12)பிடிக்காத களத்தடுப்பாளர்- பிரசன்னா

13)பிடித்த ஆல்ரவுண்டர்- சச்சின்,ஜெய சூர்யா, ரிச்சர்ட்ஸ்,லாரா

14)பிடித்த நடுவர்- ஆடும் அணியில் தங்களையும் ஒரு அணிக்கு ஆடுபவர் என எண்ணாத அனைத்து நடுவர்களும்

15)பிடிக்காத நடுவர்- ஆடும் அணியில் ஒரு அணியில் தங்களையும் அந்த அணி வீரர் என எண்ணுபவர்களை

16)பிடித்த நேர்முக வர்ணனையாளர்- இன்று ரவி சாஸ்திரி
அன்று ரேடியோ வர்ணனையாளர் ஆனந்த ராவ்..(ஆங்கிலத்தில்)(அப்போது ரேடியோவில் ஹிந்தி வர்ணனை வரும்போது..காஃபீ ஏக் ரன்..காஃபி தோ ரன் என்பார்

கள்..இவர்கள் எவ்வளவுதரம் காஃபி சாப்பிடுவார்கள் என எண்ணியதுண்டு :-)))

17)பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்- சித்து

18)பிடித்த அணி- இந்தியா என்று சொல்ல ஆசைதான்..இருந்தாலும்..அமைதி..ஸ்போர்ட்ஸ் மென்ஷிப் இவற்றை வைத்து வெஸ்ட் இண்டீஸ் பிடிக்கும்

19)பிடிக்காத அணி- ஆஸ்திரேலியா (காரணம் தேவையில்லை என எண்ணுகிறேன்)

20)விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கான போட்டி- ஸ்ரீலங்கா..இந்தியா

21)விரும்பாத அணிகளுக்கான போட்டி- கனடா..ஆஸ்திரேலியா

22)பிடித்த அணித்தலைவர்- ரிச்சர்ட்ஸ், வடேகர்

23)பிடிக்காத அணித்தலைவர்- ரிக்கி பாண்டிங்

24)பிடித்த போட்டிவகை- ஒன் டே மேட்ச்

25)பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- கிரீனிட்ஜ் மற்றும் ஹைன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

26)பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- ரவிசாஸ்திரி.. மனோஜ் பிரபாகர் போன்றவர்கள் ரெகுலர் ஓபனர்ஸுடன் ஓபன் செய்து விரைவில் அவுட் ஆவது பிடிக்காது

27)சிறந்த டெஸ்ட் வீரர்- சச்ச்ன்,திராவிட்,லாரா

28)கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்- கபில்தேவ்...சோபர்ஸ்..ரிச்சர்ட்ஸ்

ஒரு தகவல்-
1978ல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்ற போது ஒரு போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அமீன் லக்கானி இரு இன்னிங்ஸிலும் 'ஹாட்ரிக்' எடுத்தார்.இதில் என்ன சிறப்பு என்றால் ,இரு இன்னி
ங்ஸிலும் அவர், அதே ஆட்டக்காரர்களை வீழ்த்தினார்.அந்த ஆட்டக்காரர்கள் மொகிந்தர் (ஸ்கோர் 11 அண்ட் 12),கிர்மானி 0 & 0, கபில்தேவ் 0 & 0

முதலில் சொன்ன புதிருக்கான விடை - ஹி..ஹி..ஹி..அது நானே தான்.அம்பத்தூர் வெங்கடாபுரத்திற்கும் வரதராஜபுரத்திற்கும் இடையே நடந்த போட்டியில் என் சாதனை இது..அந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது அந்த மைதானத்தில்..ஏனெனில் அந்த மைதானம் இருந்த இடத்தில் கான்கிரீட் வீடுகள் வந்துவிட்டன.

21 comments:

தமிழ் உதயம் said...

23)பிடிக்காத அணித்தலைவர்- ரிக்கி பாண்டிங்

ஏன்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அந்த வீரர் யார்? அந்த மைதானம் எது? //

தன்னம்பிக்கைன்னா இதுதான்..,

பிரபாகர் said...

அய்யா,

உங்களின் புதிருக்கு உலகத்திலேயே விடைதெரிந்த ஒரே ஆளான நீங்கள், கிரிக்கெட்டில் புலிதான் என்பதை நாங்களெல்லாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பிரபாகர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த தொடரை தொடர யாரையும் அழைக்கலியே டிவிஆர் சார்.

Chitra said...

இதற்கான விடை உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கிரிக்கெட் புலி என ஒப்புக் கொள்கிறேன்..


.........நீங்கள் கிரிக்கெட் புலி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// தமிழ் உதயம் said...
23)பிடிக்காத அணித்தலைவர்- ரிக்கி பாண்டிங்

ஏன்...//


இத் தொடர் பதிவு..நமது எண்ணங்களுக்கான காரணத்தைக் கேட்கவில்லை.இருந்தாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்..எனக்குப் பிடித்த ஆட்டக்காரர்களில் அவர் பெயர் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.அவரது ஆட்டமும்,ஜெயிக்க வேண்டும் என்னும் வெறித்தனமும் எனக்குப் பிடிக்கும்.உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்..இந்தியாவும்..ஆஸியும் மோதிய அவரே ஆஸிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்..ஆனால் அணித்தலைவர் ஆனதும்..தன் அணியினருடன் சேர்ந்து..நிறவெறியனாகவும் ஆனது..எனக்குப் பிடிக்கவில்லை.ஒரு அணித் தலைவனுக்கான செயல் அல்ல இது என்றே எண்ணுகிறேன்..இந்த கருத்து என் கருத்து மட்டுமே.
வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அந்த வீரர் யார்? அந்த மைதானம் எது? //

தன்னம்பிக்கைன்னா இதுதான்..,//

வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
அய்யா,

உங்களின் புதிருக்கு உலகத்திலேயே விடைதெரிந்த ஒரே ஆளான நீங்கள், கிரிக்கெட்டில் புலிதான் என்பதை நாங்களெல்லாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பிரபாகர்.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி பிரபா

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் சார்.. உங்க சாதனை பற்றி ஒரு உதிரி தகவலும், ஹாட் ட்ரிக் பற்றி special மேட்டரும் சொன்னீங்க.

பழைய players முதல் இப்போது ஆடும் நபர் வரை updated ஆக இருக்கீங்க சூப்பர் சார்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இந்த தொடரை தொடர யாரையும் அழைக்கலியே டிவிஆர் சார்.//

இத்தொடரை ஆரம்பம் முதல் நான் படிக்கவில்லை..அதனால் இது நாள் வரை யார் யார் எழுதியுள்ளார்கள் எனத் தெரியாததால்..'சபை நடுவே பேசாதிருப்பவன் நன்மரம்' என்று யாரையும் அழைக்கவில்லை..
ஸ்டார்ஜன்...இதுவரை நீங்கள் எழுதவில்லையெனின் நீங்கள் தொடருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
இதற்கான விடை உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கிரிக்கெட் புலி என ஒப்புக் கொள்கிறேன்..


.........நீங்கள் கிரிக்கெட் புலி!//


நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மோகன் குமார் said...
வாழ்த்துக்கள் சார்.. உங்க சாதனை பற்றி ஒரு உதிரி தகவலும், ஹாட் ட்ரிக் பற்றி special மேட்டரும் சொன்னீங்க.

பழைய players முதல் இப்போது ஆடும் நபர் வரை updated ஆக இருக்கீங்க சூப்பர் சார்!!//


வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி மோகன்

சிநேகிதன் அக்பர் said...

புதிர் ரொம்ப சூப்பர் சார்.

பதில்களும் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி அக்பர்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நன்றி டிவிஆர் சார். தொடரை தொடர்கிறேன், மிக்க நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan

அத்திரி said...

;//முதலில் சொன்ன புதிருக்கான விடை - ஹி..ஹி..ஹி..அது நானே தான்.//

ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் அதிகம்










குசும்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

Vijiskitchencreations said...

All the articles are good. Thanks

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Vijis Kitchen

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Bogy.in