Friday, February 26, 2010

சுஜாதா..இன்னமும் வாழ்கிறார்


தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டிருந்தவர் சுஜாதா என்னும் ரங்கராஜன்..இவர் தொடாத சப்ஜெக்ட் இல்லை எனலாம்.இன்று அவரது நினைவு நாள்.

1935ல் சென்னையில் பிறந்த இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று..இதற்காக பிரசித்திப் பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார்..1993ல் மைய அரசின் அறிவியல் தொழில் நுட்ப விருதான NCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக இவருக்கு அளிக்கப்பட்டது.

நடிப்பில்..நடிகர்கள் எப்படி நடித்தாலும்..அவர்கள் பாணியில் சற்றேனும் சிவாஜியின் பாணி தெரிவதை மறைக்கமுடியாது..

அதுபோல இன்றைய எழுத்தாளர்கள் யாராயிருந்தாலும்..அவர்கள் எழுத்தில் எங்கேயேனும் சுஜாதா எட்டிப்பார்த்துக் கொண்டு இருப்பார்.

அவர் 27-2-08ல் நம்மை விட்டு மறந்தாலும்..அவர் எழுத்துகளால் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டுதான் இருப்பார்.

அவரது ஒரு கதைக்கும்..யாவரும் நலம் படத்திற்கும் ஒற்றுமை இருந்ததைச் சுட்டிக்காட்டி..நான் எழுதிய பதிவு ஒன்றை இன்று மீள் பதிவாய் இட்டுள்ளேன்.


யாவரும் நலமும்...சுஜாதா கதையும்..


சமிபத்தில் வந்த படங்களில் யாவரும் நலம் வெற்றி பெற்ற படம்.இப்படம் இந்தியில் 13 B என்ற பெயரில் வந்தது.மாதவன் நடித்திருந்தார்.இப்படத்தின் கதையை ஹாலிவுட் படத்தயா ரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக செய்தி வந்தது.

ஆமாம்..இதற்கும்...இப்பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என பார்க்கிறீர்களா?

இருக்கிறது..

சுஜாதாவின்..தர்மு மாமா..என்ற கதை எத்தனைப் பேர் படித்திருப்பீர்கள் என தெரியவில்லை.அக்கதையின் நாயகன் ராஜாங்கத்தின் வீட்டு டி.வி.,யில். ஊரெல்லாம் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி ஓடும்பொது..
வேறு நிகழ்ச்சி தெரியும்..அதில் அவர் மாமா தோன்றி..'மெடிகல் ஷாப்பிற்கு வா' என்பார்.

ராஜாங்கம்..பக்கத்துவீட்டிற்கு சென்று பார்த்தான்..அவர்கள் டி.வி.யில்..வயலும் வாழ்வும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

கடைசியில்..ஒரு எதிர்ப்பாரா திருப்பத்துடன் கதை முடியும்..

யாவரும் நலம் படத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில்..கதானாயகன் வீட்டில் மட்டும்..வேறு ஒரு மெகா சீரியல் ஓடும்..

சுஜாதா..அன்றே..எழுதியதை..இப்படத்தின் கதாசிரியர்..மையக் கருவாக எடுத்து..சற்று வித்தியாசமாகக் கொடுத்துள்ளார்.

இதை ஏன் எந்த ஊடகங்களும் சுட்டிக் காட்டவில்லை.

ஒரு நடிகன் எப்படி நடித்தாலும்..ஒரு கட்டத்தில்..சிவாஜியின் சாயல் தெரியும்..அதுபோல எழுத்துலக சிவாஜியான சுஜாதாவின் சாயல் இன்றி எக்கதையும் இருக்காது எனக் கூறலாம் போலிருக்கிறது.

26 comments:

Tech Shankar said...

கலக்கல் தல. அருமை. நான் அவரது விசிறி..

Tech Shankar said...

100நாவல்கள், 250சிறுகதைகள் என எழுதியவர். திரைத்துரையில் வசனகர்த்தா. பல்வேறு கதாசிரியர்களின் குரு. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு கதை எழுதுவது எப்படி எனக் கற்று கொடுத்தவர் இவர். இப்படி இவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே

சுஜாதாவின் நினைவலைகள் குறித்த காணொளிகளைப் பார்வையிட இதோ இங்கே வாங்க : In Memory of Writer Sujatha

Chitra said...

ஒரு நடிகன் எப்படி நடித்தாலும்..ஒரு கட்டத்தில்..சிவாஜியின் சாயல் தெரியும்..அதுபோல எழுத்துலக சிவாஜியான சுஜாதாவின் சாயல் இன்றி எக்கதையும் இருக்காது எனக் கூறலாம் போலிருக்கிறது.

........... nice compliment! :-)

மங்குனி அமைச்சர் said...

பள்ளிப் பருவத்தில் காமிக்ஸ் , 9th -க்கு பின் பாக்கெட் நாவல்ஸ் , கலூரியில் நுழையும் போது இவரும் பாலகுமாரனும் வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள்.

Anonymous said...

//ஒரு நடிகன் எப்படி நடித்தாலும்..ஒரு கட்டத்தில்..சிவாஜியின் சாயல் தெரியும்..அதுபோல எழுத்துலக சிவாஜியான சுஜாதாவின் சாயல் இன்றி எக்கதையும் இருக்காது எனக் கூறலாம் போலிருக்கிறது. //

அருமை

vasu balaji said...

அருமையாச் சொன்னீங்க சார். அழகான நினைவஞ்சலி:)

தர்ஷன் said...

நன்றி
சுஜாதா பற்றிய உங்கள் பகிர்வுக்கு

ராம்ஜி_யாஹூ said...

sujatha has helped lot of youth to develop Tamil reading habit..

His contribution to the Tamil society & Tamil language is huge.

cheena (சீனா) said...

சுஜாதாவிற்கு ஒரு அருமையான அஞ்சலி - நன்று டிவிஆர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Tech Shankar said...
கலக்கல் தல. அருமை. நான் அவரது விசிறி..//

வருகைக்கு நன்றி Tech Shankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Tech Shankar said...
சுஜாதாவின் நினைவலைகள் குறித்த காணொளிகளைப் பார்வையிட இதோ இங்கே வாங்க : In Memory of Writer Sujatha//

நன்றி Tech Shankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
........... nice compliment! :-)//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
பள்ளிப் பருவத்தில் காமிக்ஸ் , 9th -க்கு பின் பாக்கெட் நாவல்ஸ் , கலூரியில் நுழையும் போது இவரும் பாலகுமாரனும் வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள்.//


வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வடகரை வேலன் said...
அருமை//

நன்றி வடகரை வேலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அருமையாச் சொன்னீங்க சார். அழகான நினைவஞ்சலி:)//

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தர்ஷன் said...
நன்றி
சுஜாதா பற்றிய உங்கள் பகிர்வுக்கு//

நன்றி தர்ஷன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//யாஹூராம்ஜி said...
sujatha has helped lot of youth to develop Tamil reading habit..

His contribution to the Tamil society & Tamil language is huge.//

வருகைக்கு நன்றி யாஹூராம்ஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//cheena (சீனா) said...
சுஜாதாவிற்கு ஒரு அருமையான அஞ்சலி - நன்று டிவிஆர்//

வருகைக்கு நன்றி cheena

சிநேகிதன் அக்பர் said...

அருமையான நினைவஞ்சலி.

அவரது எழுத்துக்களுக்கு அழிவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

Tech Shankar said...

பகிர்வுக்கு நன்றி.

உங்கள் இந்த பதிவை
இங்கேஇணைத்துள்ளேன்.

நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
Tech Shankar

Cable சங்கர் said...

நிஜம்

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Cable

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஸ்ரீராம். said...
நல்ல பகிர்வு..//

நன்றி ஸ்ரீராம்.