Friday, August 12, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (12-8-11)




குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்வதோ அல்லது தண்டனயை குறைக்கவோ அல்லது தண்டனையை நிறுத்தி வைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.மரண தண்டனை குற்றவாளிகளுக்கு அவர்களது கருணை மனுவை பரீசலித்து மன்னிப்பு வழங்கவோ அல்லது தண்டனையை நிறைவேற்றவோ முழு அதிகாரமும் இவருக்கு இருக்கிறது.

2)இன்று காலை பைக்கில் செல்லும் ஒருவர்..தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு பயணித்ததைப் பார்த்தேன்..ஆனால் பாவம் கழுத்து மட்டும் 45 டிகிரி சாய்ந்திருந்தது.சாய்ந்த கழுத்தில் ஹெல்மட் மாட்டவும் அவர் எவ்வளவு சிரமப் பட்டிருப்பார் என இரக்கம் மேலிட அவரை பார்த்தேன்.அப்போதுதான் ஹெல்மெட்டிற்கும், காதிற்கும் இடையே மொபைல் தெரிந்தது.அது கீழே விழாது கழுத்தில் முட்டுக் கொடுத்திருந்தார் என்று தெரிந்தது.இப்போது வீட்டிற்குப் போய் ஹெல்மெட்டை கழட்டியதும் கழுத்து வலிக்கப் போகிறதே என்ற கவலை என்னை தொற்றிக்கொண்டது.

3)கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதீர்கள்.உங்கள் பாதையும் வழுக்கல் நிறைந்ததுதான்..(ஜப்பானின் சொலவடை)

4)பலவீனர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள்.பலமுடையவரோ காரண,காரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர்

5)இரு அயல் நாட்டவர்களுக்கு இதுவரை நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது அவர்கள் 1987ல் கான் அப்துல் கஃபார் கான் மற்றும் 1990ல் நெல்சன் மண்டேலா

6)தெய்வத் திருமகள் படத்தில் வக்கீலாய் வரும் அனுஷ்காவிற்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட்..அமலா பாலுக்கு சவீதா. தமிழ் வசனம் பேச தமிழர்களால் தானே முடியும்..ம்ம்ம்ம்

7)அண்ணா நூற்றாண்டு நூலகம் மறைந்த தமிழக முதல்வர் அண்ணா நூற்றாண்டை நினைவு கூறும் விதமாக சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் அமைக்கப் பெற்றது இந்நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரியது

8)நண்பர்- சமச்சீர் கல்வி பற்றி உங்க கருத்து என்ன..
 மகளின் திருமண கவலையில் உள்ள தந்தை- அந்தச் சீரைப் பற்றி என்ன கவலை..என் பெண் கல்யாணச் சீர் பற்றிதான் என் கவலை..இதற்கும் சமச்சீர் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்

 

16 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

சாலையில் செல்வோர் சிந்தனைக்குத் தேவையான தகவல்!!

முனைவர் இரா.குணசீலன் said...

ஜப்பானிய சொலவடை அருமை!

உண்மையும் கூட.

முனைவர் இரா.குணசீலன் said...

பலமும் பலவீனமும் நம்பிக்கையில்தான் பிறக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

பலம் - நம்பிக்கையிலும்
பலவீனம் - அவநம்பிக்கையிலும் பிறக்கிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

பலமும் பலவீனமும் நம்பிக்கையில்தான் பிறக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

பலம் - நம்பிக்கையிலும்
பலவீனம் - அவநம்பிக்கையிலும் பிறக்கிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

திருஷ்டம் - பார்வை
அதிஷ்டம் - குருட்டுப்பார்வை என்பது ஒவ்வொருவருக்கும் புரியவேண்டும்.

--o--
முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்.
என்பதை உணரவேண்டும்.
--O--

ஹேமா said...

3,4 தத்துவங்கள் மனதில் பதியவேண்டிய வாழ்வியல் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் , பின்னூட்டங்களுக்கும் நன்றி முனைவர்.இரா.குணசீலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Hema

Karthikeyan Rajendran said...

மகளின் திருமண கவலையில் உள்ள தந்தை- அந்தச் சீரைப் பற்றி என்ன கவலை..என் பெண் கல்யாணச் சீர் பற்றிதான் என் கவலை..இதற்கும் சமச்சீர் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்

ரைட்டு! ஆஜர்!
நல்ல கருத்து
,,,,

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

MANO நாஞ்சில் மனோ said...

அருமை.......!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்பார்க் கார்த்தி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

Chitra said...

.என் பெண் கல்யாணச் சீர் பற்றிதான் என் கவலை..இதற்கும் சமச்சீர் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்


...... ஹா,ஹா,ஹா,ஹா.... அது சரி.... அவங்க அவங்க கவலை, அவங்க அவங்களுக்கு....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

காந்தி பனங்கூர் said...

//நண்பர்- சமச்சீர் கல்வி பற்றி உங்க கருத்து என்ன..
மகளின் திருமண கவலையில் உள்ள தந்தை- அந்தச் சீரைப் பற்றி என்ன கவலை..என் பெண் கல்யாணச் சீர் பற்றிதான் என் கவலை..இதற்கும் சமச்சீர் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்//

சரியா சொல்லியிருக்கீங்க, தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகுது. ஏழைகளின் பாடு திண்டாட்டம் தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி காந்தி பனங்கூர்