Thursday, August 18, 2011

தங்கம் பற்றி தங்கமான செய்திகள்..




1) உலகளவில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2000 முதல் 2250 டன் வரை தங்கம் வெட்டி எடுக்கப்படுகின்றது.இதில் மூன்றில் ஒரு பகுதி தங்கத்தை இந்தியா மட்டுமே பயன்படுத்துகிறது.

2) கடந்த ஆண்டு 2060 டன் தங்கம் எடுக்கப்பட்டது.இதில் 746 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

3)உலகளவில் 50 சதவிகிதம் தங்கம் நகைகளுக்கும், 40 சதவிகிதம் முதலீடுகளுக்கும், 10 சதவிகிதம் தொழிற்சாலைகளில் கருவிகளை தயாரிக்கவும் பயன்படுகிறது.

4)இந்தியாவில் உள்ள பெண்களில் 75 சதவிகிதம் பேர் புதுப்புது நகைகளை நாடிச் செல்வதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாம்.

5)தங்கத்தின் விலை விண்ணை நோக்கி பறந்துக் கொண்டிருக்கிறது.தீபாவளிக்குள் ஒரு கிராம் தங்கம் 3000 த்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் தங்கம் விற்பனையாளர்கள்

6)உலகத் தங்க கவுன்சில் லண்டனில் உள்ளது.இங்குதான் தினமும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.அமெரிக்க டாலரின் மதிப்பில் ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கத்திற்கு விலை வைக்கப்படும்.காலை 10 மணிக்கு ஒருமுறையும், பிற்பகல் 3 மணிக்கு ஒருமுறையும் விலை அறிவிக்கப்படும்.

7) கடந்த ஆண்டு இந்தியா 745.70 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.சைனா 428 டன்,அமெரிக்கா 128.61 டன் என்ற அளவில் வாங்கின.

8) ஒரு பவுன் தங்கம் அதாவது 8 கிராம்  வாங்கச் சென்றால், 9 கிராம் அளவிற்கு பணம் கொடுக்க வேண்டும்.ஏனெனில் 1  கிராம் சேதாரமாக எடுத்துக் கொள்ளப் படும்.தவிர்த்து செய்கூலியும் கொடுக்க வேண்டும்.

9)உலகில் அதிகமாக தென் ஆப்ரிக்காவில்தான் தங்கம் கிடைக்கிறது வைரமும் இங்குதான் அதிகம்.இந்தியாவில் 100 இடங்களில் தங்கப்படிவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவை ஆழமான பகுதியில் இருப்பதால், கிடைக்கும் தங்கத்தை விட வெட்டியெடுக்கும் செலவு அதிகம்.

10)ஒவ்வொரு சராசரி இந்தியரின் குடும்பச் சொத்தில் 20 சதவிகிதம் தங்கம் இர்ப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் -தேவி வார இதழ் 


16 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தங்கமான பகிர்வு.

vidivelli said...

தகவலுக்கு நன்றி..
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

தரமாய் தங்கமாய் தந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vidivelli

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு இன்றைய மனிதர்களுக்குக் கூட கிடையாது அன்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

புதிய பல செய்திகளை அறிந்துகொண்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு இன்றைய மனிதர்களுக்குக் கூட கிடையாது அன்பரே..//

அதனால்தான் நல்ல மனிதர்களை தங்கமான மனிதர் என்கிறோமோ?
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
புதிய பல செய்திகளை அறிந்துகொண்டேன்.//

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

Ashok D said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ashok

aotspr said...

நல்ல தகவல்!
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி priya