தமிழகத்தின் 2011-12க்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கப்பட்டது.சாதாரணமாக பட்ஜெட் எப்படியிருந்தாலும் ஆளும் கட்சி கூட்டணி பாராட்டுவதும்..எதிக் கட்சிகள் கூட்டணி குறை சொல்வதும் வழக்கம்.இம்முறையும் தவறாமல் அது நடந்தது.என்னைப் போன்ற சாமான்யன் பார்வைக்கு பட்ஜெட் பரவாயில்லை என்றே தோன்றியது.பட்ஜெட்டின் ஹைலைட்...கூட்டங்களில் காலில் விழும் கலாச்சாரம் சட்டசபையிலும் நடந்தது.வாசித்து முடிந்ததும் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அம்மாவின் அடி பணிந்து வணங்கினார்.(யார் தருவார் இந்த அரியாசனம்,,காரணமோ)
2)பட்ஜெட்டில் சிலத் துளிகள்-
1) ஓராண்டிற்குள் அதாவது ஆகஸ்ட் 2012க்குள் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும்
2)தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடியிலிருந்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது
3)அரிசி பெறத் தகுதியுள்ள 1.83 கோடி குடும்பங்களுக்கு..இலவச மிக்ஸி கிரைண்டர்.2011-12ல் சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
4)சென்னைக் குடிநீர் பிரச்னை நீக்க 3 புதிய ரிசர்வாயர்கள் அமைக்கப்படும்.இதனால் 4.2 TMC தண்ணீர் தேக்கிவைக்க முடியும்
5)விவசாயிகளுக்கு 3000 கோடிக்கு வட்டியில்லா பயிர்க்கடன் கொடுக்கப்ப்டும்.
3)ஜெ ஆட்சிக்கு வந்த பின்னர் இப்போதெல்லாம் அடிக்கடி சென்னைத் தெருக்களில் மாநகர பேருந்துக்கள் பிரேக் டவுன் ஆகி நிற்பதைக் காணமுடிகிறது..அதற்கான காரணம் தெரியவில்லை...
4)பொய் வழக்குகள் தொடர்ந்தால் தி.மு.க., சிறை நிரப்பு போராட்டம் நடத்தும் என அறிவிக்கின்றனர்..அம்மாவும் அதைத்தானே செய்கிறார்..பின் எதற்கு போராட்டம் (!!!!)
5)ஆடு.மாடுகள் தரப்படுகின்றன..சமச்சீர் கல்வியால் மாணவர்கள் பயில முடியவில்லை..குறிப்பாக எதாவது உணர்த்தப்படுகிறதா...தெரியவில்லை
7 comments:
மக்களாட்சி என்றால் .....
மக்கள் ஆட்சி என்றால் மக்களை ஆட்சி செய்ரதா அர்ர்ர்த்தம்
of the people ,by the people ,for the people கதையெல்லாம் இங்கே சரிப்பட்டு வராதும்மா சித்ரா.
இங்கே
off the people,
buy the people ,
scare the people
மக்களால்..மக்களுக்கு..மக்கள் தேர்ந்தெடுப்பது மக்கள் ஆட்சி...
இப்படித்தான் சொல்கிறார்கள் சித்ரா
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி goma
தேர்தல் என்ன என்ன வேலை செய்கிறது பாருங்கள்...!
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
வருகைக்கு நன்றி Priya
Post a Comment