சமீபத்தில் பத்திரிகைகளில் கலைஞர் குடும்பத்தின் சொத்துக் கணக்கு வெளியிடப்பட்டு....பிரதமரே..ஆச்சரியப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
இவை எந்த அளவு உண்மை..இல்லை..இக்கட்டுரை எழுதியவர்..தன் அறையில் இருந்தே மோட்டுவளையைப் பார்த்து எழுதுகையில்..அங்கு பிரதமர் வந்து ஆச்சரியப்பட்டுப் போனாரா எனத் தெரியவில்லை.
ஒரு அரசியல்வாதி..அதுவும்..நாட்டை ஆண்டக் கட்சி..அதன் தலைவர் குடும்பம் இன்றைய அரசியல் வாழ்வில்..சொத்துக்கள் குவிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
1967க்கு முன்..அரசியலில் ஈடுபட்டு..ஆண்டு..மந்திரிகளாய் இருந்தவர்கள் எல்லாம் பணக்கார..ஜமீன் குடும்பங்களாய் இருந்தன.இவர்களுக்கிடையே காமராஜ்,கக்கன் போன்ற சாமான்யர்கள் சிலரும் அத்திப்பூத்தாற்போல இருந்தனர்.இவர்கள் கடைசிவரை ஊர் சொத்துக்கு ஆசைப்படவில்லை.மக்கள் நலன் தான் குறிக்கோளாய் இருந்தனர்.இறக்கையிலும் பக்கிரிகளாய் இறந்தனர்.
அதெல்லாம் அந்தக் காலம்..இன்று..சுயநலமில்லா அரசியல்வாதி யார் உளர்..
கலைஞர் சொத்து இவ்வளவு என்றால்..மற்ற தலைவர்கள் சொத்துக்கள் எவ்வளவு என விவரம் இப்பத்திரிகைகள் வெளியிடுமா?
சாதாரண letter pad கட்சி நடத்தும் குட்டித் தலைவர்கள் சொத்துக்களே கோடிக்கணக்கில் இருக்குமே.அவர்களுக்கு எப்படி வந்தது அச்சொத்து.
இப்படியெல்லாம் செய்திகள் வெளியாவதால் பத்திரிகைகளின் சர்குலேஷன் கூடலாம் அவ்வளவுதான்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களும்..புத்தகங்களும் கோடிக்கணக்கில் விரயம்.
தொண்டர்களின் பணமும்..ஏழைகளின் வயிற்றிலடித்து அடித்து அபகரித்த நிலங்களும் தங்கள் சொத்துக் கணக்கில் ஏற்றிக் கொள்ளும் தலைவர்கள் இன்று எந்தக் கட்சியில் இல்லை.
உங்களில் தவறிழைக்காதவன் கல் வீசட்டும் என்ற ஜீசசின் வரிகளும்
சாகாத வீட்டில் இருந்து கடுகு எடுத்து வாருங்கள் என்ற புத்தரின் வாசகங்ககும் மட்டுமே என் நினைவில் வருகின்றன.
ஆனால் பூனைக்கு மணி கட்டப்போவது யார்? என கேள்வி காதில் விழுகிறது.
யார் மணி கட்ட முயன்றாலும் எலிகள் பூனையின் வதையிலிருந்து என்றும் தப்பிக்கமுடியாது.
10 comments:
"சமீபத்தில் பத்திரிகைகளில் கலைஞர் குடும்பத்தின் சொத்துக் கணக்கு வெளியிடப்பட்டு....பிரதமரே..ஆச்சரியப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன".
உண்மையா என்று தெரியவில்லை.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
டைட்டில் அட்ராக்ஷன் க்காக எழுதப்படுபவை அவை ஹா ஹா
உங்க நையாண்டியை ரசித்தேன்
super!
வருகைக்கு நன்றி Priya
//சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் அட்ராக்ஷன் க்காக எழுதப்படுபவை அவை ஹா//
:)))
//சி.பி.செந்தில்குமார் said...
உங்க நையாண்டியை ரசித்தேன்//
நன்றி செந்தில்
வருகைக்கு நன்றி விக்கியுலகம்
சரியாய் சொன்னீங்க , மற்ற அரசியல்வாதிகளை யார் கேட்பது?
சாட்டையடி கேள்வி
அப்படியே இந்த பக்கத்தையும் கோசம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
வருகைக்கு நன்றி ஸ்பார்க் கார்த்தி
Post a Comment