Friday, August 5, 2011

மக்கள் எனும் மாக்கள்




மக்களுக்குச் செய்கிறேன்
மக்களுக்கு உழைக்கிறேன்
மக்களுக்காக எதையும் செய்வேன்
மக்களுக்கே என் உடல் பொருள்
தலைவன் பேசி முடித்ததும்
தொண்டர்களின் விண்ணதிரும்
கைதட்டல்கள்..
மக்கள் எனில்
மகன்..மகள் என்பதை
மறந்ததேன் தொண்டன்

9 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்திக்க வைக்கும் கவிதை.

முனைவர் இரா.குணசீலன் said...

இந்த உண்மையை அறியாத தொண்டர்கள் இருக்கும் வரை
அறிவாளி அரசியல் வாதிகளும் இருக்கத் தான் செய்வார்கள்.

பனித்துளி சங்கர் said...

நல்ல சிந்தனையை வித்தைத்திருக்கிறது தங்களின் கவிதை . ஆனால் இப்பொழுது சிந்திப்பது யார் !>?

ஹேமா said...

ஐயா...மக்கள் என்று சொல்கிறார்களா மாக்கள் என்று சொல்கிறார்களா என்று கவனியுங்கள்.உண்மையில் நல்லதொரு சிந்தனை வரிகள் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பனித்துளி சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

aotspr said...

நல்ல கவிதை.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Priya