1)வாடிகன் நகரில் மூன்று மொழிகள் புழக்கத்தில் உள்ளன.பேச்சுக்கு இத்தாலி,சடங்கு, சம்பிரதாயங்களுக்கு லத்தீன்,தகவல்கள் அனுப்ப ஃபிரெஞ்ச்
2) ஒரு இயந்திரம் ஐம்பது சாதாரண மனிதர்களின் வேலையைச் செய்து விடும்.ஆனால் ஐம்பது இயந்திரங்கள் சேர்ந்தாலும் ஒரு அசாதாரண மனிதனின் வேலையைச் செய்யமுடியாது.
3) சென்னையில் சேரும் குப்பைகளையும், குப்பையைக் கொட்டும் இடங்களையும் ஹெலிகாப்டெர் மூலம் பார்வையிட்ட ஜெ.. இன்னும் மூன்று மாதங்களில் போர்க்கால அடைப்படையில் குப்பைகள் அகற்றப் படும் என்று கூறினாலும்..கூறினார்..'உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா' என்பதுபோல ..தினமும் குப்பையை எடுக்கும் சென்னை நகராட்சியும் சரி, டிசம்பர் வரை காண்ட்ராக்ட் உள்ள நீல் மெட்டலும் சரி..குப்பையை அள்ளுவதையே விட்டு விட்டாற் போல தெரியுது..சென்னைத் தெருக்கள் எல்லாம் நாற்றம் அடிக்கின்றன
4) பொதுவாக அனைத்துக் கட்சியினரும்..புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகக் கட்டிடம் மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவ மனையாகவும் ஆகும் என்ற முதல்வரின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.கலைஞரும் அதில்..தனக்கு அதிருப்தி இல்லை என்று சொன்னாலும்..சென்னை மேயர்..ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.."சரியாக கட்டப்படவில்லை..அவசரத்தில் கட்டப்பட்டது..அதன் உறுதித் தன்மைப் பற்றி கேள்விக்குறையாய் உள்ளது' என்றெல்லாம் சொன்ன முதல்வர் ஒரு மருத்துவமனை அமைக்கும் அளவு கட்டிடம் உறுதியாய் உள்ளதாய் நினைக்கிறாரா? அப்போது முந்தி சொன்னது என்னாச்சு? என்ற பொருள்பட பேசியுள்ளார்.
என்னவோடா மாதவா..பொதுமக்களுக்கு நல்லது நடந்தா சரி
5)அன்னா ஹசாரேவிற்கு இந்த அளவு ஆதரவு இருக்கும் என மத்தியில் யாரும் எதிர்பார்க்கவில்லை.அன்னா செய்தது..செய்வது ..சரியா..தவறா..என்ற கேள்விக்குப் போகப்போவதில்லை..ஆனால்..மக்கள் வெகுண்டால்...மக்கள் சக்தியை யாராலும் அடக்கமுடியாது.
6) நேற்றைய தினசரிகளில்..இரண்டு நீதிபதிகள் குறித்து செய்திகள் வந்துள்ளன.தவிர்த்து..ஏற்கனவே இரு நீதிபதிகள் பற்றிய புகாரும் சில நாட்களுக்குமுன் தினசரிகளில் வந்தது..இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில்..லோக்பாலில்..நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தவறு என தோன்றுகிறது.
7)ராஜா,கனிமொழி,சரத்குமார் ஆகியோர் பற்றிய செய்திகள் இப்போது அடங்கிவிட்டன..அடங்கிவிட்டதா..அடக்கிவாசிக்கப்படுகிறதா...தெரியவில்லை.
8)சமச்சீர் கல்வி..இது தானா..
முதல்வகுப்பு மாணவனிடம் அ. அம்மா.ஆ ஆடு..சொல்லச் சொன்னேன்...ஊ..வந்ததும்..ஊழல் என்றான்
3 comments:
நாட்டின் நிலைபற்றிய மன ஆதங்கம் நாசூக்காக பதிவுசெய்துள்ளீர்கள்...
நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்..
வருகைக்கு நன்றி vidivelli
வருகைக்கு நன்றி priya
Post a Comment