Wednesday, August 24, 2011

அடப் போங்கடா..நீங்களும் உங்க புத்தாண்டும்...




தமிழன் ..தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்..ஆனால் நம்மில் ஓற்றுமை என்பதே கிடையாது.
பதவிக்கும்..ஆசைக்கும் எல்லையில்லாமல்..நம்மையே நாம் காட்டிக் கொடுப்போம்..
உதாரணத்திற்கு ஒரு சிறு கதை..
இரண்டு தமிழர்கள் இரவில் நடந்துவந்த போது ஒரு பாழும் கிணற்றில் விழுந்துவிட்டனர்.நல்லவேளை தமிழகத்தில் உள்ள பாசனக்கிணறு அது. நில அபகரிப்பில் எல்லா விவசாய நிலங்களும் கட்டிட நிலங்களாய் ஆகிவிட்டதால்.. அதில் தண்ணிர் இல்லை.
விழுந்ததில் ஒருவனுக்கு நல்ல மரம் ஏறும் பயிற்சி உண்டு.,அவன் கிணற்றில் வளர்ந்திருந்த செடிகளைப் பற்றி மெதுவாக மேலே வர முயற்சித்தான்.கொஞ்சம் முன்னேறினான்..ஆனால் கீழே இருந்து அவன் கால்கள் இழுக்கப் பட்டன.'என்ன' என்று பார்த்த போது கீழே இருந்த தமிழன் அவன் காலைப் பற்றி, அவனை முன்னேற விடாமல் தடுத்தான்.'என்னால் வெளியே வர முடியாது? நீ மட்டும் எப்படிப் போகலாம்?' என்றான்.
அதற்கு மற்றவனோ..'நான் மேலே போய் .,உன்னை மீட்க உதவிக்கு ஆட்களை கூட்டிவருகிறேன்' என்றான்.
'உன்னை எப்படி நம்புவது?' என்றான் கீழே நின்றுக் கொண்டிருந்தவன்.
இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும்..'காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்' என குரல் கொடுத்தனர்.
அப்போது அவ்வழியே வந்த வேற்று மொழிக்காரன் ஒருவன்..'அடப் போங்கடா..உங்களைக் காப்பாற்றினாலும்..இருவரும் மேலே வந்து..சண்டையிடப்போகிறீர்கள்.அதை கிணற்றிலேயே செய்துக் கொண்டிருங்கள்' எனச் சென்றுவிட்டான்..
இது கதையென்றாலும்..நடைமுறை உண்மை..
நமது கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்திருக்குமேயாயின்...எவ்வளவோ காரியங்களை சாதித்துக் கொண்டிருக்க முடியும்.
தமிழா..இதுதான் உன் தலையெழுத்து..
அதை மாற்ற நமக்குள் ஒன்றுபட்டால்தான் உண்டு..
இல்லையேல் கால காலத்திற்கும் இ.வா. க்களாகவே மற்றவர்க்கு இருப்போம்..
இதைப்பற்றியெல்லாம் இப்போ என்ன கவலை..என்கிறீர்களா?
ஆமாம்..ஆமாம்..
தை முதல் நாள்..தமிழர் புத்தாண்டா..
சித்திரை முதல்நாள் தமிழர் புத்தாண்டா
இந்தக் கவலையே முக்கியம்... நமக்கு.


14 comments:

sathishsangkavi.blogspot.com said...

//தை முதல் நாள்..தமிழர் புத்தாண்டா..
சித்திரை முதல்நாள் தமிழர் புத்தாண்டா
இந்தக் கவலையே முக்கியம்... நமக்கு.//

உண்மைதான்...

காந்தி பனங்கூர் said...

//தமிழா..இதுதான் உன் தலையெழுத்து..
அதை மாற்ற நமக்குள் ஒன்றுபட்டால்தான் உண்டு.//

சரியா சொன்னீங்க சார். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு எவ்வளவோ உதாரணங்கள் உள்ளன.

aotspr said...

\\தமிழா..இதுதான் உன் தலையெழுத்து..
அதை மாற்ற நமக்குள் ஒன்றுபட்டால்தான் உண்டு..//

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

MANO நாஞ்சில் மனோ said...

ஒற்றுமையாக வாழ்வோம்....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நமக்குள் ஒன்றுபட்டால்தான் உண்டு.

இராஜராஜேஸ்வரி said...

நமக்குள் ஒன்றுபட்டால்தான் உண்டு..

Unknown said...

அண்ணே ஒரு வேலை நம்மளுக்கு மட்டும் ரெட்டை மூளை படசிருப்பானோ ஆண்டவன்...அதனாலதானோ நாம ஒரு பக்கம் பம்முறோம் மறுபக்கம் போட்டு கொடுக்கறோம்....புரியல்லேன்னே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி காந்தி பனங்கூர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி விக்கியுலகம்