Wednesday, August 3, 2011

கட் அண்ட் பேஸ்டும்..பதிவர்களும்..
பல பதிவர்கள் சிறந்த பதிவிட வேண்டும் என நிறைய ஹோம் ஒர்க் செய்து தன் பதிவை வலையேற்றுகிறார்கள்.
ஆனால் எந்த கஷ்டமும் இல்லாமல்...பத்திரிகை செய்திகளை கட் அண்ட் பேஸ்ட் செய்து பதிவில் ஏற்றும் சில பதிவர்களின் பதிவுகள் திரட்டிகளில்..அதிக வாக்குகள் பெருவதும்..வாசகர் பரிந்துரையில்..அதிகம் படித்த பதிவுகளாக ஆவதும் இன்று கண்கூடு.அதனால் கட் அண்ட் பேஸ்ட் பதிவிடக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை.அவர் வலைப்பூவில் அவர் இடுகிறார்.
ஆனால்..அதனால்தான் நாங்கள் பதிவிடுவதில்லை என சில பதிவர்கள் கூறுவது..ஏற்புடையதல்ல.
வாசகர் பரிந்துரையோ...அதிகம் படித்த பதிவோ..அந்த வாரத்தில் முன்னணி பதிவோ..நம் பதிவின் தரத்தை தீர்மானிப்பதில்லை என்பதை பதிவர்கள் உணர வேண்டும்.
என் நட்பு வட்டம் பெரிதா...அப்படியெனில்..நான் இடும் எந்த இடுகையும்...எப்பேற்பட்டதாயினும் அதிக வாக்குகளை பெற்று முன்னணி இடுகையாகிவிடும்.
இந்நிலையில்..இவை எதைப் பற்றியும் கவலைப்படாது..நாம் எழுதிக் கொண்டிருப்போம்..
கிட்டத்தட்ட..இவை நம் டயரிக் குறிப்புகள் என்று எண்ணியே பதிவிடுங்கள்...நம் எண்ணங்களை பதிவிடுவோம்..படிப்பவர் படிக்கட்டும்..பின்னூட்டம் இடுபவர் இடட்டும்.
இலக்கிய பத்திரிகைகள் படிப்பவர் எண்ணிக்கை குறைவுதான்...அதனால் அவை நின்று விட்டனவா..அல்லது தரமிழந்து விட்டதா..
இந்த எண்ணத்துடன் அனைவரும் மீண்டுமெழுத ஆரம்பியுங்கள்.
திரட்டிகளுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்...
சினிமா சம்பந்தப்பட்டவைகளை தனியாக திரைமணத்தில் வெளியிடுவது போல கட் அண்ட் பேஸ்ட் பதிவுகளை மற்ற பதிவுகளிலிருந்து பிரித்து தனிப் பகுதியாக்கிவிடுங்கள்.
 

22 comments:

Chitra said...

பிரபலம் என்ற மாயையில் இருந்து விடுபட்டாலே போதுமே. :-)

காந்தி பனங்கூர் said...

மூளையை கசக்கி எழுதுவோர் கவனிக்க:
ஒருவர் வலையில் வெளியிட்ட போஸ்டை இன்னொருவர் காபி செய்வது மிகவும் தவறு. ஆனால் பத்திரிக்கைகளிலோ அல்லது இணையதளங்களிலோ வரும் செய்தியை காபி, பேஸ்ட் பண்ணுவது தவறில்லை.

அவர்களுக்கு எத்தனை பின்னூட்டம் வருகிறது, எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்களுக்கு தோன்றியதை எழுதுங்கள். உங்கள் எழுத்து திறமைக்கு ரசிகர்கள் எப்பவுமே இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

குடந்தை அன்புமணி said...

பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...

இது இந்த இடுகையைப் பற்றிய கருத்தும்கூட...

ஆமாம்... நான் கட் அண்ட் பேஸ்ட் செய்யப்போறேன்....

சேட்டைக்காரன் said...

//அதனால்தான் நாங்கள் பதிவிடுவதில்லை என சில பதிவர்கள் கூறுவது..ஏற்புடையதல்ல.//

மிகச்சரி, ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி இருக்கிறது. நமது விருப்பப்படி எழுதிக்கொண்டிருப்பது சரியாய் இருக்கும்.

தமிழ்வாசி - Prakash said...

நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கிங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி காந்தி பனங்கூர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடந்தை அன்புமணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சேட்டைக்காரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

அபி அப்பா said...

சூப்பர் சார்!

துளசி கோபால் said...

well said.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அபி அப்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஹி

வருண் said...

இந்தப்பதிவுகள் ரெண்டையும் பாருங்க, சார்!

http://timeforsomelove.blogspot.com/2009/07/blog-post_11.html

http://thirumeygnaanam.blogspot.com/2010/10/responsible-for-developing-baldness-in.html


இந்த மாதிரியும் நெறையாப் பண்ணுறாங்க! எந்தவிதமான தொடுப்பும் கொடுப்பதில்லை! அதில் உள்ள கெமிஸ்ட்ரி எதுவும் தெரியவும் தெரியாது! என்ன பண்றது இதுகளை? :)

நவன் said...

நல்ல விஷயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்தேன் வருண்..
பதிவுகளுக்கு காபிரைட் இல்லாதவரை இப்படியெல்லாம் நடக்கும்..என்ன செய்வது?
வருகைக்கு நன்றி

Priya said...

நல்ல முயற்சி.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Priya