Sunday, August 14, 2011

சிவனே போற்றி..(போஸ்ட் கார்ட் கதை)




ஒருநாள் கடவுள்கள் சரஸ்வதி,லட்சுமி,பார்வதி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த நாரதர் அவர்களை வணங்கி.."முப்பெருந்தேவியும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்...உங்கள் கணவர்களில் யார் சிறந்தவர் என்றா?" என தனது கலகத்தைத் தொடங்கினார்.
இது கேட்ட சரஸ்வதி, " நாரதா! இதில் என்ன சந்தேகம்..படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா தான் சிறந்தவர்" என்றார்.
"அது எப்படி...பிரம்மா படைக்கும் அனைத்து உயிர்களையும் காக்கும் தொழிலைச் செய்கிறாரே..என் கணவர் அவரே உயர்ந்தவர்." என்றார் லட்சுமி..
பார்வதி பார்த்தார்...
"யாக்கை நிலையாமை..என் கணவரான சிவன் அழிக்கும் தொழிலைச் செய்கிறார்...வாழ்வு நிலையாமை என்று தெரிந்தும்..நாட்டில் அராஜகம்,ஊழல் என நாட்டுச் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்களே..இவர்களுக்கு..சாவு மட்டும் இல்லையென்றால்..நாட்டில் என்ன நடக்கும்..யோசியுங்கள்.."
"நினைத்தாலே பயமாய் இருக்கிறது" என்றனர் சரஸ்வதியும்,லட்சுமியும்,நாரதரும் கோரஸாக.
"ஆகவே அழித்தல் தொழில் மேற்கொண்டுள்ள என் கணவர் சிவனே உயர்ந்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" என்றார் பார்வதி.
மறுப்பேதும் சொல்லாது ஒப்புக் கொண்டார்கள் அனைவரும்..

செய்தி - அந்நியர் ஆதிக்கத்திலிருந்து நாடு விடைபெற்ற 65ஆம் சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுகிறது.


7 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

இந்தியா ஒளிர்கிறது.அதைக் காட்சிகள் அடையாளப்படுத்துகின்றன.
நயம்!

சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்.


என் வலையில்.

இதுவல்லவா சுதந்திரம்..

http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_14.html
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_14.html

முனைவர் இரா.குணசீலன் said...

இந்தியா ஒளிர்கிறது.அதைக் காட்சிகள் அடையாளப்படுத்துகின்றன.
நயம்!

சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்.


என் வலையில்.

இதுவல்லவா சுதந்திரம்..

http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_14.html
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_14.html

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் வேற வெச்சிருக்கலாம், கதை ஓக்கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாய் மூடி மௌனியாய் இருப்பவர்களை 'சிவனே'ன்று இருக்கிறார்கள் என்பதில்லையா? அதுபோல நாட்டில் நடப்பதை மௌனியாய் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்க என்ற பொருளில் தலைப்பைப் பார்க்கவும் செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Priya