காலா வாடா உன்னை காலால் மிதிக்கிறேன் என்றார் பாரதி..
அந்த காலன்,எமன் எப்படியிருப்பான்...
ஆஜானுபாகுவாய்..காளை வாகனத்தில்..பாசக்கயிறுடன்..உயிர்களைப் பறிக்க வருவான்..என்றெல்லாம் பாட்டிக் கதைகள் உண்டு..
ஆனால் வள்ளுவன் எமன் எப்படிப்பட்டவன் என்று சொல்கிறார் ..தெரியுமா..?
எமன் என்பவன் பெண்ணுருவில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவனாம்.
சாதாரணமாக விஷமம் செய்யும் குழந்தைகளை பெற்றோர்கள் 'பொல்லாத எமன் ' என்று கொஞ்சுவார்கள் அல்லவா? கிட்டத்தட்ட அதுபோலத்தான் காதலியை கொஞ்சுகிறது இக் குறள்.
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)
முன்பெல்லாம் கூற்றுவன் என்கின்ற எமனை எனக்குத் தெரியாது.இப்போது தெரிந்துக் கொண்டேன்..அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
நம்மை விரும்பும் பெண்ணின் விழிப்பார்வை நம் உயிரையே எடுத்துவிடும் அளவிற்கான சக்தியைக் கொண்டது..
அடுத்த குறளிலும் கண்கள் உயிரைப் பறிக்கக் கூடியவை என்றார்..
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண் (1084)
பெண்மையின் வார்ப்படமாகத் திகழும் இப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே..ஏன்?
பெண்ணின் கண்கள் சக்தி வாய்ந்தவையாம்..
13 comments:
பெண்ணின் பார்வைக்கு இத்தனை பவர் ஆ? :-)
மிகவும் நல்ல தொகுப்புகள்.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com
திருவள்ளுவர் சரியாதான் சொல்லியிருக்கார். திருவள்ளுவர் பயங்கர அனுபவசாலி போல.
திருவள்ளுவர் சரியாதான் சொல்லியிருக்கார். திருவள்ளுவர் பயங்கர அனுபவசாலி போல.
ஆகா... குறளில் நல்ல விளக்கம் தான்
வள்ளுவத்தைப் படித்தபின் தான் வாழ்வில் உணர்ந்தேன்..
மலரினும் மெலிது காமம் என்பதை.
மிக அழகான விளக்கங்கள்..
வள்ளுவத்தைப் படித்தபின் தான் வாழ்வில் உணர்ந்தேன்..
மலரினும் மெலிது காமம் என்பதை.
மிக அழகான விளக்கங்கள்..
வருகைக்கு நன்றி சித்ரா
வருகைக்கு நன்றி Priya
வருகைக்கு நன்றி காந்தி பனங்கூர்
வருகைக்கு நன்றி சமுத்ரா
வருகைக்கு நன்றி Prakash
வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்
Post a Comment