தல அஜீத்தின் 50 ஆவது படம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில்..
படத்தின் தலைப்பை வைத்து..படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
ஆனால் இந்தப் பதிவு அதைப்பற்றியோ..பட விமரிசனமோ அல்ல..
சூதாட்டம் என்றாலே..சாதாரணமாக..கையில் கொண்டு செல்லும் பணத்தையெல்லாம்..அன்றைய நாள் யாருடைய நாளோ அவரிடம் இழந்து மற்றவர்களெல்லாம் திரும்பும் ஆட்டம்.
மங்காத்தா படமும் கிட்டத்தட்ட அப்படித்தான்.
சென்னை..சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டங்களில் தியேட்டர்களில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 400 காட்சிகளுக்கு மேல் மங்காத்தா தான்.
படம் வெளியான நேற்றும், இன்றும் அரசு விடுமுறை.நாளை வேலை நாள் ஆனாலும்..பெரும்பாலும் பலர் விடுப்பு எடுத்திருப்பர்.அடுத்து சனி,ஞாயிறு..
ஆக...5 நாட்கள் ..விடுமுறைக் கோலம்..
அதனால்..படம் கண்டிப்பாக ஐந்து நாட்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக போகும்.
அப்போது ஒரு நாளைக்கு 400 காட்சிகள் என்றால்..2000 அரங்கு நிறைந்த காட்சிகள்.
பெரும்பான்மையான அரங்குகள் கட்டணம் அதிகம் உள்ள அரங்குகள்..ஆகவே..ஒரு காட்சி நிறைந்தால் சராசரியாக 20000 ரூபாய் நிகர கட்டணம் என்று வைத்துக் கொண்டாலும்..ஐந்து நாள் வசூல் கண்டிப்பாக 4 கோடியைத் தாண்டும்.இந்த நான்கு கோடி..சென்னை, திருவள்ளூர் மட்டிலுமே.
மீண்டும் மாறன் அண்ட் கோ..வியாபாரத்தில் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள்...ராடன் மீடியா மூலம்..
அஜீத் திற்கு வெற்றி படம்..
வெங்கட் பிரபு..அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர்களால் மொய்க்கப்படுவார்.
மங்காத்தா ஆட்டத்தில்..வெற்றி இவர்களுக்கே..
பணத்தை இழந்தவர்கள்...உழைக்க அலுவலகம் செல்ல திங்கள் முதல் தயாராகுங்கள்..
3 comments:
தமிழ் சினிமாவே ஒரு மங்காத்தா தான் .... :(
இப்பொழுது தியேட்டர் உரிமையாளர்கள் வாயை மூடிக்கொண்டு கல்லாவை நிரப்புவார்கள்.....படம் டப்பா என்றால் நஷ்டத்துக்கு யாரைக் குற்றம் சொல்லலாம் என்று துடிப்பவர்கள் இன்று வந்த லாபத்தில் நன்றி உணர்ச்சியுடன் யாருடனாவது பகிர்ந்து கொள்வார்களா?
படம் சூப்பர்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment