Thursday, August 25, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (26-8-11) ரமலான் ஸ்பெஷல்




1)குரான் என்ற அரபுச் சொல்லுக்கு "ஓத வேண்டியது" என்று பொருள்.அல் கிதாப்,அல்பயான்,அல் புர்கான்,அல் திக்ரு,அல் நூர்,அல் ஹக்கு,அல் ஹகீம்.அல் ரூஹ்,அல் முபாரக்,அல் திஹ்ரா என பல்வேறு பெயர்களிலும் குரான் அழைக்கப்படுகிறது.குரான் அருளப்பட்டது புனித ரமலான் மாதத்தில் தான்.

2)மசூதிகளில் இருக்கும் உயரமான கோபுரங்கள், 'மினார்' எனப்படும்.உச்சிக்குச் செல்ல பாதையும். மேல் பகுதியில் மாடமும் இருக்கும்.பழங்காலங்களில், ஆங்காங்கே வேலைகளில் ஈடுபட்டிருப்போரை சரியான நேரத்தில் தொழுகைக்கு அழைக்க இம்மாடத்தில் ஏறி நின்று குரல் கொடுப்பார்கள்

3)மனிதரிடம் இரண்டு குணங்களை அல்லாஹ் விரும்புகிறார்..அவை , சகிப்புத்தன்மை,நிதானத்துடன் செயல்படுவது.இவ்விரண்டு குணங்களும் நோன்பு இருப்பதால் கிடைக்கின்றன.

4) இஸ்லாமிய சகோதரர்களுக்கு இறைவன் கொடுத்த கடமைகள் ஐந்து..அவை இறை நம்பிக்கை,தொழுகை,நோன்பு,ஜகாத்(ஈதலறம்),ஹஜ்

5) ரமல் எண்ர அரபுச் சொல்லில் இருந்து பிறந்ததே ரமலான்.ரமல் என்றால் எரித்தல் என்று பொருள்.நோன்பு இருப்பதால் பாவங்கள், தீமைகள் எரிக்கப்படுகின்றனவாம்.நோன்பு ரமலான் மாதம் 30 நாட்கள் கடைப் பிடிக்கப்படுகிறது.

6)30 பகுதிகளில் 114 அத்தியாயங்களில் 6666 வசனங்கள் கொண்ட திருக்குர் ஆன், ரமலான் மாதம்  அருளப்பட்டது.(. குரானின் முதல் வசனம் இந்த மாதத்தில் அருளப்பட்டது என்பதாலேயே இந்த மாதம் சிறப்பு பெறுகின்றது. மற்றப்படி குரான் 23 ஆண்டு கால இடைவெளியில் எல்லா காலக்கட்டங்களிலும் அருளப்பட்டது. இந்த முதல் வசனம் இறக்கப்பட்ட இரவு லைலதுல் கத்ர் எனப்படுகின்றது, இது பிறை 27 என கட்டுரையில் தவறாக குறிப்பிடபட்டுள்ளது. நாயகம் (ஸல்) அவர்கள், லைலதுல் கத்ரை பிறை 21,23,25,27,29 ஆகியவற்றில் தேடிக்கொள்ள சொன்னார்கள்)

7) இம்மாதம் அதிகத் தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன.வழக்கமான ஐந்து வேளைத் தொழுகைகளுடன் தராவீஹ் என்னும் உபரித் தொழுகையும்,தஹஜ்ஜத் என்னும் பின்னிரவுத் தொழுகையும் முப்பது நாட்களும் நிறைவேற்றுகின்றனர்.தவிர்த்து தினமும் திருக்குர்ரானை ஓதுகின்றனர்.

8)ஒருவர் செல்வத்தில் தனது தேவைகள் போக எஞ்சியுள்ளதில் இரண்டரை விழுக்காடு ஜகத்தாக கொடுக்கப்படுகிறது.ஜகாத் எனில் தூய்மைப்படுத்துதல் ஆகும்.

9)ரமலான் முடிந்து ஷவ்வால் மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பெருநாள் அன்று பித்ரா கொடுக்கப்படுவதால்தான் அப்பண்டிகைக்கு ஈதுல் பிதர் என்னும் பெயர்

10)அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரமலான் வாழ்த்துகள்

(தகவல்கள்- ராணி வார இதழ்)

25 comments:

Chitra said...

அருமையான பகிர்வு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

வலையுகம் said...

பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரரே
ரமலான் வாழ்த்துக்கள்

Anisha Yunus said...

ரமலான் ஸ்பெஷல் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே. இப்பொழுதுதான் இதனை பார்த்தேன். மிக சந்தோஷம். :))

வலையுகம் said...

நண்பரே முடிந்தால் இதை படித்து பாருங்கள்

http://valaiyukam.blogspot.com/2011/08/blog-post_14.html

யோகாசனமும் இஸ்லாமிய தொழுகையும் ஒர் ஒப்பாய்வு.பகுதி-1

நன்றி நண்பரே

ஆயிஷா அபுல். said...

உங்கள் மீதும்,உங்கள் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக! ஆமீன்.

நானும் இப்பதான் பார்த்தேன்.பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரரே.

Aashiq Ahamed said...

சகோதரர் ராதாகிருஷ்ணன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இந்த பதிவை பதிந்து, பகிர்ந்து எங்களை கண்ணியப்படுத்தியதற்கு மிக்க நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக...

சிறு திருத்தம். தவறாக நினைக்கவேண்டாம். தவறான தகவலை பார்த்துவிட்டு அப்படியே செல்ல முடியவில்லை. நாளை இறைவன் முன் குற்றவாளியாகி விடுவேன்.

///30 பகுதிகளில் 114 அத்தியாயங்களில் 6666 வசனங்கள் கொண்ட திருக்குர் ஆன், ரமலான் மாதம் பிறை 27ல் மக்களுக்கு அருளப்பட்டது.///

இது தவறு சகோதரர். குரானின் முதல் வசனம் இந்த மாதத்தில் அருளப்பட்டது என்பதாலேயே இந்த மாதம் சிறப்பு பெறுகின்றது. மற்றப்படி குரான் 23 ஆண்டு கால இடைவெளியில் எல்லா காலக்கட்டங்களிலும் அருளப்பட்டது. இந்த முதல் வசனம் இறக்கப்பட்ட இரவு லைலதுல் கத்ர் எனப்படுகின்றது, இது பிறை 27 என கட்டுரையில் தவறாக குறிப்பிடபட்டுள்ளது. நாயகம் (ஸல்) அவர்கள், லைலதுல் கத்ரை பிறை 21,23,25,27,29 ஆகியவற்றில் தேடிக்கொள்ள சொன்னார்கள். ஆக, பிறை 27 என குறிப்பிடபட்டுள்ளது தவறு சகோதரர்.

அழகான பதிவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Jaleela Kamal said...

தாங்கள் படித்து தெரிந்து கொண்டதை எல்லோருடனும் இங்கும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

G u l a m said...

உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
அன்பு சகோதரர் ராதா கிருஷ்ணன் ., அவர்களுக்கு
எதற்கெடுத்தாலும் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும் அநாகரிக இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்கிடையே உங்களைப்போன்றோரின் இத்தகைய பதிவுகள் மனதிற்கு சற்று இதமளிக்கிறது.
நீங்கள் ராணீ வார இதழிலிருந்து நம்பிக்கையின் அடிப்படையில் அப்படியே எடுத்து எழுதியதால் சகோ ஆஷிக் சுட்டிய காட்டிய தவறை கவனிக்கவில்லை என்பது என் எண்ணம். அதை மட்டும் சரி செய்துவிட்டால் இது ரமலான் குறித்த அழகான பதிவு என்பதில் மாற்றுகருத்தில்லை சகோ.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.தவறு திருத்தப்பட்டது Aashiq Ahamed

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.T.V.ராதாகிருஷ்ணன்,

தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக..! ஆமீன்..!

பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி சகோ.டிவிஆர்.

ரமலான் ஸ்பெஷல் பதிவாக //(தகவல்கள்- ராணி வார இதழ்)// --இலிருந்து எடுத்து போட்டு இருக்கிறீர்கள்.

தங்கள் அன்புள்ளத்திற்கு அடியேனின் பணிவான வாழ்த்துக்கள் உரித்தாகுக.

அந்த இதழின் பதிவில் சில பிழைகள் உள்ளன. தாங்கள் எதனையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர் என்பதால் அவற்றை தெரியப்படுத்துகிறேன்.


(3)//சகிப்புத்தன்மை,நிதானத்துடன்//

--- நோன்பு நோற்பதற்கான இறைவன் சொல்லும் காரணம்... நோன்பிருப்பது மனிதனுக்கு (தக்வா) இறையச்சம் வருவதற்காகவே.


4) //இஸ்லாமிய சகோதரர்களுக்கு இறைவன் கொடுத்த கடமைகள் ஐந்து..//---மட்டுமல்ல.

ஒரு மனிதன் சக மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்; ஒரு மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என நிறைய கொடுத்துள்ளார்.

அவற்றில் இறைவனுக்கான முதன்மையானவைதான் அந்த ஐந்தும்.


(5)//ரமலான் மாதம் 30 நாட்கள்//

---சில வருஷம் ரமலான் 29 நாட்களும் வரும். அதேநேரம் 28 அல்லது 31 கிடையவே கிடையாது என்பது கொசுறு தகவல்.

ஆதலால்... "ரமளானில் நோன்பு நோற்க வேண்டும்". 30 என்பது ஷரத்து அல்ல.


(8) //ஜகாத் இரண்டரை விழுக்காடு//---இதுவும் சரி என்றாலும்... இது மட்டும் அல்ல... எவ்வகையில் எவ்வளவு ஒருவர் பொருளீட்டுகிறார் என்பதை பொறுத்தும எவ்வளவு சேமிப்பு உள்ளது என்பதை பொருத்தும் ஜகாத் என்பது... சிலருக்கு ஒன்றும் கொடுக்க வேண்டியதில்லை, சிலருக்கு இரண்டரை, சிலருக்கு ஐந்து, சிலருக்கு பத்து, சிலருக்கு இருபது விழுக்காடு என்றும் வேறுபடும் என்பதையும் அறிக.


பகிர்வுக்கும் சகோ.ஆஷிக் பின்னூட்டத்தின் படி பதிவை திருத்தியமைத்ததற்கும் மிக்க நன்றி சகோ.டிவிஆர்.

தங்களுக்கும் இந்த ரமளானின் இறை அருட்பார்வை கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி...
ரமலான் வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவல்களுக்கும் நன்றி முஹம்மத் ஆஷிக்_citizen of world~

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி விக்கியுலகம்

பாத்திமா ஜொஹ்ரா said...

உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

அருமையான பகிர்வு.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

உங்கள் மீதும்,உங்கள் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக! ஆமீன்.

பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரா.

//பகிர்வுக்கும் சகோ.ஆஷிக் பின்னூட்டத்தின் படி பதிவை திருத்தியமைத்ததற்கும் மிக்க நன்றி சகோ.டிவிஆர்.//

ரிப்பீட்டு

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பகிர்வு.

நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

அஸ்மா said...

உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ :) உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இவற்றையும் பாருங்கள்.

நோன்பா? வெறும் பட்டினியா? (சுய பரிசோதனை)

நோன்புப் பெருநாள் தர்மம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்..
நீண்ட நாட்களாக ஆளைக் காணோம்..
எப்படி இருக்கீங்க..
ஸ்டார்ஜன் எங்க இருக்கார்..எப்படி இருக்கார்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாத்திமா ஜொஹ்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அஸ்மா

ஏம்.ஷமீனா said...

சகோதரர் ராதாக்ருஷ்ணன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்),
அருமேயன பதிவு !
உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக, ஆமீன்.


உங்கள் சகோதரி,
எம்.ஷமீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஏம்.ஷமீனா

ADAM said...

THANKS