சமச்சீர் கல்வி பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க., அரசுக்கு விழுந்த அடியா? என்ற கேள்விக்கான பதில் பதிவின் இறுதியில்..
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதற்கான 25 காரணங்களை தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதில் ஒரு காரணம்..
"கடந்த ஆட்சியில் சமச்சீர்கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியை ரத்து செய்யக்கூடாது என்ற கல்வித்துரை செயலாளர் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.அவரே இந்த ஆண்டு உயர் நீதிமன்றத்திலும்,உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார்.இது தவறானது.இப்படிப்பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது'
இந்நிலையில் அரசு வக்கீல் உச்ச நீதிமன்றத்தில்..தமிழக அரசுக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறி பின் இது என் தனிப்பட்டக் கருத்து என்று சொன்னதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்போது தலைப்பிற்கு வருவோம்..
இந்தத் தீர்ப்பு ஜெ அரசிற்கு விழுந்த அடியா..
கண்டிப்பாக..அடி என்று சொல்வதுடன்..ஜெ விற்கு ஒரு பாடம் எனலாம்..
இனியாவது ஜெ எது நல்லது..எது கெட்டது என்பதை ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும்..தன்னைத் துதிப்போரையும்..தன்னை திருப்தி படுத்த நினைத்து..தவறான ஆலோசனைகள் தருபவர்களையும் விலக்கி வைக்க வேண்டும்.மக்கள் உங்களை தேர்ந்தெடுத்ததே நல்லாட்சித் தருவீர்கள் என்றுதான்..கடந்த ஆட்சியை பழி வாங்க வேண்டும் என்பதற்கு அல்ல..
இதை உணர்ந்து, இனி வரும் காலங்களில்..எந்த திட்டத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமெனின்..அது யார் ஆட்சியில் கொண்டு வந்தது எனப் பாராமல் அமல் படுத்த வேண்டும்.
10 comments:
எல்லாம் பதவி பண்ணும் வேலை ஒன்னும் செய்ய முடியாது.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
நல்ல அடிதான் ..
என்றாலும் இவர்கள் திருந்துவார்கள் என்பது சந்தேகம் தான்...
நல்ல அளவான பதிவு..
அரசியல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்...
http://sempakam.blogspot.com/
வருகைக்கு நன்றி Priya
வருகைக்கு நன்றி vidivelli
கல்வியிலும் அரசியலை நுழைத்து விட்டார்களே.... ம்ம்ம்....
அகம்பாவத்துக்கு கிடைத்த ஆப்பு
//மக்கள் உங்களை தேர்ந்தெடுத்ததே நல்லாட்சித் தருவீர்கள் என்றுதான்.//
நெசமாவண்ணே?
வருகைக்கு நன்றி Chitra
வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்
/// சேக்காளி said...
//மக்கள் உங்களை தேர்ந்தெடுத்ததே நல்லாட்சித் தருவீர்கள் என்றுதான்.//
நெசமாவண்ணே?///
:)))
Post a Comment