Tuesday, August 30, 2011

மரணதண்டனை..சில விவரங்கள்
சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை இந்தியாவில் 52 பேர் மரணதண்டனை (தூக்கிலிடப்பட்டதாக) அடைந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
1995ல் ஆடோ சங்கர் தூக்கிலிடப்பட்டார்.2004ல் ஆகஸ்ட் மாதம் தனஞ்செய் சட்டெர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டார்.அதன் பின் இ துவரை தூக்குதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1992 முதல் 29 கருணை மனுக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோர் மனுக்களும் அடக்கம்.
அரிதினும் அரிதான வழக்கில்தான் மரணதண்டனை வழங்க வேண்டுமென 1983 ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுவரை 96 நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்டன.34 நாடுகள் தண்டனையை நீக்காவிடினும் இது போன்ற தண்டனையைக் கொடுக்கமாட்டோம் என அறிவித்துள்ளன.ஆனால் அமெரிக்கா,இந்தியா,சீனா உட்பட 58 நாடுகள் இன்னும் தூக்குதண்டனையை விடவில்லை.
பஞ்சாப் முதல்வராய் இருந்த கெய்ரோன்சுட்டுக் கொல்லப்பட்டார்.இவ்வழக்கில் தயாசிங் என்பவர்க்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.இவரது கருணைமனுவும் நீண்ட நாட்கள் கழித்து நிராகரிக்கப்பட்டது.ஆகவே அவர் 1991 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.அதை மனுவாக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தயாசிங் நீண்ட காலம் சிறையில் இருந்து விட்டதால்.விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
அதேபோன்று விஷ ஊசி வழக்கில் காலதாமதம் ஆனதால் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த வைத்தி என்னும் குற்றவாளி மனு செய்தார்.அவர் தண்டனையையும் ஆயுள் தண்டனையாய் நீதிமன்றம் குறைத்தது.
அதே போன்று தான் ராஜீவ் கொலை வழக்கும்.இதிலும் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க தாமதமாகியுள்ளது.குற்றம் நடந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் முருகன், சாந்தன் ,பேரறிவாளன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.இப்போது மரணதண்டனையையும் நிறைவேற்றினால் ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை கொடுப்பது போலாகும்..

டிஸ்கி-
ராஜீவ் இருந்திருந்தா இவர்களை மன்னித்திருப்பார்னு தலைவர் சொல்றாரே!
அவர் இருந்திருந்தா ..அவரைக் கொன்றதற்கான தண்டனையை எப்படிக் கொடுக்க முடியும்? இவர்கள் குற்றவாளியே ஆகி இருக்க முடியாதே !!

5 comments:

காந்தி பனங்கூர் said...

எல்லாமே அரசியல் நாடகம் சார். இந்திய சட்டமாவது மண்ணாங்கட்டியாவது. நம் நாட்டில் ஆளுக்கு ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. கேரளாவில் முதலமைச்சரால் ஒரு மரண தண்டனை கைதியை, தண்டைனையிலிருந்து தப்ப வைக்க முடியும் போது டமிழ் நாட்டில் ஏன் முடியாது.

Unknown said...

ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
http://bit.ly/n9GwsR

அருள் said...

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html

முனைவர்.இரா.குணசீலன் said...

இப்போது மரணதண்டனையையும் நிறைவேற்றினால் ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை கொடுப்பது போலாகும்

தண்டனைகள் தவறுகளைப் புரியவைப்பதாகவும் அடுத்தவர் அதனைச் செய்யும் முன் சிந்திக்கவைப்பதாகவும் இருக்கவேண்டும்.

Kannan said...

எல்லாம் அரசியல்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com