Saturday, August 20, 2011

MONEY பற்றி மணி செய்திகள்




1)சென்னை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கணக்கில் காட்டாத 100 கோடி மதிப்புள்ள பொருள்களை இருப்பு வைத்திருந்ததை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.இதுதவிர கணக்கில் காட்டப்படாத 15 கிலோ தங்கம்,1.5 கோடி ரூபாய் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

2)கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்தால் நெசவாளர் சங்கங்களில் 67 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள்,கைத்தறி வேட்டிகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன

3)1.5 லட்சம் கிளைகள். அவற்றில் 90 சதவிகிதம் கிராமங்களில்..ஆம்..நாட்டின் மிகப் பெரிய வங்கியாக அஞ்சல் துறை மாற இருக்கிறது.ஏடிஎம், டெபிட் கார்ட் என்று எல்லா வசதியும் உண்டாம்.

4)பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 2010-11 ஆம் ஆண்டில் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் கவுன்ஸில் ஆஃப் கிராஜூவேட் ஸ்கூல் தெரிவித்துள்ளது.

5)இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் 55 மில்லியன் கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கான தேவை ஏற்படுமாம்.

6)கரன்ஸி நோட்டுகளில் போலியை கண்டுபிடிக்க இப்படி ஒரு வழி இருப்பது தெரியுமா?
 நோட்டுகளின் வெற்றிடத்தில் அசோக சக்கிரத்திற்கு மேல் மதிப்பிற்கேற்றபடி தொட்டு உணரும் வண்ணம் குறியீடு இருக்கும்.20 ரூபாயானால் செவ்வகமாகவும்,50 ரூபாய்   சதுரமாகவும், 100 ரூபாய் முக்கோணமாகவும், 500 ரூபாய் வட்டமாகவும், 1000 ரூபாய் டயமண்ட் ஆகவும் இந்தக் குறியீடு இருக்கும்.10 ரூபாய்க்கு இருக்காது.

7) ஆசிய கண்டத்தில் அதிக கடன் சுமை உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அதாவது மொத்த உள்நாட்டூ உற்பத்தி மதிப்பில் கடன் 68 சதவிகித பங்கு வகிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.மத்திய அரசுக்கு 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.    

7 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//55 மில்லியன் கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கான தேவை ஏற்படுமாம்.
//

வேலை வாய்ப்புக்கான தேவை? அல்லது வேலை வாய்ப்பு?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வேலைவாய்ப்புகளுக்கான தேவை...என்பதே சரி
ஆமாம்..திரும்ப சுரேஷ்..பழனியிலிருந்தா..??!!

காந்தி பனங்கூர் said...

// 2)கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்தால் நெசவாளர் சங்கங்களில் 67 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள்,கைத்தறி வேட்டிகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன //

ஒவ்வொரு நாளும் நெசவாளர்களின் துணிகளை வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு சாப்பாடு. இல்லையேல் அவர்களின் நிலமை மோசாமாகிவிடும். அதை நான் கண்கூடாக பார்க்கிறவன், அவர்களிடம் அரசாங்கம் விளையாடக்கூடாது.

goma said...

இந்த சரவணாசில்தான் வாடிக்கையாளர்களை நம்பாமல்,அவர்கள் கையில் ஒரு கார்பேஜ் பையைக் கொடுத்து அதில் அவர்களது ஹேண்ட் பேக் எல்லாம் போட வைத்து லாக் பண்ணித் தந்து விடுவார்கள்.பில் போடும் இடத்தில்தான் பையை திறக்க முடியும்.அடடா!!!இவர்களுக்குத்தான் என்ன அக்கரை வாடிக்கையாளர்கள் தவறு செய்து விடக்கூடாது என்பதில்

சைத்தான் வேதம் ஓதுவது இதுதானோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி காந்தி பனங்கூர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி priya