பல அருமையான பதிவர்களின் பதிவுகளை இப்போது படிக்கமுடிவதில்லை.
அவர்கள் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்திவிட்டு கூகிள் பஸ்ஸிற்கு சென்றுவிட்டனர்.
அதில்கூட பாதி..ஏன்..80 சதவிகிதத்திற்கு மேல் அரட்டை தான்..இப்படி உரிமையுடன் நான் எழுதியதற்கு அப்பதிவர்கள் மன்னிப்பார்கள் என எண்ணுகிறேன்.
அப்பதிவர்களின் எழுத்துத் திறமையை நான் பல நேரம் படித்து வியந்ததுண்டு..
இவர்களில் பல தி.ஜா.ரா.க்களும் சுஜாதாக்களும், ஆத்மாநாமும், மனுஷ்யபுத்திரங்களும் இருக்கிறார்கள் என எண்ணியதுண்டு.
ஆனால் அவர்கள் முழுத்திறமையையும் தங்கள் எழுத்தில் காட்டுவதை நிறுத்திவிட்டு..வெத்து அரட்டை அடிக்கச் சென்றுவிட்டார்களே என மனம் வருந்துகிறது..
இப்பதிவின் மூலம் அவர்களை மீண்டும் பதிவுலகிற்கு அழைக்கிறேன்..
மீண்டும் உங்கள் பதிவுகளை..உங்கள் வலைப்பூக்களில் இடுங்கள்.திரட்டிகளில் அவை வரட்டும்.
கண்டிப்பாக புகழின் உச்சத்திற்கு உங்களால் செல்லமுடியும்.
28 comments:
உங்கள் ஆதங்கம் வரவேற்கத்தக்கது
ரைட்டுதான்
நான் இன்னும் Buzz ல ஏறாததால் கருத்து சொல்ல தெரியவில்லை. உங்கள் ஆதங்கம் மட்டும் புரிகிறது.
நானும் பஸ் அடிக்ட் ஆகவில்லை.ஆரம்பிக்கவே இல்லை.
சில விஷயங்கள் அவரவர்கள் விருப்பம் என்று விட்டு விட வேண்டியதுதான்....எதற்குத்தான் நாம் ஆதங்கப்படுவது அவதிப்படுவது???
உங்களை அப்படியே வழிமொழிகிறேன்!
correct i am also appreciate this..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Prakash
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி shortfilmindia
வருகைக்கு நன்றி Chitra
வருகைக்கு நன்றி Goma
அந்த மனுஷ் ஆத்மாநாம் என்று சொன்னது என்னை மனசுல வெச்சுதானே சார் :))
u r rite
உண்மை உண்மை !
சார் சவுக்கியமா :))
வருகைக்கு நன்றி Sampathkumar
வருகைக்கு நன்றி கொக்கரக்கோ..!!!
ஆம்..கண்டிப்பாக..உங்களையும் மனதில் எண்ணித்தான் அசோக்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Hema
நல்ல சௌக்யம்..நீங்க எப்படியிருக்கீங்க..ஷங்கர்
அவ்வண்ணமே கோரும்!
அவ்வண்ணமே கோரும்..
RT
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ILA
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஈரோடு கதிர்
டிவிஆர் அய்யா! நீங்க சொல்வது ஒரு விதத்திலே சரி தான் எனினும் இப்போ முன்ன போல பதிவுகள் வ்ராமைக்கு காரணம் என்னன்னு கொஞ்சம் பாருங்க. இப்போ தமிழ்மணம் முகப்பிலே பாருங்க. அப்படியே ஒரு லிஸ்ட் அடுங்க.அதிலே காபி பேஸ்ட் பதிவு எத்தனைன்னு பாருங்க. முன்ன "நீ ஒரு நல்ல பதிவு எழுதினியா.. நான் வேற டாபிக்ல இன்னும் சூப்பரா எழுதுறேன் பாரு"ன்னு ஒரு போட்டி இருந்துச்சு. இப்ப என்னாச்சு. நீ ஜுவியை காப்பி பேஸ்ட் அடிக்கிறியா நான் ரிப்போர்டரை அடிக்கிறேன் என போட்டி பலமா ஆகிடுச்சு. இதை தான் வவசங்கத்திலே கூட இளா கிண்டல் அடிச்சு ஒரு போஸ்ட் போட்டாரு. ஏன்னா அவசரத்திலே உண்மைதமிழனும், சிபி செந்தில்குமாரும் ஒரே மேட்டரை ஜூவியை காப்பிபேஸ்ட் அடிச்சு ரெண்டும் வந்து வாசகர் பரிந்துரை, சூடான இடுகைன்னு வந்து நிக்குது. இதனால நிஜமா நல்லா எழுதுறவன் பதிவு எல்லாம் பாதாளத்துக்கு போயிடுது. இதல்லாம் பார்தாங்க. பஸ்க்கு, பிளஸ்க்குன்னு போயிட்டாங்க. அவனவனுக்கு வாசகர்கள், அவங்க மட்டுமே பார்க்க முடியும், இதிலே ஓட்டு இல்லை, மைனஸ் ஓட்டு இல்லவே இல்லை. பிடிச்சா ஒரு லைக்கு... போய்கிட்டே இருக்கலாம்.... மைனஸ் ஓட்டு விழுந்து மனசு கஷ்ட்டம் ஆவதுக்கு இது எவ்வளவோ மேல்னு ஆகிடுச்சு. இல்லாட்டி திரட்டிங்க திரைமணம் என பிரிச்சு போட்டு செஞ்ச மாதிரி காபி பேஸ்ட் பதிவர்களுக்கு தனி இடம் ஒதுக்கிட்டா.. இஷ்ட்டப்பட்டவன் அங்க போய் படிச்சுகிட்டும். இதை யார் சொல்வது அவங்களுக்கு???
நீங்கள் சொல்வது உண்மை..ஆனாலும்..நம் எழுத்துத் திறமையை நம் வலைப்பூவில் பதிப்போம்.படிப்பவர்கள்..படிக்கட்டும்..ஆனால் தரமானவை யாராலும் ஒதுக்கப்படாது என்றே நினைக்கிறேன்...தொல்ஸ்
:)
பழையன கழிதலும் புதியன புகுதலும்.
வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்
மிகவும் நல்ல பதிவு.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
ஆமாம்ல!! நான்கூட கடைசி இடுகை போட்டு 6 மாதத்துக்கு மேல ஆச்சு!!
(ஆனா நான் நல்ல பதிவரான்னு தெரியாது )
Post a Comment