Sunday, March 1, 2009

மட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு

(எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்)

திகதி: 02.03.2009 // தமிழீழம் // [விடியல்]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது.


இதன்போது வெல்லாவெளியிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்த 14 வயது சிறுமியை கதறக் கதற பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அச்சிறுமியின் தாயை கட்டிப்போட்டபின் தாயின் முன்னாலேயே இச்சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது. சம்பவத்தன்று அதிகாலை களுவாஞ்சிக்குடி- வெல்லாவெளிப் பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர். வீடுகளிலிருந்த ஆண்கள் அனைவரையும் ஆலயம் ஒன்றுக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கிமூலம் அறிவித்தனர்.


பின்னர் வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீட்டிலுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் வீட்டிலிருக்கின்ற பெண்களின் விபரங்களையும் அவர்களின் வயதுகளையும் கேட்டு குறித்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


5 விசேட அதிரடிப்படையினர் வந்ததாகவும் தயைக் கட்டிப்போட்டபின்னர் ஏனைய நால்வரும் வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்க ஒருவர் மட்டும் சிறுமியை கதறக் கதற வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 14 வயதுடைய வை.புனிதவதி என்ற இச்சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் 17 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


இவர் பருவமடைந்து 25 நாட்களே ஆகியிருப்பதாக இவரது தாயார் தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்ப பொது வைத்தியசாலைக்குச் சென்ற வெல்லாவெளி பொலிஸார் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இச்சிறுமியை விசாரணை செய்துள்ளனர்.


எனினும் சம்பவத்தன்று குறைந்தது 5 வீடுகளிலாவது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்களை தர வைத்தியசாலை தரப்பினர் மறுத்துவிட்டனர். ஆனால் சுற்றிவளைப்பின்போது சில வீடுகளில் இருந்து பெண்களின் கூக்குரல் சத்தங்கள் கேட்டதாகவும் உடனே அவ்விடத்திற்குச் சென்று தம்மால் பார்க்கமுடியாமல் விசேட அதிரடிப் படையினர் நிறுத்திவைக்கப் பட்டிருந்ததாகவும் வெல்லாவெளி பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக துணை இராணுவக்குழுத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையானை நேரில் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் இச்சம்பவம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பிள்ளையான் " இதற்காகத்தான் நான் சிவில் பாதுகாப்பை கேட்டிருந்தேன். கருணாதான் எல்லாவற்றையும் குழப்பினார். இப்பொழுது எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. கருணாவின் அடுத்த கூட்டத்தில் போய் கேளுங்கள்" என கூறி நைசாக நழுவிவிட்டாராம். இச் சம்பவம் மட்டக்களப்பு மக்களிடையே பெரும்பீதியை தோற்றுவித்துள்ளது.


அண்மையில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் பெண்களை சிங்கள இராணுவத்தினர் விருந்தாக்கி கொள்ளுமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

--
அன்புடன்,

தமிழன்.

27 comments:

கோவி.கண்ணன் said...

//5 விசேட அதிரடிப்படையினர் வந்ததாகவும் தயைக் கட்டிப்போட்டபின்னர் ஏனைய நால்வரும் வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்க ஒருவர் மட்டும் சிறுமியை கதறக் கதற வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 14 வயதுடைய வை.புனிதவதி என்ற இச்சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் 17 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.//

தனு, சுபா எப்படி உருவாகிறார்கள் என்பது தெரிகிறது :(

அக்னி பார்வை said...

இதற்க்கு விடிவே இல்லையா?

ச்சின்னப் பையன் said...

:-((((

T.V.Radhakrishnan said...
This comment has been removed by the author.
T.V.Radhakrishnan said...

//அக்னி பார்வை said...
இதற்க்கு விடிவே இல்லையா?//


விடைதெரியாத கேள்வி

T.V.Radhakrishnan said...

//
கோவி.கண்ணன் said...
தனு, சுபா எப்படி உருவாகிறார்கள் என்பது தெரிகிறது :(//

:-((((((

வெத்து வேட்டு said...

this is rumour or an ltte diehard fan's wish.. there is no news about it anywhere..including ltte supporting websites....
this is how "ltte's Propaganda Rapings" occur

T.V.Radhakrishnan said...

//வெத்து வேட்டு said...
this is rumour or an ltte diehard fan's wish.. there is no news about it anywhere..including ltte supporting websites....
this is how "ltte's Propaganda Rapings" occur//

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி
வெத்து வேட்டு

T.V.Radhakrishnan said...

// ச்சின்னப் பையன் said...
:-((((//
வருகைக்கு நன்றி sathya

wellwisher said...

Karpanai nallayirukku ..ippadi evvalavo kathai vendumaanaalum punaiyalaam...

குப்பன்_யாஹூ said...

உங்க கற்பனைக்கும், ஜோடித்தல் செய்திக்கும் ஒரு அளவே இல்லையா.

இனியும் தமிழக மக்கள் ஏமாற தயார் இல்லை.

விடுதலை புலிகள் தான் போரை நிறுத்தி சமாதான பேச்சுக்கு வர மறுக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிய வந்து விட்டது.

போர், ஆயுத கடத்தல் வைத்து விடுதலை புலிகள் நல்ல பணம் சம்பாதிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து வெடி மருந்துகள், ஆயுதம் கடத்தல், மீனவர்கள் மூலம் வெடி பொருட்கள் கடத்தல் எல்லாம் இப்போது தெரிய வர ஆரம்பித்து உள்ளன.

அதே போல திருமாவளவனின் நாடகமும் வெளி வந்து விட்டது. சனிக்கிழமை விடுதலை புலிகள் ஆதரவு பேச்சு , ஞாயிற்று கிழமை ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து புகைப்பட போஸ்.

குப்பன்_யாஹூ
.

Batticaloa said...

அங்கயிருந்து கொண்டு கதைக்கலாம். நண்பனே. இங்கு வந்த எங்களுடன் வாழ்ந்து பாருங்கள். ஓவ்வொரு நிமிடமும் நாங்கள் படும் வேதனைகள் அவலங்கள். எங்கள் தாய்க் குலங்களின் மனவேதனைகள் சொல்லி மாளாது. இது இப்பொழுது வெளியே வந்த செய்தி இன்னும் எத்தனையோ கொடூரமான செய்திள் வெளியே வராமல் புதைந்த கிடக்கின்றன. முதலில் வரலாற்றை படித்துவிட்டு வந்து எழுதுங்கள்.
தாயகத் தமிழன்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி wellwisher

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி குப்பன்_யாஹூ

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Batticaloa

ஜோதிபாரதி said...

எவ்வளவு கொடுமையைத் தான் தாங்குவார்கள் அந்த மக்கள்!?

T.V.Radhakrishnan said...

//ஜோதிபாரதி said...
எவ்வளவு கொடுமையைத் தான் தாங்குவார்கள் அந்த மக்கள்!?//

:-(((

புலிகேசி said...

இது மாதிரி பல பாலியல் வன்முறைகள் குஜராத்திலும் மும்பையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன

கமல் said...

என்ன செய்வது? தமிழர்களின் தலைவிதி இது தான் என்றால் அதனை இனி யாரால் தான் மாற்ற முடியும்??

’’உங்களிற்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்????

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி புலிகேசி

T.V.Radhakrishnan said...

//கமல் said...
என்ன செய்வது? தமிழர்களின் தலைவிதி இது தான் என்றால் அதனை இனி யாரால் தான் மாற்ற முடியும்??//

விடைதெரியாத கேள்வி

குடுகுடுப்பை said...

என்ன கொடுமைங்க இதெல்லாம், இதுக்கு துணை போறவங்கள என்ன சொல்றது

T.V.Radhakrishnan said...
This comment has been removed by the author.
T.V.Radhakrishnan said...

/// குடுகுடுப்பை said...
என்ன கொடுமைங்க இதெல்லாம், இதுக்கு துணை போறவங்கள என்ன சொல்றது///

:-(((

வெத்து வேட்டு said...

this news seem to be true eventhough it is appearing only ltte's media...
i think something should have happened...i hang my head in shame for unable to do anything about it and feel very sorry for that unfortunate girl...because i am a father of a young girl too...

but if it is a fabricated story ( i really wish it is just a "story" nowomen or family should experience it)
what will everyone say about ltte?

but these cordon and search are occuring because of ltte's claymore attacks in those areas.....

T.V.Radhakrishnan said...

/// வெத்து வேட்டு said...
this news seem to be true eventhough it is appearing only ltte's media...
i think something should have happened...i hang my head in shame for unable to do anything about it and feel very sorry for that unfortunate girl...because i am a father of a young girl too...

but if it is a fabricated story ( i really wish it is just a "story" nowomen or family should experience it)
what will everyone say about ltte?

but these cordon and search are occuring because of ltte's claymore attacks in those areas.....//

;-(((((

T.V.Radhakrishnan said...

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிரடிப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதான சிறுமியின் தாய் நேற்று இரவு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இவரின் வீட்டுக்கு சென்ற அதிரடிப்படையினர் சிறுமியின் தந்தையை கட்டி வைத்து விட்டு தாயை கிணற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் சிறுமியின் தாய் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தமது மகள் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக குறித்த தாய் வாக்குமூலம் வழங்கவிருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.