Thursday, March 19, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(20-3-09)

1962ல் இந்திய ஜனாதிபதியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.சிறந்த ஆற்றலும்..நிர்வாகத்திறமையும் உடைய அவர் பதவி ஏற்றதுமே தன் சம்பளத்தை கால் பங்காகக் குறைத்து புரட்சியை செய்தார்.பத்தாயிரம் சம்பளத்திற்கு பதில் 2500 தான் வாங்கினார்.வரிகள் போக அவருக்குக் கிடைத்த சம்பளம் 1900 தான்.

2.ஒரு சிறு பதிவர் புதிர்..
நர்ஸிம்மிற்கு கால் பந்து ஆடத்தெரியாது...ஹாக்கி ஆடத்தெரியும்
முரளிக்கண்ணனுக்கு கிரிக்கெட் ஆடத்தெரியாது..கால் பந்து ஆடத் தெரியும்
பரிசலுக்கு கிரிக்கெட் ஆடத்தெரியும்..ஹாக்கி ஆடத் தெரியாது
வால்பையனுக்கு ஹாக்கியும், கிரிக்கெட்டும் ஆடத்தெரியும்

வாலுடன் இரண்டு ஆட்டமாவது ஆடக் கூடியவர் யார்.

3.மூக்கறுந்த மூளி,அலங்காரி,நாக்கறுந்து தொங்கும் நரி,நாலாந்திரப் பெண்,மகுடம் பறி கொடுத்த மாயராணி,செப்படி வித்தை மாமி,மலம்,வேஷக்காரி,தெருப்பொறுக்கி,நாய்க் கொழுப்பு,பூதகி,நாய்,திமிங்கலம்..இவையெல்லாம் என்ன..என நீங்கள் சரியாக யூகித்தால்..நீங்கள் இடும்10 பதிவிற்கு பின்னூட்டம் தவறாது இடுவேன்.

4.உலகிலேயே மிகப் பெரிய வீடு புரூனே நாட்டில் தான் உள்ளது.புரூனே சுல்தானின் இல்லம்தான் அது.அதில் 1788 அறைகள் உள்ளன.இரண்டு லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் இம்மாளிகை அமைந்துள்ளது.இந்தியாவில் பெரிய வீடு...ஜனாதிபதியுடையது.இதில் 343 அறைகள் உண்டு.

5.ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.

6.கடவுள்
நல்லவர்
நல்லவர்
நமது தேகத்தில்
எந்த உறுப்பிலும்
உபயம் என்று
தன் பெயரை
அவர் எழுதவில்லை
-நெல்லை கண்ணன்

7.கொசுறு..
ஒரு ஜோக்..

தலைவர் வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
வேட்பு மனு என்று ..தான் வாங்கிய முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்

26 comments:

நாமக்கல் சிபி said...

//கடவுள்
நல்லவர்
நல்லவர்
நமது தேகத்தில்
எந்த உறுப்பிலும்
உபயம் என்று
தன் பெயரை
அவர் எழுதவில்லை
-நெல்லை கண்ணன்//

:)
சூப்பர்!

Thamiz Priyan said...

//5.ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.//
நல்ல சிந்தனை!

முரளிகண்ணன் said...

டிவிஆர் சார். தலைப்பில் நாளைக்கு தேதி இருக்கே? அட்வான்ஸ் பதிவா?

மாண்புமிகு பொதுஜனம் said...

//....3.மூக்கறுந்த மூளி,அலங்காரி,நாக்கறுந்து தொங்கும் நரி,நாலாந்திரப் பெண்,மகுடம் பறி கொடுத்த மாயராணி,செப்படி வித்தை மாமி,மலம்,வேஷக்காரி,தெருப்பொறுக்கி,நாய்க் கொழுப்பு,பூதகி,நாய்,திமிங்கலம்..இவையெல்லாம் என்ன..என நீங்கள் சரியாக யூகித்தால்..நீங்கள் இடும்10 பதிவிற்கு பின்னூட்டம் தவறாது இடுவேன்....//


ஜெயலலிதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

நாமக்கல் சிபி
தமிழ் பிரியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முரளிகண்ணன் said...
டிவிஆர் சார். தலைப்பில் நாளைக்கு தேதி இருக்கே? அட்வான்ஸ் பதிவா?//


பத்திரிகைகள் பின் தேதியிட்டு முன் வருவதில்லையா? அப்படித்தான் இதுவும்...
(ஹி..ஹி..மீசையில மண் ஒட்டலை)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாரக்கடைசிலே போட்டா..கடை ஈ ஒட்டுது..அதான் முரளி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! அத்தனையும் அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மாண்புமிகு பொதுஜனம் said...
ஜெயலலிதா?///

உங்களுக்கு பின்னூட்டங்கள் இலவசம்..
இவை அனைத்தும்...பல் வேறு அறிக்கைகளில் கலைஞர் ஜெ வை சொன்னது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

மதிபாலா said...

புதிருக்கான விடை

நர்சிம்.

விடைக்கான காரணம் ,
வாலுக்கு விளையாடத் தெரிந்த ஹாக்கி பரிசலுக்குத் தெரியாது.

வாலுக்கு விளையாடத் தெரிந்த கிரிக்கெட்டு முரளிக்கு விளையாடத்தெர்யாது.

வாலுக்கு விளையாடத்தெரிந்த ஹாக்கி நர்சிம்முக்கு தெரியும்.

ஆனால் நர்சிம்க்கு ஒருவேளை கீரிக்கெட் விளையாடத்தெரிந்தாலோ இல்லை வாலுக்கு ஒருவேளை கால்பந்து விளையாடத் தெரிந்தாலோ இருவரும் இரண்டு விளையாட்டுக்களை விளையாடலாம். ஆனால் முரளிக்கோ , பரிசலுக்கோ அந்த வாய்ப்பு இல்லை.

சரியா தல?

பின்குறிப்பு - சொல்லக்கூடாத பதில்

" எந்த விளையாட்ட வேணும்னாலும் முதல் ஆட்டம் ஆடிக்கிட்டு அப்பாலிக்கா ரெண்டாவது ஆட்டம் ஆடிக்கலாம் "

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.

புருனோ Bruno said...

//சுண்டல்..(21-3-09)//

இன்று 20-03 !!

பரிசல்காரன் said...

சுவை...!

www.narsim.in said...

தேங்காய் சூப்பர், மாங்காய் காரம் நச்,பட்டாணி அருமை..

விடை நர்சிம் என்பதை சரியாக சொல்லிவிட்டார்களா...

www.narsim.in said...

//புருனோ Bruno said...
//சுண்டல்..(21-3-09)//

இன்று 20-03 !!
//

நேற்றைய சுண்டல்னாதான் கெட்டுபோயிருக்கும்.. நாளைக்கான சுண்டலை..ஊறும்போதே கொடுத்துட்டாரு டாக்டரே

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்கு ஆடத்தெரிந்தவர் நர்ஸிம் என கண்டுபிடித்த மதிபாலாவிற்கு பாராட்டுகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

////புருனோ Bruno said...
//சுண்டல்..(21-3-09)//

இன்று 20-03 !!////

டாக்டர் சார்...முரளியின் பின்னூட்டத்திற்கு என் பதிலை பார்க்கவில்லையா? தேதியை மாற்றிவிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// பரிசல்காரன் said...
சுவை...!///

பரிசல் பின்னூட்டம்தானே..முரளி...இது?
:-)))
நன்றி பரிசல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//narsim said...
தேங்காய் சூப்பர், மாங்காய் காரம் நச்,பட்டாணி அருமை..

விடை நர்சிம் என்பதை சரியாக சொல்லிவிட்டார்களா...//

மதிபாலா சரியாக சொல்லிவிட்டார்.
வருகைக்கு நன்றி நர்சிம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// narsim said...
//புருனோ Bruno said...
//சுண்டல்..(21-3-09)//

இன்று 20-03 !!
//

நேற்றைய சுண்டல்னாதான் கெட்டுபோயிருக்கும்.. நாளைக்கான சுண்டலை..ஊறும்போதே கொடுத்துட்டாரு டாக்டரே////

:-))))

நிஜமா நல்லவன் said...

///Thursday, March 19, 2009

4.உலகிலேயே மிகப் பெரிய வீடு புரூனே நாட்டில் தான் உள்ளது.புரூனே சுல்தானின் இல்லம்தான் அது.அதில் 1788 அறைகள் உள்ளன.இரண்டு லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் இம்மாளிகை அமைந்துள்ளது.இந்தியாவில் பெரிய வீடு...ஜனாதிபதியுடையது.இதில் 343 அறைகள் உண்டு.

5.ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.///



///Friday, March 13, 2009

3.உலகிலேயே பெரிய வீடு புரூனே நாட்டில் தான் உள்ளது.புரூனே சுல்தானின் இல்லமே அது.அதில் 1788 அறைகள் உள்ளன.இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இம்மாளிகை அமைந்துள்ளது. இந்தியாவில் பெரிய வீடு ஜனாதிபதியினுடையது.இதில் 343 அறைகள் உண்டு.

5.ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு..முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.///


உங்க தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தொடர்ச்சியா படிப்பதால் கண்ணில் பட்டது...:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

தவறு நடந்துவிட்டது.எனது டயரியில் சரியாக குறித்துக்கொள்ளாததால்.வருந்துகிறேன்.
அடுத்தவாரம் இதை ஈடுகட்ட சுண்டல் சற்று அதிகமாகவே தருகிறேன்.
நீங்க நிஜமா நல்லவன்

மங்களூர் சிவா said...

/
ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.
/

well said!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா

நிஜமா நல்லவன் said...

/T.V.Radhakrishnan said...

தவறு நடந்துவிட்டது.எனது டயரியில் சரியாக குறித்துக்கொள்ளாததால்.வருந்துகிறேன்.
அடுத்தவாரம் இதை ஈடுகட்ட சுண்டல் சற்று அதிகமாகவே தருகிறேன்.
நீங்க நிஜமா நல்லவன்/


அச்சச்சோ...என்ன இது வருந்துகிறேன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க.....:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்