Sunday, March 8, 2009

ஜெ.யின் உண்ணாவிரதம்...

உண்ணாவிரதம்...சுதந்திரத்திற்கு முன் ..இதன் அர்த்தமே வேறு. அந்த நாட்களில்..தலைவரின் உண்ணாவிரதங்கள் பல சாதனைகளை படைத்துள்ளன.ஆனால் இந்த அடையாள உண்ணாவிரதம் என்பது...உண்ணாவிரதம் என்பதையே கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது.

இப்போதெல்லாம்...இந்த வார்த்தையைக் கேட்டாலே..எனக்கு..தங்கவேலுவும்...பாசமலர் படமுமே ஞாபகத்தில் வருகிறது.எம்.சரோஜாவை மணக்க தங்கவேலு..அவரது வீட்டு முன் இருக்கும் உண்ணாவிரதமிருப்பார்.அதைப்பார்த்து..விட்டு...எம்.ஆர்.சந்தானம்..பெண்ணை அவருக்குக் கொடுப்பதாகக்கூற ..தங்கவேலு உண்ணாவிரதத்தை கை விடுவார்.பின் அவரது சகாக்களான பொடியன்கள் ..சாப்பிட்டப்பொருள்களின் காலி தட்டுக்களை எடுத்துப் போவார்கள்.இதைக்கண்டதும் சந்தானம் அதிர்ச்சி அடைவார்.

(டேய்..மசால்வடை வாசனை வருதுடா.,
அண்ணே பக்கத்துகடைல போடறாங்க
கொஞ்சம் மாவை எடுத்து வைக்க சொல்லு...சாயங்காலம் 6 மணிக்கு மேல் நமக்கு போடச்சொல்லு...
இதுதான் தங்கவேலு உண்ணாவிரதம்)

அரசியல் உண்ணாவிரதங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான்...காலை 10 மணிக்கு..உண்ணாவிரதம் ஆரம்பித்து..மாலை 5 அல்லது 6 மணிக்கு முடிப்பர்.இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க ..யாரேனும் தலைவர் வந்து..பழ ஜூஸ் கொடுத்து முடித்து வைப்பார்.(???!!!!!)

அரசியல் சம்பந்தப்பட்ட ஒருவர்..ஒருமுறை சொன்னார்..'காலைல..உண்ணாவிரதத்திற்கு கிளம்பறப்போ..உப்புமாவையோ..பொங்கலையோ ஒரு பிடி பிடிச்சுட்டா...அது வயிற்றில் பொத பொதன்னு ஊறிடும்..சாயங்காலம் வரை பசி எடுக்காது.சாயங்காலம் போய் விட்டில பிரியாணி ஒரு பிடி பிடிச்சுடுவோம்' என்றார்.

சரி தலைப்புக்கு வருவோம்...

இலங்கை பிரச்னையில்..சமீப காலமாக..உண்ணாவிரதம்..போராட்டம்..மனிதச்சங்கிலி..என பல பார்த்துவருகிறோம்..இந்த நிலையில்...நேற்றுவரை...இலங்கை ராணுவத்தை தப்பு சொல்லமுடியாது என சொன்னவர்..தேர்தல் அறிவிப்பு வந்ததும் ..காங்கிரஸ்சிற்கு கூட்டணி அழைப்பு விடுத்தார்.அது நடக்காது..என்றதும்...எதைத்தின்றால்...தேர்தல் பித்தம் தெளியும்..என்று உண்ணாவிரதத்தை கையில் எடுத்துக் கொண்டார்.

இலங்கை தமிழர் பிரச்னையில்...தமிழர்கள் அனைவருக்கும்..அனுதாபம் இருந்தாலும்...அது தேர்தலில் பிரதிபலிக்கும் என நான் எண்ணவில்லை.ஏனெனில்..தமிழர்களுக்கும்..இக்கட்சிகளைவிட்டால் வேறு வழி இல்லை.

வலுவான..கூட்டணியான..தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக...இந்த முறையும் மா பெரும் வெற்றி பெறும்.வேண்டுமானால்... காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் வெற்றிப் பெரும் வாக்குகள் வித்தியாசம் குறைவாய் இருக்கலாம்.ஆனால் எவ்வழியிலும்..அ.தி.மு.க.,வெற்றிப் பெற வாய்ப்பிருப்பதாக நான் எண்ணவில்லை.

உண்ணாவிரதம்..எதையும் சாதிக்காது...

(உண்ணாவிரதம் எதையும் சாதிக்காது என்பவர்கள்..தமிழ்மணம் தம்ஸ் அப்பிலும்...தமிலிஷிலும் வாக்களிக்கவும்)

21 comments:

SurveySan said...

///இந்த அடையாள உண்ணாவிரதம் என்பது...உண்ணாவிரதம் என்பதையே கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது.///

மிகச் சரி!

"ஜெ" இதை செய்வதால், கோமாளியாகத் தான் தெரிவார்கள்.

ஆனா, இதை 'சாமான்யன்' எப்படி பாத்து என்ன புரிஞ்சுப்பான்னுதான் புரியல்ல.

ஜோதிபாரதி said...

நல்ல கருத்து!
நடுநிலையை மேற்கொள்ள ஒரு வாய்ப்பளித்த புரட்சித் தலைவி அம்மாவுக்கு உங்க சார்பா நான் நன்றி சொல்லிக்கிறேன்!

Suresh said...

ellam nadagam enna seiya namala mathiri ilangargal varanum boss !

நசரேயன் said...

//உண்ணாவிரதம்..எதையும் சாதிக்காது...//

உண்மை

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சர்வேசன்

மதிபாலா said...

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.

அவரவர்களுக்கு தகுந்த பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்......!!!!

இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளக் கூடாதென்று நடிகர்கள் அவ்வப்போது வேற ஒரு வேசத்தில் நடிப்பாங்களே அது போன்ற ஒரு வித்யாசமான முயற்சிதான் அம்மாவின் உண்ணாவிரத அட்டெம்ப்டு..

முட்டாள் மக்கள் இதையும் நம்பவே செய்வார்கள்.

புலிகேசி said...

//தமிழ்மணம் தம்ஸ் அப்பிலும்//

ஓட்டு போட்டாச்சு தேர்தல் களை கட்டிடுச்சு

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

T.V.Radhakrishnan said...

//Suresh said...
namala mathiri ilangargal varanum boss !//

repeateyyyy

T.V.Radhakrishnan said...

///நசரேயன் said...
//உண்ணாவிரதம்..எதையும் சாதிக்காது...//

உண்மை//

நன்றி நசரேயன்

T.V.Radhakrishnan said...

//மதிபாலா said
முட்டாள் மக்கள் இதையும் நம்பவே செய்வார்கள்.//

நம்ம மக்கள் திருந்துவது அவ்வளவு எளிதல்ல

T.V.Radhakrishnan said...

//// புலிகேசி said...
//தமிழ்மணம் தம்ஸ் அப்பிலும்//

ஓட்டு போட்டாச்சு தேர்தல் களை கட்டிடுச்சு////


நன்றி புலிகேசி

குடுகுடுப்பை said...

//உண்ணாவிரதம்..எதையும் சாதிக்காது...//
//

எங்க வீட்ல உண்ணாவிரதம் இருக்க சொல்றாங்க. அடிக்கடி பிரியாணி சாப்பிட்டு தொப்பை ஏறிப்போச்சு எனக்கு. என்னாலதான் முடியல.

T.V.Radhakrishnan said...

உண்ணாவிரதம் தொப்பையைக் குறைக்காது..அதற்கு உடற்பயிற்சி வேணும்

Selva said...

whatever be the motive behind J's fasting, it is a consolation to the tamils. If she catches hold of srilankan issue for the forthcoming election, the dmk alliance is sure to lose. let us wait and see.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Selva

மணிகண்டன் said...

//உண்ணாவிரதம்..எதையும் சாதிக்காது...//

பாமக கூட்டணிய கூடவா ? பாக்கலாம் நீங்க சொல்றது சரியான்னு ?

புலிகேசி said...

உங்களை சொல்லி குற்றமில்லை நீங்க கலைஞரை பற்றி எழுதினால் தான் சூடான இடுகைகளில் வருகிறது, நம் வாசகர்கள் அப்படி

T.V.Radhakrishnan said...

நன்றி மணிகண்டன்

T.V.Radhakrishnan said...

/// புலிகேசி said...
உங்களை சொல்லி குற்றமில்லை நீங்க கலைஞரை பற்றி எழுதினால் தான் சூடான இடுகைகளில் வருகிறது, நம் வாசகர்கள் அப்படி///

:-)))))))

மங்களூர் சிவா said...

/
'காலைல..உண்ணாவிரதத்திற்கு கிளம்பறப்போ..உப்புமாவையோ..பொங்கலையோ ஒரு பிடி பிடிச்சுட்டா...அது வயிற்றில் பொத பொதன்னு ஊறிடும்..சாயங்காலம் வரை பசி எடுக்காது.சாயங்காலம் போய் விட்டில பிரியாணி ஒரு பிடி பிடிச்சுடுவோம்'
/

ஆஹா அற்புதம்!!