இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் வரிசையில் முதலில் இருந்தவர் லல்லூவின் தர்மபத்தினி ராஃப்ரி தான்.,நம் கலைஞருக்கு பணக்கார முதல்வர் வரிசையில் இரண்டாம் இடமே கிடைத்தது.
சாமர்த்தியசாலிகள் என்று பார்த்தாலும்...கலைஞர் இரண்டாம் இடமே வருவார் போலயிருக்கிறது.
பீகாரில் வரும் நாடாளுமன்ற தேர்தலில்...தொகுதி ஒதிக்கீடு எப்படி செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
மொத்த இடங்கள் 40.லல்லுவிற்கு 25 இடங்கள்...பாஸ்வான் கட்சி 12 இடங்கள்..காங்கிரஸிற்கு 3 (!!) இடங்கள். இந்த காங்கிரஸ் தான்...பழம் பெருமையை பேசிக்கொண்டு..நூற்றாண்டுகண்ட..அகில இந்திய கட்சி. லல்லுவால் 3 இடங்கள் பிச்சை போடப்பட்டுள்ளது.
பெரிய மாநிலமான உ.பி.யில் கூட தேர்தல் உடன்பாடு எட்டா நிலையில்..மாயாவதியுடனும்,முலாயுடனும்..போட்டி போடவேண்டிய நிலை.ஆகவே இங்கும் காங்கிரஸ் வெற்றி பெரும் இடங்கள் இம்முறை கணிசமாக குறையும்.
லல்லுவின் தைரியம் கலைஞருக்கு வராது..அப்படி வருமேயாயின்..காங்கிரஸிற்கு வெற்றிலைப் பாக்குடன் காத்திருக்கிறது அ.தி.மு.க.,ஆகவே இங்கு பெரும்பாலான இடங்கள் காங்கிரஸிற்கு தி.மு.க.வால் ஒதுக்கப்படும்.
ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி...தேர்தலுக்குப் பின் அமையுமேயாயின்...கட்சிக்கு 3 இடங்களே (இதில் எவ்வளவு வெற்றி பெறுமோ) கொடுத்த லல்லுவிற்கு பரிசாக ரயில்வே மீண்டும் கொடுக்கப் படும்.
இப்படியெல்லாம் ஆகும்..என்று தெரிந்துதான் அன்றே கட்சியை கலைத்துவிட காந்தி சொன்னாரோ?
6 comments:
நல்ல அவதானிப்பு!
நன்றி ஜோதி
நல்ல சிந்தனை
நன்றி மதிபாலா
//லல்லுவிற்கு பரிசாக ரயில்வே மீண்டும் கொடுக்கப் படும்.//
ஆமா..ஆமா
////நசரேயன் said...
//லல்லுவிற்கு பரிசாக ரயில்வே மீண்டும் கொடுக்கப் படும்.//
ஆமா..ஆமா////
:-)))))
Post a Comment