Tuesday, March 10, 2009

தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..

நிலவரி ரத்து, இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன்,தவிர அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்..ஆறாவது ஊதியக்குழுவின் இடைக்கால நிவாரணமாக 4500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் மட்டும் 15 லட்சம் இருப்பர்.

குடிநீர் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு என 3849 கோடி செலவிடப்பட்டுள்ளது..இவர்கள் எண்ணிக்கை 3.4 கோடி.,

மெட்ரோ ரயில், சிறந்த பேருந்து போக்குவரத்து..வெள்ள நிவாரணம், இலவச டி.வி., என நகர்ப்புற மக்கள் வாக்கு 2.7 கோடி

வெளி மார்க்கெட்டில் அரிசி 35 ரூபாய் விற்கும் நிலையில் ரேஷனில் 1 ரூபாய்க்கு போடப்படுகிறது..இது பொருளாதார நிலையில் பின்தங்கியவர் ஆதரவை பெருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று இலவசங்கள் சாதனையைப் படைக்கும்..தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.மேலும் பா.ம.க., எப்போதும் வெற்றி பெறும் கூட்டணியையே விரும்பும்...ஆகவே கடைசி நேரத்தில்..அவர்களும் இந்த அணியிலேயே தொடர்வர்..விஜய்காந்தையும் இந்த அணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

இலங்கை பிரச்னை பிரமாதமாக ஓட்டளிக்கும் போது மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.

மேலும் ..இன்று அனைத்துக் கட்சிகளுமே...இதை வைத்து அரசியல் செய்துக்கொண்டிருக்கும் நிலையில்...கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.

இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை.

24 comments:

முரளிகண்ணன் said...

சார். இது ஏதோ உள்குத்து போல தெரியுதே

கோவி.கண்ணன் said...

//தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு.. //

திருவோ(ட்)டு, அதாவது திருவாளர்கள் தரப் போகும்....

கோவி.கண்ணன் said...

இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு (ஏ)மாற்று இல்லை.

- ஒரு எழுத்து குறைந்தது !
:)

குடுகுடுப்பை said...

எனக்கு ஓட்டு இல்லை என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

T.V.Radhakrishnan said...

உள்குத்து..வெளிகுத்து எதுவுமில்லை முரளி...இன்றைய யதார்த்த நிலை இதுதான்

T.V.Radhakrishnan said...

///கோவி.கண்ணன் said...
//தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு.. //

திருவோ(ட்)டு, அதாவது திருவாளர்கள் தரப் போகும்....////தரப்போகும்.....????

T.V.Radhakrishnan said...

மத்திய ஆட்சி என்பதை மனதில் இருத்தி வேறு மாற்று என்ன என்று சொல்லுங்கள் கோவி

T.V.Radhakrishnan said...

வருங்கால முதல்வர்...ஒட்டுரிமை இல்லையெனில் எப்படி

கோவி.கண்ணன் said...

//திருவோ(ட்)டு, அதாவது திருவாளர்கள் தரப் போகும்....////தரப்போகும்.....திருவோ(ட்)டு !

:)

குப்பன்_யாஹூ said...

அப்போ இலங்கை தமிழர்க்கு காங்கிரஸ் தி மு க சர்க்கார் பண்ணிய துரோகம் எல்லாம் மறப்போம் மன்னிப்போமா, உடன்பிறப்பே,

T.V.Radhakrishnan said...

அப்போது பி.ஜெ.பி.,க்கு .த் தான் வாக்களிக்க வேண்டும்..அவர் உங்கள் தொகுதியில் நிற்கவில்லையென்றால்...அறுதி பெரும்பான்மை வரவில்லையெனில்...
நமக்கு வேறு சான்ஸ் இல்லை குப்பன்சார்...மத்தியில் ஸ்திர ஆட்சி வேண்டும்...இல்லையெனில்...

T.V.Radhakrishnan said...

/// கோவி.கண்ணன் said...
//திருவோ(ட்)டு, அதாவது திருவாளர்கள் தரப் போகும்....////தரப்போகும்.....திருவோ(ட்)டு !

:)///

the begger has no choise

ராஜ நடராஜன் said...

40/40 கனவு ஒரு கட்சிக்கும் கிட்டப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

சிவாஜி த பாஸ் said...

தமிழனை அவ்வளவு முட்டாளாக கருத முடியாது, பார்ப்போம்!

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

T.V.Radhakrishnan said...

தமிழன் என்றாலே அரசியல்வாதிகளுக்கு இ.வா., தானே
சிவாஜி த பாஸ்

புலிகேசி said...

வெரிகுட், வெரிகுட், நான் இதை ஒரு 10 பேருக்காவது ஃபார்வேர்ட் செய்ய போகிறேன்

T.V.Radhakrishnan said...

நன்றி புலிகேசி

திலீபன்- said...

ராதா இதை விட 1996-ல் அதிகம் செய்தார் ஆனால் 2001-ல் தமிழக மக்கள் கருணாநிதிக்கு கொடுத்ததோ தோல்வி. இம்முறை அம்மையாரின் ஆட்சியில் இருந்த பிண புழுக்கத்தை விட கருணாநிதியின் ஆட்சியில் அதிகம், அதுவும் அனைத்தும் கொள்கைக்காக விழுந்த பிணங்கள். காவு வாங்காமல் விடாது.

T.V.Radhakrishnan said...

அந்த சமயத்தில் அமைந்த கூட்டணி பலஹீனமானது..திலீபன்
என் பதிவே...இதைவிட்டால் வேறு வழியில்லை என்பதுதான்.

நசரேயன் said...

உண்மையைத்தான் சொல்லுறீங்களா !!!!!!

அது சரி said...

//
இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை.
//

சும்மா காமெடி பண்ணாதீங்க சார்....சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது! :0))

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.Radhakrishnan said...

////அது சரி said...
//
இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை.
//

சும்மா காமெடி பண்ணாதீங்க சார்....சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது! :0))////


அது சரி