Tuesday, March 3, 2009

தங்கமணிகளும்...தங்கமும்...

தங்கத்தின் மீது ஆசை கொள்ளாத தங்கமணிகள் இருக்க முடியாது.தங்கமான மனது என்கிறோம்.பெண்ணுக்கு புன்னகை மட்டும் அழகில்லை...அவள் அணியும் பொன் நகையும் அவர்கள் அழகைக் கூட்டுகிறது.பெண்களின் பெயர்கள் கூட..தங்கம்,சொர்ணம்,பொன்னு..என்றெல்லாம் வைக்கப்படுகிறது. தமிழ்க்கவிஞர்களும்..நிலவைக்கூட தங்கநிலவு என்று வர்ணிக்கிறார்கள்.தங்கம்..நம் தினசரி வாழ்வில்..நுழைந்து விட்டது.

தங்கம் ...சமீப காலங்களில்..நமக்கு எட்டாக்கனியாக ஆகிக்கொண்டிருக்கிறது.உலகளவில் உயர்ந்துக்கொண்டிருக்கிறது.உலகில் என்ன மாறுதல் நடந்தாலும்..அது தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கிறது.

முன்பெல்லாம்..ஒரு நாட்டின் உள்ள தங்க இருப்பை வைத்துத்தான் அந்நாட்டு பொருளாதாரமே மதிப்பிடப்பட்டது. இப்பழக்கத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன் மாற்றினார்.

அப்போதுதான்...தங்கத்தின் மதிப்பீடு பின்னுக்குப் போய். கரன்ஸி மதிப்பீடே நாட்டின் பொருளாதார மதிப்பீடாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தியாவில் கூட..அதற்குப் பின்னர்தான் 'எவ்வளவு சதவிகிதம் கரன்ஸி நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதோ..அதில் குறிப்பிட்ட சதவிகிதம்..தங்கம் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டும்' என்ற முறை வந்தது.

தங்க நகைகளை வாங்கும்... சாமான்யர்கள்...ஒரு முதலீடாகத்தான் நினைத்து வாங்குகிறார்கள்.அதனால்தான் பெண்கள் கல்யாணமாகிப் போகும்போதும்.. ஏற்படப்போகும் எதிர்பாராத செலவுகளுக்காக ..பாதுகாப்பாக நகைகளை..முடிந்த அளவிற்கு கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.ஆனால்...அதுவே..கல்யாணம் என்றால் நகைகள் என்பது கட்டாயம் ஆகி விட்டது.

இன்றைக்கு...உங்க கோல்டு கவுன்சில் கூற்றுப்படி ..தங்க உபயோகத்தில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.

ஆம்...இன்றைய நிலையில் தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமா?

இல்லை என்கிறது ஒரு தரப்பு.இவர்கள் தங்களிடம் உள்ள நகைகளில் ஒரு பகுதியை விற்று..லாபம் பார்க்கிறார்கள் இன்று.

இன்னொரு தரப்போ..என்ன விலை விற்றால் என்ன? சேதாரம் எவ்வளவு சதவிகிதம் இருந்தால் என்ன? தயாரிப்பு விலை என்னவானால் என்ன? என்றெல்லாம் எண்ணாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த சேதார விஷயத்தைப் பாருங்கள்...

இன்று சவரன் விலை 1400 என வைத்துக்கொண்டால்..அதை நகையாக வாங்கும் போது 20 சதவிகிதம் சேதாரம் என்கிறார்கள்..விலையிடும்போது.அதாவது 280 ரூபாய்., அப்போது..சந்தை விலை 1400 என்றாலும் ..நாம் கொடுப்பது 1680 ரூபாய் என்பதை மறக்கக்கூடாது.

18 comments:

ஜோதிபாரதி said...

பொன்னகையையும், புன்னகையையும் பற்றிய பதிவு அருமை!
நானும் போட்டேன் ஒரு பதிவு இப்படி!

http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_21.html

புருனோ Bruno said...

விலையை பார்த்தால் பயமாக வருகிறது

கோவி.கண்ணன் said...

தங்கம் விலை உயர்வு (பகல்)கொள்ளையர்களுக்கு (நகை விற்பனையாளர்கள் என்று வைத்துக் கொண்டாலும் சரி) மகிழ்ச்சியாக இருக்கும் !

T.V.Radhakrishnan said...

//ஜோதிபாரதி said...
பொன்னகையையும், புன்னகையையும் பற்றிய பதிவு அருமை!
நானும் போட்டேன் ஒரு பதிவு இப்படி!

http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_21.html//


படித்தேன் உங்கள் பதிவையும்.நன்றாக இருக்கிறது.வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

கோவி.கண்ணன் said...

ஆ.......த......ங்........க........ம் ஆகிடும் போல விலை உயர்வு

goma said...

அடுத்த மாதம் வருகிறது அஷ்யதிருதி...அப்போ பாருங்கள் இந்த தங்கமணிகள் அடிக்கப் போகும் கூத்துகளை....

T.V.Radhakrishnan said...

// புருனோ Bruno said...
விலையை பார்த்தால் பயமாக வருகிறது//

ஆமாம் டாக்டர்

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
தங்கம் விலை உயர்வு (பகல்)கொள்ளையர்களுக்கு (நகை விற்பனையாளர்கள் என்று வைத்துக் கொண்டாலும் சரி) மகிழ்ச்சியாக இருக்கும் !//
நகை விற்பனையாளர்கள் பகல் கொள்ளையர்தான் கோவி.

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
ஆ.......த......ங்........க........ம் ஆகிடும் போல விலை உயர்வு//

:-))))

T.V.Radhakrishnan said...

//goma said...
அடுத்த மாதம் வருகிறது அஷ்யதிருதி...அப்போ பாருங்கள் இந்த தங்கமணிகள் அடிக்கப் போகும் கூத்துகளை....//

அதைப்பற்றியும் ஒரு பதிவு போட்டுடுவோம் goma

கோவி.கண்ணன் said...

தங்கமணியிடம் புன்னகை இருக்க பொன்னகை எதற்கு ? என்று தத்துவ முத்து உதிர்த்தால் என்ன ஆகும் ?

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
தங்கமணியிடம் புன்னகை இருக்க பொன்னகை எதற்கு ? என்று தத்துவ முத்து உதிர்த்தால் என்ன ஆகும் ?//

அந்த அனுபவம் எனக்கில்லை...உங்களுக்கு கோவி

வண்ணத்துபூச்சியார் said...

நமது சமுதாயத்தில் வாங்கும் பெரும்பாலான லஞ்சபணத்தில் தங்கம் மட்டுமே வாங்கி குவிக்கிறார்கள்.

சென்னையில் உள்ள நிறைய கடைகளுக்கு பல அதிகாரிகள் ரெகுலர்{weekly, monthly) கஸ்டமர்.

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி
வண்ணத்துபூச்சியார்

அக்னி பார்வை said...

அட போங்க சார் நாட்ல பல பேர் சோறே இல்லாம்ல் த்விக்கிறான் நீங்க தங்கத்தை பத்தி சொல்றீங்க

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி

அக்னி பார்வை

குடுகுடுப்பை said...

இந்தியாவில் கூட..அதற்குப் பின்னர்தான் 'எவ்வளவு சதவிகிதம் கரன்ஸி நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதோ..அதில் குறிப்பிட்ட சதவிகிதம்..தங்கம் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டும்' என்ற முறை வந்தது.//

பச்சை நோட்டுக்கு மட்டும் விதிவிலக்கு.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை