Wednesday, March 25, 2009

வாலி என்னும் வாலிப கவிஞன்

திரையுலக முடிசூடா கவிஞனாக கண்ணதாசன் இருந்த போது உள்ளே நுழைந்தவர் வாலி.

குதப்ப கொஞ்சம் வெற்றிலை, சீவல் ..எழுத பேப்பர்..பேனா கிடைத்தால் போதும்...சுற்றுப்புறம் பற்றி கவலையில்லை.. கவிதை எழுத ஆரம்பித்து விடுவேன் என்பார் இவர்.ஒவியன் ஆகணும்னு சின்ன வயசிலே ஆசை..அப்போ விகடன்ல மாலின்னு ஒரு ஓவியர் இருந்தார்..அவர் மாதிரி புகழ் பெறணும்னு வாலி ன்னு என் நண்பன் எனக்கு புனைப்பெயர் வைச்சுட்டான்..என்கிறார்..ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற பெயர் கொண்ட வாலி.

திருச்சி வானொலியில் வேலை செய்துக்கொண்டிருந்த இவரை..டி.எம்.எஸ்., சென்னைக்கு வந்துடு என்றாராம்.

எம்.ஜி.ஆருக்கு..ஓடும் மேகங்களே.வும்...நான் ஆணையிட்டால் எழுதும் போதே...மச்சானைப் பார்த்தீங்களா எழுதினேன்.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு..சிக்கு புக்கு ரயிலே..எழுதினேன்..யுவனுக்கு தத்தை தத்தை
எழுதினேன்.என்னை கிராஸ் பண்ணாமல் எந்த புயலும்...தென்றலும் செல்லமுடியாது என்கிறார்.

என் பாட்டை தத்தா ரசித்தார்,அப்பா ரசித்தார்,மகன் ரசித்தான்..இப்போது பே
ரனும் ரசிக்கிறான் என்கிறார் 78 வயது இளைஞரான இவர்.

விருதுகளைப் பற்றிக் கூறுகையில்...எழுதுகிற பாட்டுக்கு ரெமெனரேஷன் கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பேன்,,ரெககனைசேஷன் எதிர்பார்க்க மாட்டேன் என்கிறார்.

அம்மா என்று அழைக்காத பாட்டுக்கு கிடைத்த பாராட்டுகளை விட விருது என்ன பிரமாதம்..என்கிறார்.

இவர் ஆத்திகமா..நாத்திகமா என்றால்...'நான் நாத்திகன்னு எந்த இடத்திலும் வேஷம் போடலை.திராவிட இயக்கக் கொள்கைகள் பிடிக்கும்...கடவுள் இல்லை ங்கிற ஒரு கருத்தில் மட்டுமே பெரியாரிடத்தில் எனக்கு வேறுபாடு' என்கிறார் பளீச்சென்று.

அரசியல் ஈடுபாடு பற்றி கூறுகையில்..கண்ணதாசன்தான் இதிலும் எனக்கு குரு என்கிறார்...

அரசியலுக்குப் போனதால் என்னவெல்லாம் இழந்தேன் என்று அவர் எனக்கு பலவற்றைக் கூறியுள்ளார்.எனக்கு மூன்று அறிவுரை சொன்னார்..சொந்த படம் எடுக்காதே, புலனடக்கம் முக்கியம், அரசியல்வாதிகளிடம் நட்பாய் இரு..அரசியல்வாதி ஆகிவிடாதே..அம்மூன்று அறிவுரையும் இன்றும் ஃபாலோ செய்கிறேன்.

வாலி என்னும் இவ் வாலிப கவிஞரை கொள்ளுபேரனும் ரசிக்கட்டும்.

(வாலியின் பத்திரிகை பேட்டிகளின் தொகுப்பு)

12 comments:

ஜோதிபாரதி said...

//அம்மா என்று அழைக்காத பாட்டுக்கு கிடைத்த பாராட்டுகளை விட விருது என்ன பிரமாதம்..என்கிறார்.//

அம்மா என்றால் அன்பு!
இவர் எழுதி ஜெயலலிதா(அம்மு) பாடிய பாடல் ஞாபகம் இருக்கிறதா ஐயா!?

narsim said...

எனக்குப் பிடித்த கவிஞர்களில் முதலிடம் வாலிக்குத்தான்.. வார்த்தை விளையாட்டுகளில் அள்ளுவார்.

வாலி நீடுழி வாழி..

T.V.Radhakrishnan said...

//ஜோதிபாரதி said...
அம்மா என்றால் அன்பு!
இவர் எழுதி ஜெயலலிதா(அம்மு) பாடிய பாடல் ஞாபகம் இருக்கிறதா ஐயா!?//

அம்மா சம்பந்தபட்ட பாடாலாயிற்றே! மறக்கமுடியுமா? பாருங்கள் பதில் சொல்லும்போதே ..கலைஞரும் ஞாபகம் வந்துட்டார்.(மறக்கமுடியுமா?)

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நர்சிம்...

நையாண்டி நைனா said...

/*எனக்குப் பிடித்த கவிஞர்களில் முதலிடம் வாலிக்குத்தான்.. வார்த்தை விளையாட்டுகளில் அள்ளுவார்.

வாலி நீடுழி வாழி..*/

என் உள்ளத்தில் உள்ளதை ஒரு புள்ளி கூட மாறாமல், அண்ணன் நரசிம் கூறிவிட்டார்.

மோனி said...

அடச்சே ...
வாலியைப் பற்றி பதிவெழுதிய
நீவிர் வாழி-ன்னு
நான் எழுதலாம்னு நெனைச்சேன்.
நர்சிம் முந்திக்கிட்டார்.

பரவாயில்லை

T.V.Radhakrishnan said...

//நையாண்டி நைனா said...
என் உள்ளத்தில் உள்ளதை ஒரு புள்ளி கூட மாறாமல், அண்ணன் நரசிம் கூறிவிட்டார்.//

நைனா நீடுழி வாழி..

T.V.Radhakrishnan said...

///மோனி said...
அடச்சே ...
வாலியைப் பற்றி பதிவெழுதிய
நீவிர் வாழி-ன்னு
நான் எழுதலாம்னு நெனைச்சேன்.
நர்சிம் முந்திக்கிட்டார்.

பரவாயில்லை//

நீவிர் வாழி

பரிசல்காரன் said...

@ நர்சிம்

சொல்லவேல்ல?

நான் வாலி கட்சி. சாகறதுக்குள்ள (நான்) ஒருதடவை பார்த்து அவரோட கால்ல விழுந்துட்டு வரணும்!

புதுச்சேரியில் மிக அருமையான ஒரு விழாவை தன் தமிழால் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கையில் ஒருவர் கேட்டாராம்.. “இங்கே இப்படி இலக்கியம் பேசுகிற நீங்கள்.. அங்கே டாலாக்கு டோல் டப்பிம்மாவென எழுதுவதேன்' என்று. சட்டெனச் சொன்னார் வாலி.. “இங்கே வண்ணத்தமிழ்ப் பிள்ளைக்குப் பாலூட்டும் தாய்... அங்கே விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்”

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பரிசல்...சென்னை வாருங்கள்...வாலியை சந்திக்க இருவரும் முயல்வோம்

ஜோதிபாரதி said...

//நான் வாலி கட்சி. சாகறதுக்குள்ள (நான்) ஒருதடவை பார்த்து அவரோட கால்ல விழுந்துட்டு வரணும்!//

அது சரி!
நுண்ணரசியலை பிராக்கெட் போட்டு அழகா மறைச்சு வச்சிருக்கிய பரிசல்!
சூப்பர்!

T.V.Radhakrishnan said...

//ஜோதிபாரதி said
அது சரி!
நுண்ணரசியலை பிராக்கெட் போட்டு அழகா மறைச்சு வச்சிருக்கிய பரிசல்!
சூப்பர்!//

பரிசல்!
சூப்பர்!