நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததுமே..நமது அண்ணாசாமி...இம்முறை எப்படியும் நாடாளுமன்றத்தில் நுழைந்து விட வேண்டும் என தீர்மானித்தார்.அதற்கு..என்ன செய்வது என யோசித்தவர்
உடன்..அண்ணாசாமி என்ற திராவிட முன்னேற்ற கழகம்(அ.எ.தி.மு.க.) என்று கட்சிக்கு பெயரிட்டு..தன் கட்சி கூட்டணிக்கு தயார் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.உடன் மற்ற கட்சிகளில் நடந்த விவரங்கள்.
கலைஞர்...தன் கட்சியின் மூத்த தலைவர்களை அறிவாலயத்திற்கு கூப்பிட்டு அவசர ஆலோசனை நடத்தினார்.ஆற்காட்டார்..அண்ணாசாமியை கூட்டணியில் இழுத்துப் போட்டால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அவரது ஜாதி ஓட்டுகள் நமக்கு விழும் என்றும்..சில தொகுதிகளில் அது நமக்கு வெற்றிவாய்ப்பை அளிக்கும் என்றும் கூற..யார் எது கூறினாலும் ஆமோதிக்கும் அன்பழகனும் ஆமோதித்தார்.அண்ணாசாமிக்கு வேண்டுமானால்..ஒரு தொகுதி..குறிப்பாக..விழுப்புரம் கொடுத்து விடலாம்.தே.தி.மு.க.மற்றும் பா.ம.க.,விற்கு போட்டியாய் இருக்கும்.அந்த தொகுதி வெற்றிப்பற்றி நமக்கு கவலையில்லை..என பொன்முடி கூற,..விஷயம் அண்ணாசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.அண்ணாசாமிக்கு, மனைவியும்,3 மகனும், 2 மகளும் இருப்பதால் ,அவர் 7..தொகுதிகள் கேட்டார்.
இந்நிலையில்..அவரை அ.தி.மு.க., தொடர்பு கொண்டது...2 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறியது..ஆனால் அண்ணாசாமி..7 தொகுதியில் ஸ்ட்ராங்காய் இருந்ததால்..பேச்சு வார்த்தை தொடர்கிறது.தனது பிடிவாதத்தை சற்று தளர்த்திக் கொண்ட அண்ணாசாமி 6 தொகுதிகளும்...ராஜ்ய சபா 1 சீட்டிற்கும் ஒப்புக்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே...வாரம் இருமுறை வரும் தமிழ் புலனாய்வு பத்திரிகை ஒன்று...அண்ணாசாமி.அ.தி.முக.,கூட்டணியில் இணைந்து விட்டதாக தெரிவித்தது.மற்றொரு பத்திரிகை..தி.மு.க., கூட்டணியில் அண்ணாசாமி இணைவது உறுதி என எழுதியது.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவோ..அண்ணாசாமி..தங்கள் கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார்.
அண்ணாசாமிக்கோ...வழக்கம் போல சந்தேகம் ஏற்பட்டுவிட்டது..நிஜமாகவே நாம ஏதாவது கூட்டணியில் இணைந்து விட்டோமோ என்று.
உறுமீன் வர காத்திருந்த தனித்து விடப்பட்ட பா.ஜ.க., சரத்குமாருக்கும்..ராதிகாவிற்கும் ஒதுக்கியது போக மீதம் உள்ள புதுச்சேரியையும் சேர்த்து 38 தொகுதியையும் அண்ணாசாமிக்கு கொடுப்பதாகக் கூறி அவருக்கு அழைப்பு விடுத்தது.
அண்ணாசாமியும்..தன் மனைவி..மக்கள் உள்ள பொதுக்குழுவைக் கூட்டி..நாளை முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம்..ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.
5 comments:
அ.எ.தி.மு.க. வா? இத என்னோட லிஸ்ட்ல சேக்கவே இல்ல T.V.R. அண்ணே....
பேசாம மக்களோடயும் தெய்வத்தோடயும் கூட்டணி வச்சுக்க சொல்லி அண்ணாசாமிக்கு அறிவுரை
கூறுகின்றேன்...(மறைமுகமா "கேப்டன் " கூட கூட்டணி வச்ச மாதிரி ஆயிடும்முல)..
வருகைக்கு நன்றி டக்ளஸ்
இதுல உள்குத்து எதுவும் இல்லையே?
இதுல உள்குத்து எதுவும் இல்லையே?
உள்குத்து எதுவும் இல்லை
:-))))
Post a Comment