Friday, March 13, 2009

எனது ஆஸ்பத்திரி டயரி குறிப்பு...

7-3-09 சனியன்று...இரவு 10 மணி...திடீரென...எனக்கு தலைவலி..

அதற்கு முந்தய தினம்..என்..தாய் தமிழில் வந்த..இலக்கியச்சுவை மிக்க நாவல் ஒன்றை விடாமல் 5 மணி நேரம் படித்ததால் இருக்குமோ? என எண்ணினேன்.நேரம் ஆக ஆக..வலியால் துடிக்க தொடங்கினேன்.என் வேதனையை உணர்ந்துக் கொண்ட..எங்க வீட்டு அம்மா... என் தம்பிக்கு தகவல் தர..நள்ளிரவு என்றும் பாராது ஓடோடி வந்தான் என் தம்பி.தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..என்று என் அண்ணா அடிக்கடி கூறும் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன...எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.அதற்குள் ஆம்புலன்சும் வர..நான் நகரின் மையத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன்.

8-3-09 ஞாயிறு...01-30...டூடி மருத்துவர் வந்து என்னை பார்வையிட்டார். என்ன நினைத்தாரோ...உடனே ஒரு நர்ஸைக் கூப்பிட்டு..உடனடியாக பி.பி., பிளட், சுகர் டெஸ்ட் எடுக்கச்சொன்னார்.நான் தலைவலி தாங்காமல் 'ஐய்யோ' எனகத்தினேன்.

உடன் எனக்கு ஒரு பெயின் கில்லர் ஊசி போடப்பட்டது..நான் உறங்கிப்போனேன்.

காலை 7 மணி...சீஃப் டாக்டர் ஒருவர் ..ஒரு தலைவன் தொண்டர்கள் சூழ வருவது போல ஒரு கூட்டத்துடன் வந்தார்..எல்லோரும் ..தமிழர்கள்..என்னைப் பற்றியும்...என் தலைவலிப் பற்றியும் தங்களுக்குள் ஏதோதோ ஆங்கிலத்தில் பேசினர்.

உடன்..என்னை..ஸ்கேன் பண்ண அழைத்துப் போயினர்.வலி தாங்காமல் கூக்குரலிட்டேன்.ஸ்கேன் மிஷினில் சென்றேன்..

தில்லியில் இருந்து..
தங்கம் என் உடல்நிலை விசாரித்தார்.சில மருந்துகள் தர..என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

கண் விழித்த போது..என்னைச் சுற்றி உறவினர் கூட்டம்.ஏதோ ஆபரேஷன் செய்யப் போகிறார்களாம்...பயப்படாதீர்கள் என பயந்த படியே கூறினார்கள்.ஆனால் தலைவலிக்கு..ஏன் கார்டியாலிஜிஸ்ட்,நெப்ராலிஜிஸ்ட்,நியூராலிஜிஸ்ட்,ஆர்த்தோ,எல்லாம் வந்தார்கள் என தெரியவில்லை.

பின்..ஒரு பிரபல மருத்துவர் வரவழைக்கப்பட்டார்..அவர் என்னை ஆராய்ந்தார்.,பின்...இது வெறும் தலைவலிதான்...எனக்கூறி சில மருந்துகள் கொடுத்தார்.

9-3-09 காலை 7 மணி...அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை இரண்டுநாளாக என் பக்கத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்த என் மகள் எழுப்பி...இன்று மாலை டிஸ்சார்ஜ் என மருத்துவர் கூறியதாகக் கூறினார்.

மாலை நான் வீடு திரும்பினேன்.

(டிஸ்கி...இந்த பதிவு ..யாரையும் குறிப்பிடுவது அல்ல..என தெரிவித்துக் கொள்கிறேன்)

25 comments:

மணிகண்டன் said...

இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பியதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே !

இய‌ற்கை said...

oh..take care of ur health..

ithoda thappicheegalennu santhosappadunga

narsim said...

டிஸ்கி வேற.. ஹும்ம்.. காலைல பேப்பர பாக்கும் போதே நெனைச்சேன் ஸார்.. கலக்கல்

Rajaraman said...

இதோட தொடர்ச்சி எப்போ வரும். (பாவம் தாத்தா விட்டுவிடுங்கள்)

T.V.Radhakrishnan said...

///மணிகண்டன் said...
இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பியதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே !///


நன்றி மணி..ஆனாலும் ஒரு மாதம் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார்

!!!!!!

T.V.Radhakrishnan said...

/// இய‌ற்கை said...
oh..take care of ur health..

ithoda thappicheegalennu santhosappadunga///

????!!!!!

T.V.Radhakrishnan said...

//narsim said...
டிஸ்கி வேற.. ஹும்ம்.. காலைல பேப்பர பாக்கும் போதே நெனைச்சேன் ஸார்.. கலக்கல்//

நன்றி narsim

T.V.Radhakrishnan said...

//Rajaraman said...

இதோட தொடர்ச்சி எப்போ வரும். (பாவம் தாத்தா விட்டுவிடுங்கள்)
தாத்தா விட்டுவிடுங்கள்)//

பாவம் விட்டுவிடுங்கள்

மதிபாலா said...

எந்தப் பிரச்சினையும் இன்றி வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி.

ச்சின்னப் பையன் said...

எந்தப் பிரச்சினையும் இன்றி வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி.

நசரேயன் said...

ஐயா, நீங்க நலமாய் வீடு திருப்பியதில் மகிழ்ச்சி

ILA said...

எங்கள் பிராத்தனை என்றும் உண்டு.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி.
மதிபாலா
ச்சின்னப் பையன்
நசரேயன்
ILA
.நீங்கள் எல்லாம்..தமிழ் தினசரி பார்ப்பதில்லை என எண்ணுகிறேன்.எனக்கு ஒன்றுமில்லை நான் நலமாய் இருக்கிறேன்.

இய‌ற்கை said...

ippo than purinthathu..:-)))))

அபி அப்பா said...

\\ இய‌ற்கை said...
oh..take care of ur health..

ithoda thappicheegalennu santhosappadunga
\\

அட ஒருபச்ச மண்ணு இந்த இயற்கை புள்ள! தம்பி ராதா இப்படி அனியாயமா வெள்ளேந்தியா இருக்கும் இந்த புள்ளக்காவது நீனு இனி நல்ல பதிவா போடுப்பா:-)))

T.V.Radhakrishnan said...

//இய‌ற்கை said...
ippo than purinthathu..:-)))))//

:-))))
ஆனாலும் தங்கள் மனிதநேயத்திற்கு நன்றி இய‌ற்கை

T.V.Radhakrishnan said...

///அபி அப்பா said...
\\ இய‌ற்கை said...
oh..take care of ur health..

ithoda thappicheegalennu santhosappadunga
\\

அட ஒருபச்ச மண்ணு இந்த இயற்கை புள்ள! தம்பி ராதா இப்படி அனியாயமா வெள்ளேந்தியா இருக்கும் இந்த புள்ளக்காவது நீனு இனி நல்ல பதிவா போடுப்பா:-)))///

appadiye aakattum

இய‌ற்கை said...

aha...damage ayiteena:-))))

இய‌ற்கை said...

oru 2 days paper padikkama vitta ulagathula yenna yennamo nadanthuduthu:-(((((

இய‌ற்கை said...

//அபி அப்பா said...
\\ இய‌ற்கை said...
oh..take care of ur health..

ithoda thappicheegalennu santhosappadunga
\\

அட ஒருபச்ச மண்ணு இந்த இயற்கை புள்ள! தம்பி ராதா இப்படி அனியாயமா வெள்ளேந்தியா இருக்கும் இந்த புள்ளக்காவது நீனு இனி நல்ல பதிவா போடுப்பா:-)))
//

அபி அப்பா ivloo pasama yen mela
:-))))

T.V.Radhakrishnan said...
This comment has been removed by a blog administrator.
T.V.Radhakrishnan said...

///அபி அப்பா ivloo pasama yen mela
:-))))///

:-))))

kanchana Radhakrishnan said...

//இய‌ற்கை said...
oru 2 days paper padikkama vitta ulagathula yenna yennamo nadanthuduthu:-(((((///
உங்களை பாராட்டியிருக்கேனே பார்க்கவில்லையா?

மங்களூர் சிவா said...

ஆஸ்பத்திரி பில் எவ்வளவு வந்துச்சுன்னு நீங்க பாக்காதீங்க அப்புறம் வயித்தெரிச்சல் அல்சர்னு வேற ப்ராப்ளம் வரப்போகுது.

டிஸ்கி குழப்புது.

பூரணமாக பழைய நிலையை அடைய இறைவன் அருள்வானாக.

மங்களூர் சிவா said...

25