Monday, March 16, 2009

தமிழக அரசியலின் குழப்பவாதி..ராமதாஸ்

தினமும் ஒன்று பேசுகிறார் என கலைஞரை விமரிசிக்கும்..இவர்..அவ்வப்போது என்ன பேசுகிறார்.. ஏன் இப்படி இப்படி பேசுகிறார் என்பதே புரியாது.

ஆட்சி போய்விடும் என்பதால்...அவருக்கு பயம் வந்துவிட்டது என கலைஞரை ராமதாஸ் சொல்வதும்...அதற்கு பதிலாக கலைஞர்..'மத்திய மாநில அரசுகளுக்கிடையே மோதலை உண்டாக்கி ஆதாயம் அடையப்பார்க்கிறார் ராமதாஸ்' எனக் கூறுவதும்...இவர்களிடையே நடக்கும் வார்த்தை பரிமாற்றம்..வராத நாட்களே இல்லை எனலாம்.

இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும்..அதனால் அதற்காக ஆட்சியை கவிழ விட மாட்டோம்..என்கிறார் ராமதாஸ்.

பா.ம.க., விஷயத்தில்..2001 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து...அவர்கள் பலத்தை தப்புக் கணக்கு போட்ட கலைஞர்..சென்ற சட்டசபை தேர்தலில் 31 இடங்களை இவர்களுக்கு ஒதுக்கினார்.ஆனால் இவர்கள் வெற்றி பெற்றதோ 18 இடங்களே..

விஜய்காந்த் பல இடங்களில் ஓட்டுகளை பிரித்தார்..அவர்கள் கோட்டையிலேயே..அவர் வெற்றி பெற்று காண்பித்தார்.இதனால் பா.ம.க.,காங்கிரஸ்.,அ.தி.மு.க., கட்சிகள் சில இடங்களில் தோற்றன.

தி.மு.க., கூட்டணியில் இருந்துக் கொண்டே..கலைஞரின் இரண்டாண்டு ஆட்சிக்கு '0' மதிப்பெண் தந்தார் ராமதாஸ்.

காடுவெட்டி விவகாரத்தில்..பா.ம.க.,வை கூட்டணியிலிருந்து விலக்கினார் கலைஞர்.ஆனாலும் பா.ம.க., விலகாததுபோல் செயல்பட்டது.ஒரு கட்டத்தில்..குருவும் விடுவிக்கப்பட்டார். கலைஞருக்கு இது காலத்தின் கட்டாயமாக அமைந்தது.

ஆனால்..பா.ம.க.வோ..இனி வரும் தேர்தல்களில்..தி.மு.க.வின் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றதுடன்...காங்கிரஸ் கூட்டணியில் இருப்போம் என்றது.

இன்று...திருமாவளவன்..கலைஞரை சந்தித்தார்...பா.ம.க.,வின் பிரதிநிதிபோல பா.ம.க.வும்..கூட்டணியில் நீடிப்பதாகக் கூறினார்.(ஒரு வேளை..இதுவும் அவர்கள் ஏற்பாடோ)

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம்...

பா.ம.க.வும்...ஏதேனும்..திராவிட கட்சியின் முதுகில் சவாரி செய்தால் மட்டுமே..சில தொகுதிகளில் வெற்றிபெற முடியும்.

இது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.

10 comments:

greatlover said...

"அரசியல் வியாபாரி" ராமதாஸ் அன்புச் சகோதரியிடம் போனால் ம தி மு க வைவிட குறைவான சீட்தான் ஒதுக்க முடியும் எனத் தெரிந்து கொண்டார் .விஜயகாந்த் ஏற்கனவே இவரது கோட்டையிலே கொடி ஏற்றியவர்.அவரிடம் அதிகம் கிடைத்தாலும் பிச்சைதான்."வன்னியர் அறக் கட்டளை" என்றும் பேசுவார்; மற்ற ஜாதிக் காரர்களிடமும் ஓட்டும் கேட்பார்.முக்கிய பதவிக்கு நம்பிக்கையானவர்கள் கிடைக்கவில்லை என்றால் தன் மிக நெருங்கிய சொந்தங்களை 'நேர்முக உதவியாளராக' நியமிப்பார்."கூட்டணி தருமத்தை" மறந்து 'குழி பறிக்கும்' வேலையிலே கில்லாடி. உதாரணமாக பொன்முடியை தோற்கடிக்க இவர் திருட்டு வேலையிலே இறங்கியதை பொன்முடி கண்டிப்பாக மறந்து இருக்க மாட்டார்."நன்றியுள்ள் கிராமத்து ஓட்டுகளால்" தான் பொன்முடி ஜெயித்தார் !மொத்தத்தில் "கற்பற்ற அரசியல் வாதி" என்று தான் சொல்ல வேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி greatlover

குடுகுடுப்பை said...

அவர் தெளிவாகத்தான் உள்ளார் என்ன தேவை என்பதில்

வாசகன் said...

பாமக இருக்கற கூட்டணிதான் ஜெயிக்குமாம் , சொல்லிக்குவாய்ங்க.
இந்த எலக்க்ஷண்ல கலைஞ்சரும் அம்மாவும் அம்போன்னு மருத்துவர் ஐயாவ விடப்போறாங்க பாருங்க.. அப்புறம் எப்புடி ஜெயிக்கிறாய்ங்கன்னு பாத்துடலாம்

மணிகண்டன் said...

***
கூட்டணி தருமத்தை" மறந்து 'குழி பறிக்கும்' வேலையிலே கில்லாடி
***

யாராவது கூட்டணி தருமம்னா என்னன்னு விளக்குங்களேன் ப்ளீஸ் ?

ராதாகிருஷ்ணன் சார், ராமதாஸ் கட்சி திராவிட கட்சி கிடையாதா ? யாரு யாரு எல்லாம் திராவிட கட்சி ? தி மு க ஒண்ணு. வேற யாரு?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வருங்கால முதல்வர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வாசகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

////மணிகண்டன் said...
யாராவது கூட்டணி தருமம்னா என்னன்னு விளக்குங்களேன் ப்ளீஸ் ?

ராதாகிருஷ்ணன் சார், ராமதாஸ் கட்சி திராவிட கட்சி கிடையாதா ? யாரு யாரு எல்லாம் திராவிட கட்சி ? தி மு க ஒண்ணு. வேற யாரு?////


அங்கீகரிக்கப்பட்ட திராவிட கட்சிகளாக நான் கருதுவது தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும் தான்., இவர்களுடன் கூட்டணி வைத்தால்தான் தேசியகட்சிகளுக்கே சில இடங்களில் ஜெயிக்கமுடியும்.பா.ம.க..,வை ஜாதி கட்சியாகவே நினைக்கிறேன். .தற்போதுள்ள சூழலில்..விஜய்காந்த் கட்சி பா.ம.க.வை விட பலம் வாய்ந்ததாகவே தோன்றுகிறது.
கூட்டணி தர்மம் என்பது எந்த கட்சிக்குமே தெரியாத போது...சாதாரண வாக்காளன் நமக்கு எங்கே தெரியப் போகிறது.

அபி அப்பா said...

ராதா! என் ஆசை எல்லாம் திமுக, அதிமுக இரண்டும் இந்த விஷயத்தில் கண்டிப்பா ஒன்னு சேரனும். பாமக வை ஒழிக்கனும். இப்படி ஒரு தடவை செஞ்சா அடுத்த தடவை 2 எம் எல் ஏ போதும் 1 எம் பி போதும்ன்னு ஓடி வருவாய் ங்கொய்யா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அபி அப்பா said...
பாமக வை ஒழிக்கனும்//

repeateyyyy