Tuesday, March 31, 2009

நான் அறிந்த எஸ்.வி. சேகர்...

எஸ்.வி.சேகர்..

அவரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகவே அறிவேன்..அவரைப் பற்றியும்..அவர் அரசியல் ஈடுபாடு பற்றியும்..பதிவுகள் எல்லாம் படித்தேன்..எனக்குத் தெரிந்த அவரை இத்தருணத்தில் சொல்ல வேண்டியது..என் கடமை என எண்ணுவதால் இப்பதிவு.

அவர்...எடிடிங், மிக்ஸிங் என்று பல தொழில் நுணுக்கங்களை அறிந்தவர்.வி.கோபாலகிருஷ்ணன் நாடகக் குழுவில் இருந்தவர்.பின்..தனக்கென ..நாடகப்பிரியா என்ற குழுவை ஆரம்பித்து..நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.தானும் வளர்ந்தார்..கூட நடித்தவர்கள், எழுத்தாளர்களையும் வளர்த்தார்.

கிரேஸி மோகன்..முதலில் இவருக்குத்தான் நாடகம் எழுதினார்..கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்...பின்னர் மோகன் தனிக் குழு ஆரம்பிக்க சேகரும் தனது ஒத்துழைப்பைத் தந்தார்.

கோபு-பாபு..இவருக்கு நாடகம் எழுதினப் பின்னரே..திரைஉலகிலும் கொடிகட்டி பறந்தனர்.சின்னத்திரையில் வலம் வந்துக் கொண்டிருக்கும் பிருந்தாதாஸ் முதலில் இவருடன் நாடகங்களிலும்...பின் பொதிகையில் வண்ணக்கோலங்கள் தொடரிலும் நடித்தவர்.

சரி..விஷயத்திற்கு வருகிறேன்...

யாருடைய சிபாரிசும் இல்லாமல்...தனக்கென தனிப்பாணியில் வளர்ந்தவர் இவர்.ஒரு முறை சட்டசபைக்கு சுயேச்சை வேட்பாளராக நின்று 1500க்கு மேல் வாக்குகள் பெற்றார்.அச்சமயம் தனிக்கட்சி ஆரம்பித்திருந்த நெடுன்செழியன் 450 ஓட்டுக்களே வாங்கி இருந்தார்.ஒரு நாடகத்தில் இவர் இதைச் சொல்ல..அன்று நாடகத்திற்கு வந்திருந்த ஜெ மிகவும் ரசித்தார்.

பின்..2006 தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில்..வேட்பாளராக மைத்ரேயன் பெயர் அடிபட கடைசியில் சேகர் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜெ யின் குட்புக்ஸில் இவர் இருந்ததை சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.தகராறு தி.நகர்.எம்.எல்.ஏ., கலைராஜன் ரூபத்தில் முதலில் ஆரம்பித்தது..

எல்லோருக்கும் வேண்டியவரான இவர் ...அனைத்துகட்சியினர் விசேஷங்களுக்கும் சென்றார்.தமிழக அரசியலில் மட்டும் அது மா பாதகம் ஆகும்.தன் மகள் திருமணத்திற்கு ஜெ வை அழைத்தும் வரவில்லை.(அழைப்பிதழில் ஜெ புகைப்படம் போடவில்லை..அதனால் அம்மாவிற்கு கோபம் என்றும் கூறப்பட்டது).பின் சத்யராஜ் வீட்டு திருமணத்தில் ஸ்டாலினுடன் புகைப்படத்தில் இருந்தார் சேகர்.தன் இல்லத்திருமணம் ஒன்றிற்கு கலைஞர் வர அவரை வரவேற்று மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தலைமை தன்னை விலக்குகிறது என தெரிந்ததும்...கலைஞரை வீட்டில் சந்தித்து..திரைப்படவிழா விற்கு 25 லட்சம் வாங்கி வந்தார்.

இந்நிலையில்..அ.தி.மு.க.,பொதுக்குழுவிற்கு இவருக்கு அழைப்பில்லை..தனது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியநிலையில் இருந்தவர்..பிராமணர்களுக்காக இட ஒதுக்கீடு என் ஆரம்பித்துள்
ளார் .

சேகரை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்...எம்.எல்.ஏ., பதவியில் திறம்பட செயல் பட்டவர் இவர்.தொகுதி மக்கள்..எந்த கட்சியை சேர்ந்தவராய் இருந்தாலும்..எளிதில் பார்க்க முடிந்தவர்.மாதம் ஒரு முறை மக்கள் குறைகளை அவர்களை சந்தித்து கேட்டவர். அ.தி.மு.க., கண்டிப்பாக ஒரு நல்லவரை இழக்கிறது.

ஆனால்...டோண்டு சொன்னது போல..இடஒதுக்கீடு விஷயத்தில்..இவருடன் எனக்கு உடன்பாடில்லை.

14 comments:

கோவி.கண்ணன் said...

//ஒரு முறை சட்டசபைக்கு சுயேச்சை வேட்பாளராக நின்று 1500க்கு மேல் வாக்குகள் பெற்றார்.அச்சமயம் தனிக்கட்சிஆரம்பித்திருந்த நெடுன்செழியன் 450 ஓட்டுக்களே வாங்கி இருந்தார்.ஒரு நாடகத்தில் இவர் இதைச் சொல்ல..அன்று நாடகத்திற்கு வந்திருந்த ஜெ மிகவும் ரசித்தார்//

அப்போது அவர் 'பானை' சின்னத்தில் நின்றார்.

ஆனால் இப்போதுதான் ஜெவின் குணம் அறிந்து கொண்டது போல் சேகர் பேட்டி அளித்திருப்பதை என்ன வென்று சொல்வீர்கள் ?

ஜெவின் குணம் பொதுமக்களுக்கே தெரியும், இவருக்கு ஒன்றுமே தெரியாதது போலவும், தற்பொழுதுதான் ஜெவின் அருகில் இருப்பவர்களின் குணங்களை இவர் அறிந்து கொண்டது போலவும் பேசுவது அவருடைய நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//தொகுதி மக்கள்..எந்த கட்சியை சேர்ந்தவராய் இருந்தாலும்..எளிதில் பார்க்க முடிந்தவர்.//

இது தப்பாச்சே!
அப்ப இவரை ஓரங்கட்டியது சரியே!

மற்ற கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்த அதிமுகவின் மூத்த தலைவர்களின் சாவுக்கே செல்லாதவர் ஜெயலலிதா. அவரிடம் அதிகமாக எதிர் பார்த்தது எஸ்.வி.சேகரின் தவறுதான்!
தவறுதான்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒரு சில விஷயங்கள் எழுத்தில் சொல்லமுடியாது கோவி.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// ஜோதிபாரதி said...
//தொகுதி மக்கள்..எந்த கட்சியை சேர்ந்தவராய் இருந்தாலும்..எளிதில் பார்க்க முடிந்தவர்.//

இது தப்பாச்சே!
அப்ப இவரை ஓரங்கட்டியது சரியே!

மற்ற கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்த அதிமுகவின் மூத்த தலைவர்களின் சாவுக்கே செல்லாதவர் ஜெயலலிதா. அவரிடம் அதிகமாக எதிர் பார்த்தது எஸ்.வி.சேகரின் தவறுதான்!
தவறுதான்!!////

தவறுதான்!
:-))))

Unknown said...

In a recent interview, he has said ; before joining ADMK, he asked for 2 assurances under which he will join ADMK - one of them was that JJ should attend SVS's daughter's marriage; other was something like JJ should attend SVS's son's debut movie inauguration - or some petty stuff like that.

seems to be a cheap guy.

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...
ஒரு சில விஷயங்கள் எழுத்தில் சொல்லமுடியாது கோவி.,
//

சரி சரி, தொலைபேசியில் அழைக்கும் போது எனக்கு மட்டும் சொல்லுங்க :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

சில பத்திரிகை பேட்டிகள் திரித்து சொல்லப்படுகின்றன.அவர் அந்நிநிகழ்ச்சிகளுக்கு வராததற்கு வருத்தமே பட்டார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said
சரி சரி, தொலைபேசியில் அழைக்கும் போது எனக்கு மட்டும் சொல்லுங்க :)///
ஆகட்டும்

அமர பாரதி said...

இவர்தான் 1970களில் ஆரம்பித்து வீட்டில் இருக்கும் பெரியவர்களை கேவலமாக பேச ஆரம்பித்தது. இவர் நாடகம் மூலமாக தொடங்கி வைத்ததை கவுன்டமணி சினிமாவிலும் தொடர்ந்தார். பெரியவர்களை அசிங்கமாக கேவலப்படுத்தும் புண்ணியச் செயலை ஆரம்பித்து வைத்த புண்ணியம் இவரையே சேரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அமர பாரதி said...
இவர்தான் 1970களில் ஆரம்பித்து வீட்டில் இருக்கும் பெரியவர்களை கேவலமாக பேச ஆரம்பித்தது. இவர் நாடகம் மூலமாக தொடங்கி வைத்ததை கவுன்டமணி சினிமாவிலும் தொடர்ந்தார். பெரியவர்களை அசிங்கமாக கேவலப்படுத்தும் புண்ணியச் செயலை ஆரம்பித்து வைத்த புண்ணியம் இவரையே சேரும்.////

:-))))

நசரேயன் said...

நல்ல பகிர்வு ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

சேகர் ஒரு நல்ல MLA. சாதி விசயத்தில் மற்றவர்களைப்போலவே அவரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
சேகர் ஒரு நல்ல MLA. சாதி விசயத்தில் மற்றவர்களைப்போலவே அவரும்.//

முற்றிலும் சரி....ஜாதி வெறியர்களை திருத்தவே முடியாதா?