Thursday, February 18, 2010

கொள்ளை..(ஒரு பக்கக் கதை)

காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும்.

கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு..

நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன்.

'மேல படியுங்க' என்றாள்.

'அசோக் நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள்..வீடு திறந்திருப்பதைப் பார்த்து..உள்ளே சென்று பார்த்த போது..பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள்..ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்'

படித்து முடித்து..'பார்த்தியா நாம ஜாக்கிரதையா இருக்கணும்' என்றேன்.

திடீரென ..'என்னங்க..நம்ம ஃப்ளாட்டும் 18ஆவது தெருதானே..' என்றாள் சகதர்மணி .

'சுபிக்க்ஷா' நம்ம ஃப்ளாட் தானே.'

'நம்ம வீட்டு நம்பர் 7..அப்போ 8..அடடே..நம்ம பக்கத்து வீடுங்க..' என்றாள் படபடப்பாக

32 comments:

Chitra said...

கொள்ளை போனது நகைகள் மட்டும்தானா?
nice story.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்ப செய்தித்தாள் படிப்பதும் குறைக்க்கிறது தல.., பக்கத்து வீட்டு செய்திகளைக் கூட சன் ஃபிளாஷ் நியூஸ் மூலம் தெரிந்து கொள்ளும் விரைவில் வந்து விடும்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்ப செய்தித்தாள் படிப்பதும் குறைக்க்கிறது தல.., பக்கத்து வீட்டு செய்திகளைக் கூட சன் ஃபிளாஷ் நியூஸ் மூலம் தெரிந்து கொள்ளும் காலம் விரைவில் வந்து விடும்..,

அகநாழிகை said...

நல்ல கதை. பகிர்தலுக்கு நன்றி.

சகாதேவன் said...

கன்னியாகுமரியில் நடந்த ரோட்டரி conference-ல், திருமதி ரேவதி சங்கரன் பேசினார்.
வீட்டில் தினம் நாம் உட்கார்ந்து பேசுவதில்லை. ஒன்றாக சாப்பிடுவதில்லை. அபார்ட்மெண்டில் நாம் ஒன்றாக வசிக்கிறோம். ஆனால் We live apart. அதனால்தான் apartment என்று பேரானதோ என்றார். அவர் சொன்னதை ஒரு பதிவாக எழுதுவேன். பாருங்கள்

vasu balaji said...

யதார்த்தம் சார்:)

பிரபாகர் said...

இதுதான் இன்றைய நிலை அய்யா!

எண்ணங்கள் சுருங்குவதன் விளைவு...

அருமையா இருக்கு.

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி.. Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இப்ப செய்தித்தாள் படிப்பதும் குறைக்க்கிறது தல.., பக்கத்து வீட்டு செய்திகளைக் கூட சன் ஃபிளாஷ் நியூஸ் மூலம் தெரிந்து கொள்ளும் காலம் விரைவில் வந்து விடும்..,//

சொல்ல முடியாது.அப்படி நடந்தாலும் நடக்கலாம்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அகநாழிகை said...
நல்ல கதை. பகிர்தலுக்கு நன்றி.//


வருகைக்கு நன்றி Vasu..

பித்தனின் வாக்கு said...

இது கதையல்ல நிஜம். காலம் அப்படித்தான் போகுது. நம்ம பக்கத்து வீட்டு நபர்கள் கூட தெரியாத அளவுக்கு மாறிவிட்டது. நன்றி.

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு சார்.

ராமலக்ஷ்மி said...

இப்படித்தான் போகிறது வாழ்க்கை. நல்ல கதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சகாதேவன் said...
கன்னியாகுமரியில் நடந்த ரோட்டரி conference-ல், திருமதி ரேவதி சங்கரன் பேசினார்.
வீட்டில் தினம் நாம் உட்கார்ந்து பேசுவதில்லை. ஒன்றாக சாப்பிடுவதில்லை. அபார்ட்மெண்டில் நாம் ஒன்றாக வசிக்கிறோம். ஆனால் We live apart. அதனால்தான் apartment என்று பேரானதோ என்றார். அவர் சொன்னதை ஒரு பதிவாக எழுதுவேன். பாருங்கள்//

எழுதுங்கள் சார்..பார்க்காமல் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
யதார்த்தம் சார்:)//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
இதுதான் இன்றைய நிலை அய்யா!

எண்ணங்கள் சுருங்குவதன் விளைவு...

அருமையா இருக்கு.

பிரபாகர்.//

வருகைக்கு நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
இது கதையல்ல நிஜம். காலம் அப்படித்தான் போகுது. நம்ம பக்கத்து வீட்டு நபர்கள் கூட தெரியாத அளவுக்கு மாறிவிட்டது. நன்றி.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
நல்லாருக்கு சார்.//

நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராமலக்ஷ்மி said...
இப்படித்தான் போகிறது வாழ்க்கை. நல்ல கதை//

ஆம்..நினைக்கையில் சற்று வேதனையாகத்தான் இருக்கிறது

ஹேமா said...

நல்லதொரு யதார்த்தமான படைப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
நல்லதொரு யதார்த்தமான படைப்பு.//


நன்றி ஹேமா

மணிஜி said...

காங்கிரீட் மிருகங்கள் நாம்!

மங்குனி அமைச்சர் said...

செவுள்ல அரஞ்ச மாதிரி இருக்கு சார்

சார் பேசாம எல்லா அபாட்மென்ட்லையும் இந்த மாதிரி "blog intraduce " பன்னிடம்னா டெய்லி எப்படியும் பேசிக்குவாங்க

goma said...

உலகம் சுழல சுழல மனித மனம் சுருங்குகிறது.....

டக்கால்டி said...

அண்டை வீட்டு மனிதர்களின் முகம் கூட தெரியாத நகரத்து அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்க்கையை மையப் படுத்தி அழகாக எழுதி இருக்கீங்க சார்..நன்றாகஇருந்தது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தண்டோரா ...... said...
காங்கிரீட் மிருகங்கள் நாம்!//

வருகைக்கு நன்றி.. தண்டோரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
செவுள்ல அரஞ்ச மாதிரி இருக்கு சார்

சார் பேசாம எல்லா அபாட்மென்ட்லையும் இந்த மாதிரி "blog intraduce " பன்னிடம்னா டெய்லி எப்படியும் பேசிக்குவாங்க//

வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
உலகம் சுழல சுழல மனித மனம் சுருங்குகிறது.....//

உண்மை..
நன்றி கோமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//டக்கால்டி said...
அண்டை வீட்டு மனிதர்களின் முகம் கூட தெரியாத நகரத்து அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்க்கையை மையப் படுத்தி அழகாக எழுதி இருக்கீங்க சார்..நன்றாகஇருந்தது...//

நன்றி டக்கால்டி

"உழவன்" "Uzhavan" said...

ஹா ஹா.. நிலைமை இப்ப இப்படித்தான் இருக்கு.. நல்ல கதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி உழவன்

க ரா said...

நல்ல கதை.