Thursday, August 18, 2011

கபில்சிபல் காப்பாற்றிய நீதிபதி




கையாடல் குற்றச்சாட்டு சூட்டப்பட்டுள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பதவியை பறிப்பதற்கான கண்டனத் தீர்மானம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்திற்கு ஆதரவாக 189 வாக்குகளும் எதிர்த்து 17 வாக்குகளும் பதிவாகின.
சவுமித்ரா சென், வக்கீலாக இருந்த போது வழக்கு ஒன்றில் நீதிமன்ற அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்தது.அப்போது அவர் 33.23 லட்சம் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.அவர்  உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதும் விவகாரம் கிளறப்பட்டது.இக்குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஸன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவை மாநிலங்கள் அவை தலைவர் ஹமீத் அன்சாரி நியமித்தார்.அதில் கையாடல் பண்ணியது உண்மை எனத் தெரிய வந்தது.
இந்நிலையில், மாநிலங்கள் அவையில் கண்டனத் தீர்மானத்தை சீதாராம் யெச்சூரியும் அருண் ஜெட்லியும் கொண்டு வந்தனர்.தன் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்க சென்னிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.இதற்காக அவை நீதி மன்றமாக மாற்றப்பட்டது.தான் குற்றமற்றவன் என்றும் (குற்றவாளிகள் தான் குற்றவாளி என எப்போது ஒப்புக்கொண்டுள்ளனர்)தன்னை பலிகடா ஆக்க முயலுவதாகவும் சென் வாதாடினார்.இதைத் தொடர்ந்து அவையில் விவாதம் நடந்து..இறுதியில் கண்டனத் தீர்மானம் நிறைவேறியது.நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்வதற்காக தீர்மானம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை.
இத் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.அங்கும் அது நிறைவேறினால் சென் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
ஒரு வேளை இரு அவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் சென்னுக்குக் கிடைக்கும்.

முன்னதாக1993ல் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பதவி நீக்கத் தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டது.அப்போது ராமசாமிக்கு காங்கிரஸ் ம ற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதர வு  அளித்ததால் அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்து ராமசாமியின் பதவி தப்பியது.

டிஸ்கி- ராமசாமிக்கு அவர் சார்பில் வாதாடியவர் கபில்சிபல் என்பது நினைவில் கொள்ள வேண்டியது..


8 comments:

sultangulam@blogspot.com said...

//சென்னை ஜனாதிபதி ???? :)) பதவி நீக்கம் செய்வார்//
சென் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப் படுவார்

காந்தி பனங்கூர் said...

ஊழல் ஊழல் ஊழல், என்ன கொடுமை சார் இது. முடியல இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமா இருக்குது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுல்தான் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி காந்தி பனங்கூர்

jagannathan said...

இதே போல் ராஜாவுக்கும் நடந்தால் நன்றாக இருக்குமே. ராஜ்ய சபாவுளே அணைத்து தரப்பினருக்கும் தண்டனை தந்தால் நேரம் மிச்சாமுமுகே

aotspr said...

நல்ல பதிவு.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி jagannathan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி priya