2g ஊழல் 176000 கோடி என தலைமை தணிக்கை கூறினாலும்...பின்னர் 33000 கோடி என்றும்..பின்..மத்திய அமைச்சர் கபில் சிபல் நஷ்டமே இல்லையென்றும் கூறியவை எல்லாம் நாம் அறிவோம்.
இந்நிலையில் புதியதாக ஒரு ஊழல் நம் பார்வைக்கு வந்துள்ளது.
பக்தர்களின் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூபாய் 133 கோடிக்கு விற்பனை...இது செய்தி..
2011ல் நிர்ணயித்த விலையில் இது விற்கப்பட்டது என்றும்..இன்றைய விலைக்கு ஏலம் விட்டிருந்தால் மேலும் 100 கோடி அதிகம் கிடைத்திருக்கும் என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது..
இதனால்..100 கோடிக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இது சம்பந்தமாக உள்துறைக்கும் இது தெரியும் என்றும்...ஆனால்..முடிதானே என அலட்சியப்படுத்தப்பட்டதாக நிதி மீது புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இது டுபாக்கூர் செய்திக்காக திருப்பதியிலிருந்து கேசவன் அளிக்கும் ஊர்ஜிதமாகாதத் தகவல்.
No comments:
Post a Comment