Wednesday, October 12, 2011

கேபிளார் அறிவிப்பை புரிந்து கொண்ட விதம்...




கேபிளார் வழக்கமாக அவரது நண்பருடன் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு செல்வது வழக்கம்..
அந்த ஹோட்டலில் தோசையை சர்க்கரையுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆகவே  அங்கு வருபவர்கள் எல்லாம் தோசை, சர்க்கரை என சாப்பிடுவார்கள்.
கேபிள் போன்றவர்கள்..ஒரு தோசைக்கு கால் கிலோ சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
இதையெல்லாம் பார்த்து பொறுமை இழந்த ஹோட்டல் முதலாளி..'இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது' என போர்ட் எழுதி வைத்தார்.
அதைப்படித்த தமிழன் கேபிள் பொங்கி எழுந்தார்..
அந்த முதலாளிக்கு பாடம் புகட்ட எண்ணினார்..
ஹோட்டலுக்கு சென்று ஒரு தோசைக்கு ஆர்டர் செய்தார்..அதை சாப்பிட்டு முடிந்ததும்..அடுத்த தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்..
தோசை வந்தது..தொட்டுக் கொள்ள சர்க்கரை கொண்டுவரச் சொன்னார்.
சர்வருக்குக் கோபம் வந்தது..'அங்கு என்ன எழுதியிருக்கிறது பாருங்கள்'' என்றார்.
கேபிளும்,'என்ன எழுதியிருக்கிறது..நீயே படி' என்றார்.
சர்வர், 'இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது' என படித்தார்.
கேபிளும்,'போர்டில்..இன்று..முதல்..தோசைக்கு சர்க்கரை கிடையாது..என்று எழுதியுள்ளது..சரிதான்..அதனால் தான் நான் முதல் தோசைக்கு சர்க்கரை கேட்கவில்லை..இரண்டாம் தோசைக்குத் தான் கேட்டேன்.போய் எடுத்து வாருங்கள்..'என்றார்.
அப்போதுதான் மற்றவர்களுக்கு..போர்டில் எழுதியுள்ளதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் உள்ளதா..என ஆச்சரியம் ஏற்பட்டது.
கேபிளாரோ, இதையெல்லாம் கவனிக்காது..மூன்றாவது தோசைக்கு ஆர்டர் செய்தார்.

டிஸ்கி-இந்தப் பதிவு வெறும் நகைச்சுவை பதிவுதான்.

9 comments:

RS said...

Sir, Truly Hillarious and timely one.

This will diffuse all the tensions around.

Great Post.

Sridhar

கோவி.கண்ணன் said...

கேபிள் தோசைக்கு சிக்கன் குருமா தான் சாப்பிடுவார்
:)

Unknown said...

பழைய காமெடி என்றாலும் டைமிங் அருமை

வருண் said...

இன்றுமுதல்!!!!

தோசைக்கு சர்க்கரை கிடையாது! னு போட்டாலும் ஏதாவது வழி கண்டுபிடிச்சிருவீங்க!

தோசைக்கு சர்க்கரை தொட்டுச் சாப்பிடும் வினோதமான ஆட்கள் இம்பூட்டு இருக்காகளா!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி RS

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
கேபிள் தோசைக்கு சிக்கன் குருமா தான் சாப்பிடுவார்
:)//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜ.ரா.ரமேஷ் பாபு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருண் said...
இன்றுமுதல்!!!!

தோசைக்கு சர்க்கரை கிடையாது! னு போட்டாலும் ஏதாவது வழி கண்டுபிடிச்சிருவீங்க!

தோசைக்கு சர்க்கரை தொட்டுச் சாப்பிடும் வினோதமான ஆட்கள் இம்பூட்டு இருக்காகளா!!//


:)))))