Sunday, October 16, 2011

தமிழனும்..நண்டும்




நம்ம தமிழனை நினைச்சா..நண்டு கதை தான் ஞாபகத்துலே வருது..

ஒரு பள்ளத்திலே சில நண்டுகள் விழுந்திடுச்சு.அவற்றில் ஒரு புத்திசாலி நண்டு..சைடுலே நடந்து ..கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறப்பார்த்துது..

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற நண்டுகள் நாம மட்டும் கீழே இருக்க..அது மட்டும் மேலே போறதா..என அதன் காலை இழுத்து கீழே தள்ளின.

இப்படித்தான்..தமிழன் தமிழன்னு நாம் பேசினாலும்..ஒரு தமிழன் முன்னுக்கு வரதை..இன்னொரு தமிழன் பொறுத்துக்க மாட்டான்.

அது போகட்டும்...

நம்ம பிரபல எழுத்தாளர் பிளாக்கர் ஒருத்தர் பாரதியாரை மகாகவி இல்லன்னு சொல்லியிருக்காராமே..

சொல்லட்டும்..சொல்லட்டும்...

இது சுதந்திர நாடு..நாம நினைக்கிறதை சொல்ல நமக்கு உரிமை இல்லையா என்ன..

ஓஹோ...வடக்கே யாரோ சமீபத்தில சொன்ன வார்த்தையோ இது..

ஆமாங்க..என்ன செய்யறது..

நமக்கு மனசுக்கு கஷ்டமான விஷயத்தை  சொல்றப்போ..கடினமா சொல்லக் கூட முடியலே..

ஆமாம்..நாம என்ன ராம சேனா ஆட்களா என்ன..


2 comments:

SURYAJEEVA said...

தமிழன் என்று இல்லை, ஒருத்தன் கால ஒருத்தன் வாரரது எல்லா இனத்திலும் இருக்கும், நீங்கள் தமிழன் என்ற வட்டத்திற்குள் இருப்பதால் அப்படி தெரிகிறது... மற்ற சமூக மக்களையும் பாருங்கள்... எட்டப்பங்களுக்கு சாதி மதம் சமூகம் எல்லாம் தெரியாது.. சுயம் மட்டுமே தெரியும்

ஹேமா said...

தமிழனுக்குச் சாபம் அந்தக்காலம் தொட்டு இந்த நிமிஷம் வரைக்கும்.அவனுக்குள்ளேயேதான் அவன் எதிரி.நம்ம கருணா சாத்தான்போல !