Wednesday, October 19, 2011

'ஜெ' வழக்கு....முழுவிவரம்..




1991 லிருந்து 1996 வரை ஜெ ஆட்சி தமிழகத்தில்.பின் 1996ல் கலைஞர் கையில் ஆட்சி வந்தது.

அப்போது ஜெ மீது மட்டும்10க்கும்  மேற்பட்ட வழக்குகள்.அதில் ஒன்று கலர் டீவி வாங்கியதில் ஊழல் என்ற வழக்கு.இதில் ஜெ 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் நாள்கைது செய்யப்பட்டார்.1997 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் ஜாமீனில் விடப்பட்டார்.

இப்போதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் சுருக்கம்.ஜெ முதல்வராய் இருக்கையில்(1991-96) ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாய் பெற்றதாகக் கூறியிருந்தார்.ஆனால் அவருக்கு 66.65 கோடி சொத்துகள் இருந்ததாக சிபிசியைடி போலீசார் குற்றம் சாட்டினர்.இதை லஞ்ச ஒழிப்புப் போலீசும் உறுதி செய்தது.இதன் பேரிலேயே சசிகலா,சுதாகர்,இளவரசி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

வருமானத்திற்குப்  புறம்பான சொத்துக்களாக பண்ணை வீடுகள்,பங்களாக்கள்,விவசாய நிலங்கள்,ஹைதராபாத் பண்ணை நிலம்,நீலகிரி டீ எஸ்டேட்,நகைகள், வங்கியில் இருந்த பணம்,முதலீடுகள் ஆகியவை வழக்கில் சொல்லப்பட்டுள்ளன.

1997 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள்..இவர்களுக்கெல்லாம் சொந்தமான 77 அசையாச் சொத்துக்களையும்,1000 ஏக்கர் பாசன நிலங்களையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

 பின் 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், வழக்குகளில் ஜெ தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம் என வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றச் சொல்லி திமுக வின் பொதுச் செயலர் அன்பழகன் மனுதாக்கல் செய்தார்,வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கிற்காக ஜெ ஒரு முறை கூட ஆஜராகாது வாய்தா வாங்கி வந்தார்,உச்சநீதி மன்றம் ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.

டிஸ்கி- சங்கரராமன் கொலை வழக்கில் ஜெ ஆட்சிக்கு வந்ததும்...வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என ஜெயேந்திரர் மனுதாக்கல் செய்ய வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது.இதில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை மாற்றச் சொன்னார்.
ஜெ யின் இந்த வழக்கில் வழக்குத் தொடர்ந்தவர் மாநிலத்தில் நீதி கிடைக்காது என வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றச்சொல்லி பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

இதற்குக் காரணம்..ஜெ வழக்கில் தலையிடுவார்..நீதி கிடைக்காது என்பதாக இருந்தால்..

நமக்குப் புரியாதது..

நீதிமன்ற நடவடிக்கைகளில் முதல்வர் தலையீடு இருக்குமா..
ஆட்சி மாறினால் நீதி கிடைக்காது என்பது நீதி மன்றத்தையே அவமதித்தது போல ஆகாதா?

6 comments:

aotspr said...

எல்லாம் அரசியல்.....
தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

SURYAJEEVA said...

உண்மை சுடும், அரசை தாங்கி பிடிக்கும் தூண்களில் ஒன்று தான் நீதி துறை என்று லெனின் கூறுவார்... நீதியாவது வெங்காயமாவது என்று திராவிட கட்சியினர் சொல்வார்கள்... மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்பது இறந்தவர்களின் உறவினர்களின் நீதி, நமக்கு அது அநீதி.. முரண்களின் மூட்டை தான் நீதிமன்றங்கள்.. ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளி வந்த பின் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வது மட்டும் நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

goma said...

என்ன்ன்னத்த்த்த சொல்ல

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Goma