அரசியலில் ஒரு கட்சியைக் கவிழ்க்க வேறொரு கட்சி ஏதேனும் வதந்தியை பரப்பி விடுவது வழக்கம்.இப்போது வேகமாக பரவி வரும் வதந்தி..தேமுதிக அவைத்தலைவரும்,கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆன பண்ருட்டி ராமசந்திரன் 10 கட்சி எம் எல் ஏ க்களுடன் அதிமுகவிற்கு தாவப்போவதாகக் கூறப்படுவது..
உள்ளாட்சித் தேர்தலில் ஜெ தேமுதிக வை முற்றிலும் புறக்கணித்தார்.சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் விஜய்காந்த் கூட்டணி அமைத்ததற்கு முக்கியக் காரணம் பண்ருட்டியார் என்பதால்...இம்முறை அதிமுக தங்களைப் புறக்கணித்ததால் கோபத்தை பண்ருட்டியார் மேல் காட்டினாராம் கேப்டன்.ஆகவே தான் உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டியாரை பிரச்சாரத்திற்குக் கூட அழைக்கவில்லையாம்
இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பண்ருட்டியாரை அதிமுகவிற்கு இழுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் தேமுதிகவில் 29 எம் எல் ஏ க்கள் உள்ளனர்.10 பேர் இதில் அணி மாறினால் கட்சித் தாவல் திட்டம் பாயாது.மேலும் தேமுதிக வில் அப்போது 19 எம் எல் ஏ க்களே மிஞ்சி இருப்பர்.எதிர்க்கட்சி அந்தஸ்தை அது இழக்கும்.
தேமுதிக வை எதிர்கட்சியாய் வைத்து அரசியல் பண்ணுவதோடு திமுக வே எதிர்க்கட்சியாய் இருக்கட்டும் என முதல்வர் நினைத்திருக்கலாம்.உண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளை கழட்டிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
தன் ஆட்சியின் 100 வது நாள் நிகழ்ச்சியில் விஜய்காந்த் கலந்துக் கொள்ளாததும்...தன் கட்சியின் ஆட்சி பற்றி 6 மாதம் கழித்து விமரிசிப்பதாகவும் சொன்னது வேறு ஜெ விற்கு அதிருப்தியைத் தந்துள்ளதாம்
அரசியலில் எது வேணும்னாலும் நடக்கலாம்.
6 comments:
எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமக்கு எப்ப விடியல் கிடைக்கும்...
வருகைக்கு நன்றி suryajeeva
வருகைக்கு நன்றி அருள்
நல்ல பதிவு
மேலும் கருத்துகள் மற்றும் மாத இதழ்கள் தரவிறக்க*
teachersalem.blogspot.co m
எல்லாம் அரசியல்.....
தொடர்ந்து எழுதுங்கள்....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Ithuvum Nadakkalam!
www.tamilnaduinformation.com
For Forum, Blogs, Articls in Tamil/Englsih
Post a Comment