Monday, October 17, 2011

திட்டியவரை என்ன செய்வது...
நபிகள் நாயகத்தின் நெருங்கிய நண்பர் ஹலரத் அபூபக்கர்.நபிகளிடம் புதிய தோழராக ரபியா அஸ்லமி அவர்கள் சேர்ந்தார்கள்.

அபூபக்கர் அவர்களுக்கும்,ரபியா அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கோபத்தில் தன்னை மறந்து அபூபக்கர், ரபியா அவர்களைத் திட்டித் தீர்த்து விட்டார்.

ரபியா அவர்கள் வருத்தம் அடைந்தார்.அதை அறிந்த அபூபக்கர், 'நீர் , நான்  உம்மைத் திட்டியது போல...என்னைத் திட்டிவிடும்' என்றார்.

ரபியா அதற்கு மறுத்து விட்டார்.

'நீர் என்னைத் திட்டிவிடும், இல்லையேல் பெருமானார் அவர்களிடம் உம்மைப் பற்றி குறை சொல்வேன்' என்றார் அபூபக்கர்.

ரபியா அவர்கள் ஏதும் சொல்லாது, அவ்விடம் விட்டு அகன்றார்.

'கோபத்தில் என்னை மறந்து, என் வாயில் தவறான சொற்கள் வந்து அவரைத் திட்டிவிட்டேனே! இது குறித்துப் பெருமானார் அவர்களிடம் சொல்லி, ரபியா அவர்களைத் தன்னை திட்டச் செய்ய வேண்டும்..வேறு வழியில்லை' என உள்ளம் நொந்து புலம்பினார் அபூபக்கர்.

இதையெல்லாம் அறிந்த உறவினர்கள் சிலர் ரபியா வை அணுகி' அபுபக்கர் உங்களைத் திட்டியதும் அல்லாது பெருமானார் அவர்களிடம் முறையீடு செய்யப் போகிறாராமே!' என்றனர்.

அதற்கு ரபியா அவர்கள்,'அபூபக்கர் கோபம் கொண்டால், பெருமானார் அவர்களும் கோபம் கொள்வார்.பெருமானார் அவர்கள் கோபம் கொண்டால் அல்லாவும் கோபிப்பார்.நான் நாசமாவதைத் தவிர வேறு வழியில்லை.இப்போதே பெருமானாரை சந்தித்து என் நிலையைச் சொல்கிறேன்' என்று புறப்பட்டார்.

பெருமானார் அவர்களை வணங்கி ரபியா அவர்கள்,' தமக்கும், அபூபக்கருக்கும் இடையே நடந்த நிகழ்ச்சியைக் கூறி, என் மீது தவறிருந்தால் மன்னியுங்கள்' என்றார்.

அதற்கு பெருமானார்,'ரபியா ..நீர் செய்தது சரி.கோபத்தில் அவர் திட்டியது போல நீரும் கோபம் கொண்டு அவரைத் திட்டிவிடுவது அறிவுடைமை ஆகாது.அதற்கு மாறாக, "அபூபக்கரே!  இறைவன் உம்மை மன்னிப்பாராக' என்று கூற வேண்டும் என்றார்.


11 comments:

மதுரை மாக்கன் said...

நன்றாக கூறி உள்ளீர்கள் ஐயா

நடந்ததை மறந்து விட்டு செல்லாமல் ஏதோ மன்னிப்புக் கேள் என்று துடிப்பது அபத்தமாக உள்ளது. உங்கள் பார்வையில் ஒன்று தவறு என்றால், மற்றவர் பார்வைக்கும் அது தவறாகவே இருக்க வேண்டும் என எப்படி வாதிட முடியும் ?

suryajeeva said...

இதுவும் உள்குத்து பதிவா

ammuthalib said...

Please remove the word "VANANGI". According to Islam, Almighty God is the one and only worthy for worship and no one else.

Packirisamy N said...

//Please remove the word "VANANGI". //

As I know "Vanangi" is not worshipping. It is just paying respect.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எதுபற்றி என புரியவில்லை டிவிஆர்.:(

ஹேமா said...

இன்றைய திகதிக்கு நல்ல அறிவுரை !

அன்னு said...

திரு டி.வி.ஆர் அவர்களுக்கு,

தங்களின் இப்பதிவு, தமிழ்மணத்தினை எதிர்த்து பதிவர்கள் போராடுவதை எதிர்த்து அமைந்திருப்பின், கீழ்க்காணும் ஒரு ஹதீஸை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், இன்ஷா அல்லாஹ்.
___________________________________________________
சலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே.

அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தார்மீக நேர்மையுடன் நடப்பது; உலகெங்கிலும் சலாமைப் பரப்புவது; வறுமை வயப்பட்டிருக்க (நல் வழியில்) செலவளிப்பது ஆகிய முப்பண்புகளை எவர் (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண் டாரோ அவர் நிச்சயமாக ஈமானையே (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்ட வராவார்.

28 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் சொல்வதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

(சஹீஹ் புகாரி : இறையச்சம் 2:20, 2:28)
___________________________________________________

ஆக, பெயரிலி என்னும் நபர் ஒரு மார்க்கத்தின் இறைநம்பிக்கையில், அதன் அடிப்படையில், அதுவும் எந்த பதிவில் இப்படியொரு அனாகரீக கமெண்ட் இடப்பட்டதோ அந்த பதிவுக்கும், இஸ்லாமிய முகமனுக்கும் சம்பந்தமில்லாத வேளையில், தன் அடி மனதின் வக்கிரத்தை வெளியிட்டுள்ளார். இதற்கும் தங்களின் இப்பதிவிலுள்ள ஹதீதுக்கும் தொடர்பில்லை. மன்னிக்கவேண்டும் என்னும் சிந்தனையில் இதை வெளியிட்டுள்ளீர்களானால், இது ஒத்துக்கொள்ள முடியாத சிந்தனை. தனி நபரை தாக்கி எழுதப்பட்ட பதிவல்ல அது. அந்த பதிவிலும் இறுதியிலும் இது நகைச்சுவைக்கே என சகோ.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். இதையெல்லாம் ஜீரணிக்க இயலாதவர், மற்ற பதிவர்களையும் சாடியுள்ளார், கேவலப்படுத்தியுள்ளார், அனாகரீக, அமில வார்த்தைகளை உபயோகித்துள்ளார். இதையெல்லாம் எந்த பதிவராவது இன்னொரு பதிவருக்கு செய்திருந்தால்?????? அதிலும், இஸ்லாமியர்கள் சம்பந்தமே படாத ஒரு விஷயத்தில் இஸ்லாமிய முகமனை துவேஷித்துள்ளார்.... இதில் எதை மன்னிப்பது???? அதிகாரம் இருந்தாலும், அது அவரின் எல்லைக்கு உட்பட்டே அமைய வேண்டும், அதற்குள் அடங்குகிற விஷயங்களுக்குள் மட்டுமே அமைய வேண்டும். இப்படி பொது வெளியில் துப்பக்கூடாது. அப்படி செய்யின், அதை தீமையை எதிர்ப்பது எப்படியோ, அதே வழியிலேயே எதிர்க்க வேண்டும். மறந்து போகக்கூடிய அளவிற்கு சிறு காரியம் அல்ல அது. சகோ. மதுரை மாக்கனுக்கும் சேர்த்தே இந்த பின்னூட்டம்.

நன்றி.

sareeka said...

"பெருமானாரை வணங்கி" இதை நீக்கவும்.அது பிழையான மொழிபெயர்ப்பு. முஸ்லிம்கள் படைத்த ஒரே இறைவனை தவிர யாரையும் வணங்குவதில்லை.வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே என்பது எமது அடிப்படை கொள்கை.அதனால் நாம் வணக்கம் என்ற சொல்லை ஏனையை இடத்தில் பாவிப்பதில் மிகக் கண்டிப்பானவர்கள். நாங்கள் முஹம்மது(அவரிற்கு சாந்தி உண்டாகட்டும்)வை நேசித்து அவர் சொல்படி நடப்பதன் மூலம் அவரை கண்ணியப்படுத்துகிறோம். குறிப்பிட்ட அவ்வசனம் அவரின் கண்ணியத்தை இழிவு படுத்துவதாகவே ஒவ்வொரு முஸ்லிமும் கருதுவர்.மேலும் அது ஒவ்வொரு முஸ்லிமையும் மன வேதனைக்குள்ளாக்கி கோபம் கொள்ள வைக்குமளவிற்கு கொடியது(அறிந்த முஸ்லிமிடம் கேட்டுப் பார்க்கவும்) ஏனெனில் நபி அவர்கள் தன்னை யாரும் வணங்கக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறார்கள். எனவே தயவு செய்து மாற்றிவிடுங்கள். "பெருமானாரை சந்தித்து" என்பதே சரியானது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

sareeka said...

இஸ்லாத்தை நீங்கள் கற்று அதை பிறரிற்கு எத்தி வைப்பது உங்கள் நடுநிலை மனதை படம் பிடித்து காட்டுகிறது.மிக்க மகிழ்ச்சி ஐயா.
வணங்கி என்ற சொல்லை தயவு செய்து நீக்கி விடவும்.

sareeka said...

இஸ்லாமிய விடயங்களை கூட பதிவில் இட்டிருப்பது உங்கள் நடுநிலை மனதை படம் பிடித்து காட்டுகிறது.மிக்க சந்தோஷம் ஐயா!
(என் முன்னைய பின்னூட்டத்திற்கொப்ப) வணங்கி என்ற சொல்லை தயவு செய்து நீக்கி விடுங்கள்