ஸ்ரீபார்த்த சாரதி சுவாமி சபா நாடக விழாவில், இந்த ஆண்டு நல்ல நாடகங்களைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.நாடகங்களை வியாபாரமாக ஆக்காமல், சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்தும் ஒரு சில வலுவான கதைக்கருவில், இதுவும் ஒன்று. சென்னை, மயிலாப்பூர் பைன்-ஆர்ட்ஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற "கறுப்பு ஆடுகள்' நாடகத்திலும், இன்று நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் முறைகேடுகளின் ஒட்டு மொத்த பட்டியலையும், நீண்ட வசனங்களாகக் கேட்டு ரசிக்க வைத்துள்ள, இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிகர், இயங்குனர் "டிவி' ராதா கிருஷ்ணனை, நாடக ரசிகர்கள் நன்கு அறிவர். அரசியல் ஊழல்களை இவர் அப்பட்டமாக வெளிச்சம் போடுவதிலும், நையாண்டி செய்வதிலும் வல்லவர்.அக்கிரம அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் வகையில், சட்டத்தைத் தானே கையிலெடுக்கும் ஒருமித்த கருத்துடைய சமூக ஆர்வலர்களும், நலம் விரும்பிகளும் ஒரு இயக்கமாக இயங்கி, தவறு செய்யும் அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் நியாயவாதிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளதை, இந்த நாடகத்தில் வித்தியாசமாகக் காண முடிகிறது.இந்த நாடகத்தில், பல அக்கிரமங்களைப் புரிந்த அதாவது மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் பல ஊழல்களை செய்யும் அரசியல்வாதி நந்திவர்மனை (ரமேஷ்), ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் சிவா (ஜெயசூர்யா), மனித வெடிகுண்டு மாலையை அணிவித்து, கொன்று விட்டு தப்பித்துச் செல்கிறான். காயத்துடன் தப்பி, டாக்டர் பத்ரிநாத் (கரூர் ரெங்கராஜ்) மருத்துவமனைக்கு வருகிறான்.அங்கு நடக்கும் பல சம்பவங்கள், கதைப்பின்னலாக தரப்பட்டுள்ளன.க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ், எதிர்பாராத முடிவாக வியப்பையும், திருப்தியையும் அளிக்கிறது. டாக்டருடைய உதவியாளர் ரங்கா (ராஜேந்திரன்), "ஊழல் ஒழிப்பு இயக்கம் வன்முறை தவிர்த்து, அகிம்சை வழியில் நடக்க உறுதுணையாக இருப்பேன்' என, இறுதியில் சபதம் ஏற்பதோடு, நாடகம் நிறைவு பெறுகிறது.பளிச்சென்று அரசியல் நையாண்டி வசனங்கள், மேடைக் காட்சிகள், நடிப்பு, இயக்கம் ஆகியவை கன கச்சிதமாக, ரசிக்கும்படி உள்ளன. சிவாவாக ஜெயசூர்யா, நிறைய நீண்ட வசனங்களை தவறின்றி பேசுவதும், டாக்டர் பத்ரிநாத்தாக கரூர் ரெங்கராஜின் அனுபவம்மிக்க நடிப்பும், அப்பாவி பரமானந்தமாக "டிவி' ராதா கிருஷ்ணனின் நடிப்பும், பாராட்டும்படி உள்ளது.
-மாளவிகா
(நன்றி தினமலர் )
4 comments:
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நன்றி Kannan
நாடகம் இன்று (8-10-11) மாலை 6-30க்கு நாரத கான சாபாவில் நடைபெற உள்ளது..பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்க.
"கறுப்பு" ஆடுகள் என்று ஏன் தலைப்பு வைத்தீர்கள். வெள்ளை ஆடுகள் எல்லாம் நல்ல ஆடுகளா ?
Post a Comment