ஏறிய ஏணியை எட்டி உதைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்..
ஆனால்...தனது கட்சிக்கு உயிர் அளித்த கட்சிகளை எட்டி மிதித்ததை இன்று உள்ளாட்சி தேர்தலில் சந்திக்கிறோம்..
ஆம்..1967 ஆம் ஆண்டு..திராவிடக்கட்சியால்..தூக்கி எறியப்பட்ட காங்கிரஸ்..அதற்கு பின் ததிங்கணத்தோம் போட்டும்..தமிழகத்தில் தனியாக ஒன்றும் செய்ய முடியவில்லை.அதுவும் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., ஆரம்பித்ததும் தமிழகத்தில் மாற்றி மாற்றி இரு கட்சிகளே ஆட்சி அமைத்து வருகின்றன.மற்ற கட்சிகள் இவற்றுடன் கூட்டு சேர்ந்து சில இடங்களைப் பெற்று..அவற்றில் மிகச் சில இடங்களில் வென்று..தாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டி வந்தன.
இதற்கு..அகில இந்திய அளவில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல..
ஆனால்...பாலத்தை கடக்கும் யானையின் மீது அமர்ந்த கொசு தன் தயவால்தான் யானையால் பாலம் கடக்க முடிந்தது என்று கூறும் கதையைப் போல..எங்களது ஆதரவால்தான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் மாற்றி மாற்றி அரசு அமைக்க முடிந்தது என காங்கிரஸ் கூறுவது சிரிப்பையே வர வழைக்கிறது.
அதுவும் அதை ஒரு மத்திய அமைச்சர்,(திராவிடக்கட்சியால் வென்று அமைச்சர் ஆனவர்) கூறுகிறார் என்றால்...!!!!!!
கடலூரில் பேசியுள்ள G.K.வாசன்..'இவ்வளவு ஆண்டுகளாக நமது ஆதரவுடன் மாற்றி மாற்றி ஆட்சி புரிந்த திராவிடக் கட்சிகள் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுள்ளார்.
பாரதியின் ஒரு கவிதையே இச் சமயத்தில் ஞாபகம் வருகிறது
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வா ரடி - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி
நாட்டத்தில் கொள்ளா ரடி - கிளியெ
நாளில் மறப்பா ரடி!
3 comments:
test
அரசியலை பற்றிய அலசலுக்கு நன்றி......
தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நன்றி Kannan
Post a Comment