Monday, October 31, 2011

7 ஆம் அறிவு.. என் பார்வையில்...




மனம் வருந்துகிறது..

தமிழன்..தமிழன்..என்று விட்டால் படம் ஹிட் ஆகிவிடும் என முருகதாஸிற்கு யார் கூறியது.

படத்தின் முதல் 20 நிமிடங்கள்..

ஒரு காலத்தில்..ஒவ்வொரு திரையரங்கிலும்...செய்தித் தொகுப்பு படம் ஆரம்பிக்கும் முன் போட வேண்டும் என்று கட்டாயம் இருந்தது.அந்த காலத்தை நினைவூட்டியது அந்த இருபது நிமிடங்கள்.குரல் கொடுத்தவரும் அதே போல ..'பீகாரில் வெள்ளம்' குரல் கொடுத்தார்.

போதிதர்மனை மன்னன் சைனாவிற்கு அனுப்பினாராம்..அங்கு அவர் அவர்களுக்கு வந்த மர்ம நோயைப் போக்கினாராம்..விரோதிகளிடமிருந்து காப்பாற்றினாராம்..பின் அந்த மக்கள் அவருக்கே விஷம் இட்டு..அவர் அதை அறிந்திருந்தும் உண்டு அங்கேயே இறந்தாராம்..இந்த இடத்தில் தமிழன் இ.வா., ஆகிறான்.

காலங்கள் கடந்து..இப்போது அதே மர்மக்காய்ச்சலை  இங்கு பரப்ப..தமிழ்நாட்டிற்கு (??!!!) வில்லன் வந்தானாம்..ஆண்டவா தலை சுத்துது.ஆமாம் அருங்காட்சியகத்தில் உள்ள போதி தர்மனின் குறிப்பேடு இம் மர்மக்காய்ச்சல் பற்றி ஏதும் சொல்லவில்லையா?மர்மக்காய்ச்சலுக்கு போதியின் பச்சிலை வைத்தியம் மட்டுமே இன்று போதுமா?ஆயிரக்கணக்கான இழப்பை பச்சிலை சரி செய்து விடுமா?


ஆமாம் அரவிந்தன் (சூர்யா) ஏன் சர்க்கஸ் தொழிலாளி ஆக்கினார்.குங்க்ஃபூ ஒரு கலை என்பதால்....அந்த போதி தர்மனின் டிஎன்ஏ 80 விழுக்கட்டுக்குமேல் ஒத்துப்போகும் அரவிந்தனையும் ஒரு கலைனாக சித்தரிக்க வேண்டும் என எண்ணி..அப்படி ஆக்கிவிட்டாரோ..முருகதாஸ்..

திரைக்கதையை ..முதல் இருபது நிமிடம் கழித்து எப்படி அமைக்கலாம் என்பதில் குழப்பமே அவருக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.

போதி குதிரையில் போவதால்  அரவிந்தனை யானையில் போக வைத்தார் போலும்.

சூர்யா..இப்படத்திற்காக உழைத்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள்..கஜினியை விடவா? இன்னும் சொல்லப் போனால் அவருக்கு இதில் அதிக வேலையே இல்லை எனலாம்.

ஸ்ருதி ஹாசன்..பல காட்சிகளில் நன்றாகத் தெரிகிறார்..சில காட்சிகளில்..ஏன் இப்படி?

விஞ்ஞானிகள் கூட்டத்தில் தமிழில் பேசுபவரை சாடுவதை சாடுகிறார் தமிழில்..ஒருவேளை இவர் பேசும் தமிழை அவர்கள் சாடி இருப்பார்களோ என்று தோன்றுகிறது.

பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ்..படத்தி பார்ப்பதை விட வெளியில் கேட்க நன்றாய் இருக்கிறது.

ஆமாம்..அதெப்படி பார்வையாலேயே வில்லன்..போலீஸ் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லவைப்பாராம்..போலீஸ் அதிகாரிகள் மௌனமாய் இருப்பர்களாம்.இதைவிட காவல்துறையைக் கேவலமாய் வேறெந்த படத்திலும் காட்டவில்லை எனலாம்.

அளவிற்கு அதிகமாய்..பார்வையாலேயே..தெருவில் நடக்கும் ஆக்ஸிடெண்ட்கள்...மரணங்கள்...(வழக்கம்போல கதாநாயகனும்,நாயகிக்கும் சில முகக் கீறல்கள் மட்டுமே)

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்...அல்ல அல்ல கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்.

பல இடங்களில் ஒளிப்பதிவு..ஆகா..என சொல்ல வைப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

 கைதட்டல் வரவேண்டும் என்றே மஞ்சள், வீட்டு வாசல் கோலம்.,துரோகம்.என நுழைக்கப்பட்டுள்ள வசனங்கள்.


தமிழன் உணர்ச்சிவசப்படுபவன் தான்...அவனைப் பற்றியும்..தமிழைப் பற்றியும் கூறினால் மகிழ்ச்சியுடன் கைதட்டுவான்..

ஆனால்..வியாபார யுக்தி என்றால்..அதையும் புரிந்துக் கொள்வான்.

மொத்தத்தில்..படம் முடிந்து திரையரங்கு விட்டு வெளியே வருகையில்..தமிழன்..தமிழ் என தலை நிமிர்ந்து வருவான் என இயக்குநர் கூறியுள்ளது போல நடக்கவில்லை.வெளியே வருபவன்..முழம் முழமாய் காதில் சுற்றியுள்ள பூவை கழட்டி எறிந்து விட்டுத்தான் வருகிறான்.

டிஸ்கி-

புரஃபசர் ஆட்டோவில் ஏறியதும் மீட்டர் போடப்படுகிறது..இயக்குநர் எந்த காலத்தில் இருக்கிறார்..ஆட்டோ மீட்டர் போட்டு ஓட்டிய நாளெல்லாம் எப்போதோ ஓடிவிட்டது.

ஆமாம்..இப்படம் தெலுங்கு டப்பிங்கில் தமிழன் என்று வருமிடமெல்லாம் இந்தியன் என்று மாற்றிவிட்டாராமே..உண்மையா..
அப்படியாயின்...தமிழனுக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு அல்ல..தமிழகத்தில் மட்டுமே சிறப்பு என்கிறாரா இயக்குநர்..
இந்த ஒரு செயலே இயக்குநரின் தமிழ் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.



13 comments:

Veluran said...

Naam kodottha kasukku entertainment irukkutha enru mattume enni padatthukku ponal piratchnai illai. Kurai ethu solli blogil podalam enra kannotthil irunthal innum kooda eluthalam.

Veluran said...

Thiruvilayal Nagesh vasanam than namagam varugirathu. Kodukkira kasusukku entertainment iruntal Ok. Padathai parthu yarum vazhakkai muraiyai marrikolla povathu illai.Ituvarai solla vishayam irunthal namakku thirupthi pattal otthukollavo / puranthallavao pogirom.Intha comment podovathu ennudaiyathum systemthil publish aga vendum enpatharkaka mattume.

ramachandran.blogspot.com said...

சூப்பர் பதிவு. நான் மனதில் நினைத்ததை அப்படியே பதிவு
செய்துள்ளீர்கள். அருமையான விமர்சனம்.

vivek.dgl said...

Ungal Paarvai Sariillai..

Tamilan tamilan yendru sonnal, telugu makkal yeepadi padam parpargal.. athanal dhan telgukil indian yendru solli iruppar..

summa vimarsanam yaar vendumanalum...

oru padathai vimarsanam seium mun nam adharku thakudiyana alla yendru therindhu kolla vendum....

Unknown said...

தமிழனை பற்றி ஒரு விஷயம் சொல்கிறார்கள் ,அதை நாமே அவமதித்து ,கிண்டல் செய்தால் வெளி மாநில அன்பர்கள் போதிதர்மன் தகவலை பற்றி என்ன நினைப்பார்கள் ?கொஞ்சம் பாராட்டியும் எழுதலாமே ?

Thenammai Lakshmanan said...

ஹா ஹா ஹா ரசித்துப் படித்த விமர்சனம்..:)

goma said...

அதிகப்படியான எதிர்பார்ப்பு ...ஏமாற்றத்தைத் தருமோ

Henry J said...

naa innu indha film pakala!!!!!!!! main roll shruthi ku thaan nu kelvi paten.. suriya part dummy aakitangalame


`.¸¸♥´¯) ¸.☆´ღ
¸☆´ ¸.♥´´¯`•.¸¸.ღ
(¯`v´¯) .**
`*.¸.*
¸.*`.¸¸ . ✶*¨*. ¸ .✫*¨*.¸¸.✶*¨`*✶
(. . ✫ . . Nice Blog !! Keep it up.. :)
`.¸¸ . ✶*¨*. ¸ .✫*¨*.¸¸.✶l
90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

ஹேமா said...

ம் நல்லது சொன்னீங்க விமர்சனம்.இங்கு விஜய்,ரஜனி படங்கள் தவிர எப்போதாவது சில படங்கள் மட்டுமே ஒரு நாள் மட்டும் சினிமாவில் ஓடும்.தமிழன் சரித்திரமாம்,ஈழப்பிரச்சனை சிலவற்ரையும் பதிவாக்கியிருக்கிறார்களென்று அடுத்தவாரமளவில் தியேட்டரில் ஓடுமென்று அறிவித்திருந்தார்கள்.எப்போதும் நெட்டில் பார்க்கும் நானும் காத்திருந்தேன்.உங்கள் விமர்சனம் என் எதிர்பார்ப்பை சப் என்றாக்கிவிட்டது.நன்றி ஐயா !

பொற்க்கைவேந்தன் said...

Well Said Sir...

Actually, this movie is an Ugly Copy of "Assassin's Creed" video game... A.R. Murugadoss once again proves his stealing ability...

Here are the similarities of 7 Aum Arivu & Assassin's Creed....

1. In 7 Aum Arivu, Bodhidharman, a master of martial arts and medicine of the 6th century - In Assassin's Creed Altair, a master assassin of the 12th century...

2. Aravind, descendant of Bodhidharman - Desmond miles, a direct descendant of Altair...

3. Subha wants Aravind to help her in her research about genetic engineering, explaining to him that Bodhidharman’s skills can be brought back from the 6th century inside Aravind - Desmond is informed about Animus, a machine that can decode his ancestral memory present in his DNA. They say that they need him for a research to find about specific details about Altair’s life...

4. In the end, Bodhidharman’s skills are finally transferred to Aravind and he fights and wins Dong Lee - Over-exposure to the Animus results in a “bleeding” effect that transfers the talents and skills of his ancestor Altair to Desmond...

other than this the thieving swine A.R. Murugadoss has copied some of the scenes from other movies as well...

Eg: 1. In MI:2, the Villain tries to spread Chimera virus in Australia and make people sick and the same time there was one medicine “Bellarophon” which cure virus Chimera and he plan to sell the same to Australia’s pharmaceutical company for million of dollars . Here in 7 Aum Ariu, Chinese officials decides to spread virus in India, and try to control India. Only the slight difference is in 7 Aum Arivu they execute virus successfully but in MI:2 unsuccessful...

2. In Outbreak, the way they shown how virus spread to the people is quite similar in this movie...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை தந்து கருத்துகளை நாகரிகமாக பகிர்ந்துகொண்டமைக்கு அனைவருக்கும் நன்றி

Unknown said...

பதிவு சூப்பர் மாமே............

Unknown said...

தமிழ் தமிழ் சொல்லியே தமிழனே ஏமாற்ற பார்க்கிராங்கே .இந்த படத்திற்கு இவ்வளவு செட்டப்பு,பில்டப்பு தேவையே இல்லை.வியாபாரதந்திரம் ஒரு வித எரிச்சலை தருகிறது.பட ஹிரோயின் சுமார் ரேஞ்ச்தான்.நடிப்பு வரவே மாட்டேங்குது.