1979ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள்..
எனது சௌம்யா நாடகக்குழுவினை ஸ்ரீபார்த்தசாரதி சபா அரங்கில் பிரபல நடிகர் அமரர் எம் கே ராதாஅவர்கள் குத்துவிளக்கினை ஏற்றித் தொடங்கி வைத்தார்.
டிசம்பர் 17 ஆம் நாள் முதல் நாடகம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் ஆர் ஆர் சபா அரங்கில் அரங்கேறியது.
என்னுடன் பணிபுரிந்த நண்பரும் எஸ் வி சேகரின் குழுவில் நடித்து வந்த ஷங்கர் என்பவர் மற்றும் ரங்கராஜன் (ரங்காச்சு-பார்த்தசாரதி சபாவில் இன்றைய கமிட்டி உறுப்பினர்) ,பி எஸ் நாராயணன் (ரிசர்வ் பேங்) , ராமகிருஷ்ணன் (ராம்கி) ஆகியோர் முக்கிய பங்கு ஏற்றனர்.
எங்களின் நண்பர் ஒருவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஒருவிரல் கிருஷ்ணா ராவை அறிமுகப்படுத்த அவரும், கமலா காமேஷும் முதல் நாடகத்தில் நடித்தனர்.காமேஷ்-ராஜாமணி இசை.
ஆமாம்..இதெல்லாம் சரி..கே கே ராமன் ஸ்கிரிப்ட் விஷயத்தில் அதிர்ச்சி அடைந்தோம் என்றீர்களே! அது என்ன ?என்ற வினாவிற்கு பதில் இல்லையே என் கிறீர்களா? சொல்கிறேன்..
தான் ஏற்கனவே ஒரு ஸ்கிரிப்ட் எழுதி அதை சிலமுறைகள் மேடையேற்றியுள்ளதாகவும், அதை மீண்டும் எங்களை மேடையேற்றிடச் சொன்னார்.
முதல்நாடகம்..ஏற்கனவே நடந்தது என சற்று யோசித்தோம்.ஆனால் ஸ்கிரிப்டைப் படித்ததுமே அதுதான் முதல் நாடகம் என தீர்மானித்து விட்டோம்.அவ்வளவு நகைச்சுவை
நாடகத்தின் தலைப்பை "யாரைத்தான் கொல்லுவதோ!" எனப் பெயரிட்டோம்.
பத்திரிகைகள், சபாக்கள் ஆதரவில் அந்நாடகம் 30 முறைகளுக்கு மேல் அரங்கேறியது.
அடுத்த நாடகத்தில் புது எழுத்தாளர் ஒருவரை அறிமுகப்படுத்த எண்ணினோம்..
அது முடிந்ததா..அந்த எழுத்தாளர் யார்? அடுத்த பதிவில்

No comments:
Post a Comment