வேதம் புதிதல்ல வெற்றிக்குப் பிறகு .சௌம்யா குழுவின் 10ஆவது தயாரிப்பாக வந்த நாடகம் "வார்த்தை தவறி விட்டாய்"
கதை, வசனம். இயக்கம் வழக்கம் போல என் பொறுப்பு.
இந்நாடகத்தில் நாடக நடிகை ஷீலா இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.தாய், மகள் என.
மத்தியத் தர குடும்பம் ஷங்கரனுடையது.அவருக்கு டிவியில் ஒலி/ஒளி பரப்பாக இருக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கான பார்வையாளர் பாஸ் கிடைக்கிறது.தன் மனைவியுடன் அதற்கு செல்கிறார்.மனைவி சற்று அழகானவள்..வயது 35க்கு மேல்.ஆனாலும் மிகவும் இளமையாய் தெரிபவள்.இருபது வயதிலேயே ஷங்கரை மணந்தவள்.14வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
ஒரு பிரபல இயக்குநர் ஒருவர் தன் படத்திற்கு சற்று வயது கூடிய கதாநாயகியின் பாத்திரத்திற்கு ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்.அப்போது டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கிறார்.பார்வையாளர்களைக் காட்டிக் கொண்டிருந்த காமிரா ஷங்கரின் மனைவியையும் காட்டுகிறது.அவளைப் பார்த்ததுமே அவளே தன் படத்தின் நாயகி எனத் தீர்மானிக்கிறார்.
மிகவும் தூண்டப்பட்டதால், அவளும் நடிக்க சம்மதிக்கிறாள்.
படம் வெளியாகிறது.ஓகோ என புகழ் பெறுகிறாள்.தமிழ்த் திரையுலகில் அவளது ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது.
இந்நிலையில் பிரபல கதாநாயகன் ஒருவன் அவளை தன் இச்சைக்கு உட்படுத்த எண்ணுகிறான்.அவள் மறுக்கிறாள்.
அதானால் கோபமுற்ற கதாநாயகன் , தனது வில்லத் தனத்தைக் காட்டி அவள் முகத்தில் திராவகத்தைக் கொட்டுகிறான்.அது ஏதேச்சையாக நடந்தது போல சித்தரிக்கப்படுகிறது.
சிகைச்சைக்காக வெளிநாடு சென்ற நடிகை, மீண்டும் பொலிவுடன் திரும்பி வருகிறாள்.திரைப்படத்தில் தான் விட்டுச் சென்ற இடத்தை மீண்டும் நிரப்புகிறாள்.
இதனிடையே, அவளின் மகளைக் காதலிப்பவன், தன் காதலியைக் காணாது தவிக்கின்றான்.காவல்துறைக்கு புகார் அளிக்கின்றான் .
அவன் காதலி என்ன வானாள்? நடிகையின் முகம் மீண்டும் பொலிவினை எப்படிப் பெற்றது ஆகிய விவரங்கள் மீதிக்கதை.
அனைத்து மக்களாலும் இந்நாடகம் பாராட்டுதல்களைப் பெற்றது
நடிகர்களில், குறிப்பாக ஷீலா வின் நடிப்பு, திராவகம் கொட்டப் பட்ட முகம், மற்றும் மகள் பாத்திரம் ஆகிய பாத்திரங்களில் அவள் தூள் கிளப்பினார் என்று சொன்னால் அது மிகையல்ல
மணிபாரதிநடிகையின் கணவனாகவும், நான் திரைப்பட இயக்குநர் ஆகவும் நடித்தோம்.

No comments:
Post a Comment