அடுத்ததாக நான் கிருஷ்ணசாமி அஸ்ஸோசியேட்சிற்காக பொதிகைக்கு எழுதிய நாடகம் "விநாடி முள்"
ஸ்ரீனிவாசன் ஒரு பிரபல நிறுவனத்தில் அதிகாரியாய் இருக்கிறார்.மிகவும் கண்டிப்பான பேர்வழி. அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் அவரைக் கண்டால் மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கு நடுக்கம் தான்.
அவர் அலுவலகம் கிளம்பும்வரை வீட்டில்புயல் அடிக்கும், அவர் வெளியே வந்ததும் புயல் கடந்த பூமியாம் அமைதியாகும் வீடு.
இந்நிலையில், அவர் ஒருநாள் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறார்.
அவர் ஓய்வு..அவர் வாழ்க்கையையே மாற்றிப் போடுகிறது.
வீட்டில் மரியாதையை இழந்ததாக எண்ணுகிறார்.
காலையில் பால் வாங்க அவர்தான் செல்ல வேண்டும்.
காய் வாங்க அவர்தான் செல்ல வேண்டும்
ஈபி கட்ட, சொத்துவரிகட்ட இப்படி பல வேலைகள் அவர் தலையில்.
அத்துடன் இல்லாது பேரனை பள்ளியில் காலையில் விட்டுச் சென்று, மாலையில் அவரே அழைத்து வர வேன்டும்.
இதனால் மனம் உடைந்த ஸ்ரீனிவாசன், ஒரு தன் நண்பரை ஒருவரைப் பார்த்து தன் மனக்குமறலை வெளியிடுகிறார்.
நண்பரும், தன் நிலையும் அப்படித்தான் என்று கூறி...என்ன செய்வது..அதிகாரம் செய்து கொண்டிருந்தோம்..இப்போது அவர்கள் அதிகாரம் என்கிறார்
மனம் நொந்து வீடு திரும்பியவர்.. வீட்டினுள் நுழையும் முன் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் தன்னைப் பற்றி ஏதோ பேசுவதை உணர்ந்து, அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்.
மகன் சொல்கிறான் "பாவம்மா..அப்பா..இத்தனை நாள் ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டார், இன்று எல்லாவற்றிற்கும் அவரை அலைக்கழிக்கிறோம்"
மருமகளும், மாமனாரை வேலை வாங்குவதை எண்ணி வருந்து கிறாள்
அப்போது அவரது மனைவி சொல்கிறாள்.."நாம் வேணும்னு இப்படிச் செய்யல.அன்னிக்கு டாக்டர் ..அப்பாவிற்கு சுகர், பிபி எல்லாம் இருக்கும்.தினம் ஒரு மணிநேரமாவது வாக் போகணும்னு சொல்லல.ஆனா..அதைச் சொன்னா அபப கேட்கமாட்டார்.அதனால இப்படியெல்லாம் வேலை வாங்கினா..அதன் மூலம் கொஞ்சமாவது உடற்பயிற்சி செஞ்ச மாதிரி ஆச்சு இல்லையா? ..நமக்கு அவர் முக்கியம்.நாம் இப்படி செய்யறதால அவருக்கு நம்பமேல கோபம் வந்தா, வரட்டும்..பொறுத்துப்போம்"
இவர்கள் பேச்சினைக் கேட்ட ஸ்ரீனிவாசன்..நம் குடும்பம் நம்மை வெறுக்கவில்லை.நம்ம நலனுக்காகவே வேலை வாங்கிகிறார்கள் என்பதை உணருகிறார்.
அடுத்த நாள் முதல் அவர்கள் சொல்லாத வேலைகளையும் எடுத்துப்போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பிக்கிறார்.
ஸ்ரீனிவாசனாக ஏ ஆர் எஸ் நடிக்க, மனைவியாக விஜயதுர்கா, மகனாக மாப்பிள்ளை கணேஷ் நடித்தனர்

No comments:
Post a Comment