சௌம்யாவின் அடுத்த நாடகம் முந்தைய நாடகமான "காயத்ரி மந்திர"த்தைவிட சிறப்பாக இருக்க வேண்டுமென தீர்மானித்து , கதை விவாதத்தில் ஈடுபட்டோம்.
அச்சமயம், எங்கள் குழுவின் பொருளாளராய் இருந்த (பொருளாளரா..என வியக்கிறீர்களா? ஆம்..பொருளாளர்தான்.ஒவ்வொரு நாடகமும் 100 ஐத்தொடும் நாட்கள் அவை.ஒருவரே தேதி வாங்குவது, ஒத்திகைப் பார்ப்பது.கலைஞர்களுக்கு அறிவிப்பது, சபாவில் பணம் வாங்கி அதைப் பிரித்து அனைவருக்கும் வழங்குவது..என பல வேலைகளை செய்வது கடினம் என்பதால்..ஒவ்வொரு குழுவிற்கும் செயலாளர்,பொருளாளர் இருந்த காலம் அது) கச்சாலீஸ்வரர் கான சபாவினைச் சேர்ந்த டி ராதாகிருஷ்ணன் என்னிடம் வந்து, வெங்கட் ஒரு அருமையான கதை சொன்னார், அதை நாடகமாக்கச் சொல்லலாமா? என்றார்.
வெங்கட் மிகவும் பிசியாக இருப்பவர்.நானும், அவரும் ஒரே வங்கியில் வேலைபுரிந்து வருபவர்கள்.எல்லாவற்றையும் விட நெருங்கிய நண்பர்கள்.ஆகவே அவரிடம் இது பற்றி பேசினேன்.
அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு "குடும்பம் ஒரு சிலம்பம்" என்ற நாடகத்தை எழுதியதுடன் நில்லாது இயக்கவும் செய்தார்.
மணிபாரதி, ராம்கி, சுந்தர் பிரசாத், காவேரி ஆகியோருடன் நானும் முக்கிய வேடத்தில் நடித்தேன்.(நண்பர் விஸ்வதானன் ரமேஷிற்காக ஒரு புகைப்படமும் இணைத்துள்ளேன்)
நாடகம் மாபெரும் வெற்றி.. இந்நாட்கம் போட்டதற்காக நான் மிகவும் பெருமையடைகிறேன்.
அந்த ஆண்டு(1989) மைலாப்பூர் அகடெமி, சிவகாசி ஃபைன் ஆர்ட்ஸ் ஆகியவை இந்நாடகத்தை சிறந்த நாடகமாக தேர்ந்தெடுத்தன.மணிபாரதி, காவேரி ஆகியோருக்கும் நடிப்பிற்கான விருது கிடைத்தது.
இந்நாடகத்தை ,நான் சந்திக்கும் போதெல்லாம் பாராட்டிய ஒரு சபா காரியதரிசி இருந்தார்..அவர்..
கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் செயலர் சுந்தர்ராமன் ஆவார்.அவரை நன்றியுடன் நினைக்கிறேன்.
No comments:
Post a Comment