Thursday, March 26, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(27-3-09)

1.மெதுவாக நடப்பவனை ஆமை வேகத்தில் நடக்கிறான் என்கிறோம்..நத்தை வேகத்தில் நடக்கிறான் என்கிறோம்..உண்மையில் நத்தையின் வேகம் மணிக்கு 5.4 மீட்டர் தூரம். ஆமையின் வேகம் 7.2
மீட்டர் தூரம்..ஆமையுடன் போட்டிப் போட்ட முயலின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்.

2.பசு, பெடை, மந்தி ...இந்த சொற்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது...அது என்ன..சரியான விடை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

3.111/
(1+1+1) = 37
222 /(2+2+2) = 37
333/ (3+3+3) = 37
444/ (4+4+4) = 37
555/ (5+5+5) = 37
666/ (6+6+6) =37
777 /(7+7+7) = 37
888/ (8+8+8) = 37
999 /(9+9+9) = 37

4.வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கையும் வைராக்கியமும் வேண்டும்.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய 'ஹில்லாரி'...வெற்றி அடையும் முன் பலதடவை சென்று எவரெஸ்டில் ஏறப்பார்த்தார்.ஒவ்வொருமுறையும் தோல்விதான்.பின் ஒரு நாள் அந்த மலையைப்பார்த்து சொன்னார் 'நீ பலமுறை என்னை தோல்வியடையச் செய்தாய்.ஆனால் நான் திரும்பி வருவேன்.நிச்சயம் உன்னை நான் தோல்வியடையச் செய்வேன்.ஏனெனில் இஹற்கு மேல் நீ வளர மாட்டாய்..நான் பல விதங்களில் வளர்ந்து மீண்டும் வருவேன்...என்றாராம்.

5. ஒரு சிறு தீப்பொறி பெரும் காட்டை அழித்து விடும்
ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒரு சிறிய செடி வளர முடியாது
பெரிய பாறைன்னு நினைச்சா சிற்பி சிலை செதுக்க முடியாது.

6.ஒரு கவிதை..

பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்

- அ.வெண்ணிலா

7.ஒரு ஜோக்...

அரசியல்வாதி பையன்- அப்பா என்னை 8 ஆவதில் போட்டால்தான் பள்ளிக்குப் போவேன்
அரசியல்வாதி- நீ 7 ஆவது தானே படிக்கிற
அ.பை- அதனால் என்ன...நீ கூடத்தான்..போனதரம் உன் கூட்டணில 6 சீட் வாங்கினா..இப்போ 7க்கு பதிலா 8 கேட்கல..

12 comments:

புருனோ Bruno said...

//.111 (1+1+1) = 37
222 (2+2+2) = 37
333 (3+3+3) = 37
444 (4+4+4) = 37
555 (5+5+5) = 37
666 (6+6+6) =37
777 (7+7+7) = 37
888 (8+8+8) = 37
999 (9+9+9) = 37
//

????

கோவி.கண்ணன் said...

//2.பசு, பெடை, மந்தி ...இந்த சொற்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது...அது என்ன..சரியான விடை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.//

பெண்பால் பெயர்கள்

முரளிகண்ணன் said...

222/ (2+2+2) = 227/6= 37

என அர்த்தம் கொள்ளுங்கள் டாக்டர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// புருனோ Bruno said...
//.111 (1+1+1) = 37
222 (2+2+2) = 37
333 (3+3+3) = 37
444 (4+4+4) = 37
555 (5+5+5) = 37
666 (6+6+6) =37
777 (7+7+7) = 37
888 (8+8+8) = 37
999 (9+9+9) = 37


????////

முரளிகண்ணன் said...
222/ (2+2+2) = 227/6= 37

என அர்த்தம் கொள்ளுங்கள் டாக்டர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி.க்கு தெரியாதது ஏதேனும் உண்டா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

முரளி....டாக்டருக்கு வந்த சந்தேகத்திற்கு பின்னரே...பதிவிலும் சரிபடுத்தி விட்டேன்...நன்றி

நிஜமா நல்லவன் said...

வழக்கம் போல கடைசி ஜோக் சூப்பர்!

நையாண்டி நைனா said...

/*"தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(27-3-09)"*/

ஷ்ஸ்... பேரை கேட்டதும் நாக்கில் எச்சில் ஊருகிறது.

மங்களூர் சிவா said...

/
பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்
/

ஐயோ அப்ப பேத்தியோட நிலமை?????

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

////நையாண்டி நைனா said...
/*"தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(27-3-09)"*/

ஷ்ஸ்... பேரை கேட்டதும் நாக்கில் எச்சில் ஊருகிறது.////

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

////சிவா said...
/
பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்
/

ஐயோ அப்ப பேத்தியோட நிலமை?????////

:-(((