Monday, March 9, 2009

நான் இன்று ஓய்வு பெறுகிறேன்..

இன்றோடு நான் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.கிட்டத்தட்ட 35 வருஷங்கள்...நான் உழைத்திருக்கிறேன்.காலம் எவ்வளவு வேகமாக சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கிறது.

என்னால்...என் வேலையால் பயனடைந்தவர்கள்..இதுநாள் வரை கோடானுகோடி நபர்கள் இருக்கும்.ஆனால் இது நாள்வரை யாரும் என் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்த்ததில்லை.

அலுவலகத்தில்...வேண்டாம்..என்று சொன்னாலும்..பிரிவுபசார விழாவிற்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.நான் பேச வேண்டுமாம்.சாதாரணமாகவே நான் அதிகம் பேசாதவன்.அதிலும் கூட்டத்தில் பேசுவதென்றால்...

மாலை போட்டார்கள்.பொன்னாடை போர்த்தினார்கள்.கையில்..அன்பளிப்பு என்ற பெயரில்...பள..பள..என சரிகைத்தாள் சுற்றிய ஒரு ஸூட்கேஸ் கொடுத்தார்கள்.என்னைத் தெரியாத அதிகாரிகளும்..என் பெயர் என்னவென்று கேட்டுவிட்டு..என்னைப் பாராட்டிப் பேசினார்கள்.

கடைசியாக ஏற்புரையை வழங்கச் சொன்னார்கள்.

நான் எழுந்துக் கொண்டேன்..கை கால்கள் சற்றே நடுங்கின...சரிதான்..இப்போது உளறப்போகிறோம் என நினைத்தேன்.

'வணக்கம் நண்பர்களே! நாம் செய்யும் வேலையில் நமக்கு எத்தனைப் பேரிடம் நமக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது?..எத்தனை ஆயிரம் பேர்களை அவர்கள் லட்சிய ஊர் நோக்கி அழைத்துப் போய் இருப்போம்.ஒரு வாடகைக்கார் ஓட்டுநர் கூட..பயணியை குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டால்...அந்த ஓட்டுநரை பாராட்டுகிறோமே...ஆனால் நம்மை யாராவது அப்படி பாராடியிருப்பார்களா?

அவர்களை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்த நம்மிடம் பயணிகளுக்கு ஒரு உறவு, ஒட்டு, மனிதத்தன்மை இருக்கிறதா?குறித்த நேரத்தில் நாம் அவர்களைக் கொண்டுவந்து சேர்த்தாலும்..இன்று ரயில்
சரியான நேரத்திற்கு வந்து விட்டது என்றுதானே கூறுகிறார்கள்.

நான் இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்..இந்த நெருடல் என் மனதில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.ஒரு விதத்தில் மக்கள் பணி புரியும் நம்மை மக்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள்.ரயில் இஞ்சின் ஓட்டுநரான நான் இதைத்தவிர வேறு என்ன பேச முடியும்?' என்று பேச்சை முடித்ததும் கிடைத்த கை தட்டல்கள்..அனைவரின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியது.

(எங்கேயோ படித்தது)

12 comments:

குடுகுடுப்பை said...

நல்லா இருக்குதுங்கய்யா.ஓட்டுனர்கள் வேலை மிகச்சிரமம்தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

கோவி.கண்ணன் said...

//ன் ஓட்டுநரான நான் இதைத்தவிர வேறு என்ன பேச முடியும்?' என்று பேச்சை முடித்ததும் கிடைத்த கை தட்டல்கள்..அனைவரின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியது.//

இந்த பகிர்வுக்கு நானும் கைத்தட்டுகிறேன்.
:)

நசரேயன் said...

நான் என்னவோ எதோன்னுலா நினைச்சி ஓடியாந்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

புருனோ Bruno said...

பெரும்பாலும் பேரூந்து ஓட்டுனர்களிடம் இறங்கும் போது “நன்றி. அலுங்காமல் ஓட்டினீர்கள்” என்று கூறுவது என் வழக்கம்

தொடர்வண்டி ஓட்டுனரிடம் இது வரை அப்படி கூறியதில்லை தான்.

இனி முயல்கிறேன்

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன்

வங்கியில் பணி புரிவதாக அறிந்தேன். பொதுவாக மாதத்தின் கடைசி வேலை நாள் அன்று தான் ஓய்வு பெற முடியும். தாங்கள் இன்று ஓய்வு பெறுகிறேன் என்ற வுடன் குழம்பி விட்டேன். பிறகுதான் தெரிந்தது - இது தங்கள் ஓய்வினைப் பற்றிய பதிவல்ல என்று

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி புருனோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி cheena

மங்களூர் சிவா said...

ஹா ஹா

மங்களூர் சிவா said...

/
cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன்

வங்கியில் பணி புரிவதாக அறிந்தேன். பொதுவாக மாதத்தின் கடைசி வேலை நாள் அன்று தான் ஓய்வு பெற முடியும். தாங்கள் இன்று ஓய்வு பெறுகிறேன் என்ற வுடன் குழம்பி விட்டேன். பிறகுதான் தெரிந்தது - இது தங்கள் ஓய்வினைப் பற்றிய பதிவல்ல என்று
/

முதலில் நானும் இப்படித்தான் குழம்பினேன்!