Saturday, March 21, 2009

மின்மினுக்கும் பட்டாம்பூச்சியும்...கலைமாமணியும்...


மண்ணில் பறக்கும் வானவில்

வானவில்லிலோ எழே நிறங்கள்.

ஆனால் கணக்கற்ற நிறங்களில் பட்டாம்பூச்சிகள்.

பட்டாம்பூச்சி என்றாலே..நினைவில் வருபவர் ரஜினி..மீனாவிடம்..அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க..அவர் பட்டாம்பூச்சியை கை காட்ட...அதைப் பிடிக்க அதன் பின்னாலேயே ஓடி..வேஷ்டி நழுவியதும் தெரியாமல்...வேடிக்கைப் பார்ப்பவர்களையும் சட்டை செய்யாது..சகதியில் விழுந்து..வெற்றிகரமாக அதைப் பிடிப்பது.

சிறு வயதில்..நானும் பட்டாம்பூச்சியைப் பிடித்து அதை இம்சை படுத்தியதுண்டு.அதன் இரு சிறகுகளையும் சேர்த்துப் பிடித்து வேடிக்கை பார்த்ததுண்டு.பின் ஒரு பக்க சிறகை விட்டுவிட்டு..அது மற்ற ஒன்றால் பட..பட..என அடிப்பதை ரசித்ததுண்டு.இப்போது நினைக்கிறேன்...நான் எப்படிப்பட்ட sadist என்று.

அந்த பட்டாம்பூச்சியை விட்டதும்..கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் நிறத்தை..முகர்ந்து பார்த்து..மகரந்த மணத்தை அனுபவித்ததுண்டு.

பெண்கள் கல்லூரியில்...கல்லூரி விட்டு...பல வண்ண ஆடைகளில்...ஆடியும்..பாடியும் வெளியே வரும்...மாணவிகள்..எனக்கு பட்டாம்பூச்சியை நினைவு படுத்துவர்..Play School பக்கம் போகும் போது..ஆடி..ஓடி..விளையாடும்..மழலைகள் எனக்கு பட்டாம்பூச்சியை நினைவுபடுத்தியதுண்டு.

பட்டாம்பூச்சி விருது எனக்கு அளித்த கோவி அவர்களுக்கு நன்றி.அவர் அதற்கு கூறிய காரணங்களில் ஒன்று..'அவர் எனக்கு மிகவும் வேண்டியவர்'

விவேக்கிற்கு பத்மஸ்ரீ யும்...ஐஷ்வர்யாவிற்கு கலைமாமணியும்..எனக்கு பட்டாம்பூச்சி விருது கிடைத்ததுபோலத்தான் கிடைத்திருக்கும் எனத் தோன்றுகிறது.

http://govikannan.blogspot.com/2009/03/blog-post_19.html">

10 comments:

ஆ.சுதா said...

சரி எப்படியோ விருது வந்து விட்டது
வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//விவேக்கிற்கு பத்மஸ்ரீ யும்...ஐஷ்வர்யாவிற்கு கலைமாமணியும்..எனக்கு பட்டாம்பூச்சி விருது கிடைத்ததுபோலத்தான் கிடைத்திருக்கும் எனத் தோன்றுகிறது.
//
:))

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எதோ கலைஞருக்கு மகனாகப் பிறந்ததால் ஸ்டாலின் அரசியல்வாதியாக ஆகி இருக்கிறார் என்று சொல்வது போல் இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஆ.முத்துராமலிங்கம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எதோ கலைஞருக்கு மகனாகப் பிறந்ததால் ஸ்டாலின் அரசியல்வாதியாக ஆகி இருக்கிறார் என்று சொல்வது போல் இருக்கிறது.//

:-))))

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா.. ரொம்பநாள் கழித்து நம்ம வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்...எப்படி இருக்கீங்க

மங்களூர் சிவா said...

மிக்க நலம். இப்பல்லாம் ஆப்பீஸ்ல மட்டும்தான் நெட் அதனால பதிவுகளை உடனுக்குடன் பார்க்க முடிவதில்லை.

நலமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நலம்.
நன்றி சிவா

நசரேயன் said...

வாழ்த்த வயது இல்லாமல் வணங்குகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்