Saturday, March 28, 2009

எனக்கு பதவி ஆசை இல்லை: அன்புமணி

தனக்கு பதவி ஆசை எதுவும் இல்லை என்று கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எது செய்தாலும் அது நமக்கு நன்மை தருவதாகவும், கட்சியின் வெற்றிக்காகவுமாகவே இருக்கும் என்று கூறினார்.

பா.ம.க.பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசியதாவது:

தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொதுக்குழுக் கூட்டம் இது.நமது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எதை செய்தாலும் அது நமது நன்மைக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும் தான் இருக்கும்.ராமதாஸ் எப்போதும் வெற்றிக்கூட்டணியில்தான் இருப்பார்.இது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரியும்.

கடந்த 5 ஆண்டுகாலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளது.கடந்த 40 ஆண்டுகளில் எந்த சுகாதாரத்துறை அமைச்சரும் செய்யாததை கடந்த 4 ஆண்டுகளில் நான் செய்துக்காட்டியதாக பிரதமரே பாராட்டியுள்ளார்.

கிராமப்புறங்களில் தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உலக நாடுகளும் இதனை பாராட்டியுள்ளன.

நான் எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை.30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுச்சேவைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் எந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ செல்லமாட்டேன் என்று சபதம் எடுத்து அதன்படி நடந்து வருகிறார்.

நான் அவரது வாரிசு, கடந்த முறை எனக்கு பதவி அளித்தபோது கூட வேண்டாம் என்று சொன்னேன்.ஆனால் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் வற்புறுத்தலால்தான் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.அதுவும், கட்சி நிறுவனர் ராமதாஸ் என்னிடம் கூறுகையில், "உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.அதை நன்றாக பயன்படுத்துகிறாயா என்று ஒரு வருடம் பார்ப்பேன். எனக்கு திருப்தியளிக்காவிட்டால் வீட்டுக்கு திரும்பி வந்துவிட வேண்டும்" என்று நிபந்தனை விதித்து தான் எனக்கு அமைச்சர் பதவி தந்தார்.

அவரது கட்டளையின்படி சிறப்பாக பணிபுரிந்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளேன். சுகாதார அமைச்சராக நான் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு தந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு தனிப்பட்ட முறையிலும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)

4 comments:

கோவி.கண்ணன் said...

//கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் வற்புறுத்தலால்தான் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.//

:))))))))

குடுகுடுப்பை said...

we need leaders like him.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
//கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் வற்புறுத்தலால்தான் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.//

:))))))))/////

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
we need leaders like him.//

:(((