Monday, March 2, 2009

பெண்களும்...அந்த மூன்று நாட்களும்...

ஆன்மீக காரியங்கள் செய்யும் போது... வீட்டுவிலக்கு ஆன பெண்கள் கலந்துக் கொள்ளக்கூடாது என்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று ஒரு முறை ஜக்கி வாசுதேவிடம் ஒரு அன்பர் கேட்டார்...அதற்கு ஜக்கி அளித்த பதில்....

'ஆணும்..பெண்ணும்..ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டவர்களின் முட்டாள்தனம் இது..

ஆதிகாலத்தில் உடல் வலுவாக இருந்த காரணத்தால்..ஆணின் ஆதிக்கம் ஓங்கி இருந்தது..ஆனாலும் ..ஒவ்வொரு கணமும் தன் எண்ணத்தை பெண் ஆக்கிரமிப்பதை அவன் கவனித்தான்.

உடல்ரீதியாக பலம் கொண்டவனாக இருந்த போதிலும்...மன ரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைத்தது.கொஞ்சம் விட்டால்..அதிகாரத்தைப் பெண் எடுத்துக் கொண்டுவிடுவாளோ..என்று..அரசர்கள்,மதகுருமார்கள் என அனைவரும் கலங்கினார்கள்.அதனால் பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.அதில் ஒன்றுதான் இந்த மாதவிலக்கும்.

மாதம் ஒருமுறை..பெண் அசுத்தமாகிறாள்..என்று சொல்பவர்கள்..வசதியாக ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.

நீங்கள் உங்கள் அன்னையின் கருவில் இருந்த பத்து மாதங்களும்..அவளுடைய அசுத்தங்கள் வெளியேறவில்லை.அப்படியானால்...அந்த அசுத்தங்கள்தானே நீங்கள்? படிப்படியாக உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.உங்கள் உடலின் ஒவ்வொரு துளி ரத்தமும்,நரம்பும்,தசையும்,எலும்பும்..அந்த அசுத்தத்தால்தானே உருவாயிருக்க முடியும்?

ஒரு பெண்ணை அசுத்தம் என்றால்...அவளிடமிருந்து உருவான நாம்..அவளைக்காட்டிலும் அசுத்தமானவர்கள்.....என்றார்

25 comments:

கோவி.கண்ணன் said...

//நீங்கள் உங்கள் அன்னையின் கருவில் இருந்த பத்து மாதங்களும்..அவளுடைய அசுத்தங்கள் வெளியேறவில்லை.அப்படியானால்...அந்த அசுத்தங்கள்தானே நீங்கள்? படிப்படியாக உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.உங்கள் உடலின் ஒவ்வொரு துளி ரத்தமும்,நரம்பும்,தசையும்,எலும்பும்..அந்த அசுத்தத்தால்தானே உருவாயிருக்க முடியும்?//

நல்ல கருத்து !

நான் கூட இதே பொருளில் கவிதையாக எழுதினேன்

புருனோ Bruno said...

வார்ப்புரு மாற்றம் நன்றாக இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் பதிவு படித்தேன்..நன்றாக இருக்கிறது கோவி..வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...கண்காணிப்பாளர் ஆனதற்கும் நன்றி.(follower..பின்தொடர்பவர் என சொல்லலாமா? அதனால்தான் கண்காணிப்பாளர் என தமிழ்ப்படுத்தினேன்)

மதிபாலா said...

பின் தொடர்பவர் அல்லது வாசகர் என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கண்காணீப்பாளர் என்பது சரிவருமா என்று தெரியவில்லை.

மூட நம்பிக்கைகளின் உச்சம்தான் இந்த மாதவிடாய்க் கொள்கை.

நல்ல கருத்து.

ILA (a) இளா said...

பின்னூட்டங்களில் ')) said... வருகிறது பாருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மதி...நான் சொன்னது மருத்துவர் ஐயா (!?)க்கு மட்டுமே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ILA said...
பின்னூட்டங்களில் ')) said... வருகிறது பாருங்கள்.//


அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை இளா

anbarasan said...

READ THIS ARTICLE .
CLICK

பைபிள் கொடுமை : மாதவிடாய் பெண்களை- தொட்டலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ? .

Ram Ravishankar said...

Flawed logic!!

The fundamental purpose was to keep women away those three days is to give them rest as they lose blood and hence energy. An additional logic to keep women away is to maintain cleanliness/hygiene that there is a potential for infection to that women as well as to others.

Due to these reasons as well as due to th fact that spiritual functions will demand more labor work, women were prohibited to attend during those three days.

It was a well thought out logic by our ancestors, but unfortunately people who cannot bring order with reasoning, brought order with intimidation. Along the way, the logic was lost.

Its unfortunate that much revered (?) persons like Vasudev chose to make this issue a feminist/male-chauvinist rather than enlightening us.

Additionally, these days due to scientific and medical advancements, both issues (energy loss and hygiene) are largely controlled so women could move around and carry on with their daily routine.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்தேன் ராஜ்...வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி Ram Ravishankar

மாதேவி said...

"உடல்ரீதியாக பலம் கொண்டவனாக இருந்த போதிலும்...மன ரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைத்தது." என்பது உண்மையானதே. மூடநம்பிக்கைச் சூழலில் துணிவாக வெளிப்படுத்தியதற்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
"உடல்ரீதியாக பலம் கொண்டவனாக இருந்த போதிலும்...மன ரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைத்தது." என்பது உண்மையானதே. மூடநம்பிக்கைச் சூழலில் துணிவாக வெளிப்படுத்தியதற்கு நன்றி//


வருகைக்கு நன்றி மாதேவி

மணிகண்டன் said...

***
மன ரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைத்தது."
***

ஏன் இந்த மாதிரி பயம் பெண்களுக்கு ஆண்கள் கிட்ட வரல ?

மணிகண்டன் said...

வாசுதேவ் சார் எதுக்காக அவர் ஆசிரமத்துல சேரும் மக்களுக்கு celibacy preach பண்றாரு ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
***
மன ரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைத்தது."
***

ஏன் இந்த மாதிரி பயம் பெண்களுக்கு ஆண்கள் கிட்ட வரல ?//

answer- //மாதேவி said...
"உடல்ரீதியாக பலம் கொண்டவனாக இருந்த போதிலும்...மன ரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைத்தது." என்பது உண்மையானதே//

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
வாசுதேவ் சார் எதுக்காக அவர் ஆசிரமத்துல சேரும் மக்களுக்கு celibacy preach பண்றாரு ?//

உங்க கேள்வி அவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

ஹேமா said...

மனம் பக்குவப்பட்ட நல்ல
சிந்தனை அறிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

*இயற்கை ராஜி* said...

ithanaal antha kaala penkalukku kidaitha oivu ippothu kidaikkiratha?..(in those very weak days)..I think that was advantageous to ladies...

புருனோ Bruno said...

//அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை இளா//

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Iyarkai

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி doctor